Header Ads



அல்லாஹ் மீது சத்தியமாக, நான் அழிவுச் சத்தியம் செய்வதற்கு தயார் - ஹுனைஸ் பாருக்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிப்பதற்கும், அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்காகவும் தான் மேற்கொண்ட தீர்மானத்திற்காக எவரிடமிருந்தும் ஒரு சதம் பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் 28-11-2014 குறிப்பிட்ட ஹுனைஸ் பாருக் எம்.பி. அவ்வாறு தான் பணம் பெற்றுக்கொண்டதை எவரேனும் நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் சவால் விடுத்தார்.

அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிட்டதாவது,

நான் பணம் பெற்றேன் எனக் கூறுபவர்களிடம் நான் சொல்கிறேன், என்னிடம் பணம் இல்லை. யாரிடமாவது கடனுக்கு பணம் பெற்று, அவர்களுடன் மக்காவுக்கு சென்று, மஸ்ஜித்துல் ஹரத்தில் நின்றபடி நான் சத்தியம் செய்வதற்கு தயாராகவுள்ளேன். ஆம், நான் கட்சி மாறுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை. பணம் பெற்றதாக கூறுபவர்களிடம் நான் கேட்கிறேன் என்னுடன் அழிவுச் சத்தியம் செய்வதற்கு தயாரா..?

அல்லாஹ் மீது சத்தியமாக நான் அழிவுச் சத்தியம் செய்வதற்கு தயாராகவுள்ளேன். இந்த சத்தியத்தை செய்வதற்கு என்னுடன் மக்காவுக்கு வருவதற்கு தயாரற்றவர்கள் எவரேனும் இருப்பின் இலங்கையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இந்த அழிவுச் சத்தியத்தில் ஈடுபட நான் தயார். என்னுமீது பொய் குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் இந்த அழிவுச் சத்தியத்திற்கு தயாரா எனவும் அவர் கேள்வியெழுப்பியதுடன், இலங்கை முஸ்லிம்களின் ஒத்துமொத்த நலனுக்காகவே தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மைத்திபாலாவை ஆதரிப்பது என்ற திர்மானத்தை மேற்கொண்டதகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

1 comment:

  1. ஏற்கனவே அதிருப்தியுடன் தானே அரசாங்கத்தில் ஒட்டியிருந்தீர் யார் வென்றாலும் தோற்றாலும் சுயமாக சிந்தித்து முடிவேடுக்கக்கூடிய நிலைப்பாடு இருந்தால் சரிதான், மக்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவாகத்தான் பேசுகின்றார்கள். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்ல. மகிந்த வென்றாலும் மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை. அந்த வகையில் மக்கள் உமது மாற்றத்தை கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.