Header Ads



ஷரீஆ என்றால் நஞ்சு போல் பார்க்கும்...!

(நுஸ்ரத் நவ்பல்)

மாபாதகங்களை ஒழித்துக்கட்டவென சிலர் விரும்பினர். தர்ம துவீபம் ஒன்றை நிறுவுவதே அதற்குரிய வழியெனக் கண்டனர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்த நாட்டு பௌத்த துறவிகள் ஒன்றும் செய்யவில்லை. எனவே நாம் நாட்டையும் ஆட்சியாளரையும் திருத்தப் போகிறோம் என சிலர் கிளம்பினர். அதுவும் பலிக்கவில்லை. மூத்த துறவிகள் தம் பாட்டில் போதனை செய்வதோடு அகிம்சாவழியே நம் வழி என்றிருந்தனர். ஆனால் காவியுடையணிந்த இளந்தலையினர் போதனைகளைக் குறை கூறி தர்ம ஆட்சிக்கு வழிகோலப்போவதாக சூழுறைத்தனர். சகல சமய வணக்கஸ்தலங்களிலும் அன்றாட தர்ம போதனைகள் செய்யப்படுகின்றன. தேசிய வானொலி உட்பட பல ஊடகங்களிலும் அத்தகைய போதனைகளுக்கு இடமளித்துள்ளன. 

ஆனால் சிலர் பகற்கனவில் மிதக்கின்றனர். மற்றவனின் மெழுகுவர்த்தியை அணைத்தால் தான் வெளிச்சம் குறைவான எனது விளக்கு நன்றாக எறிகிறது என்று கூக்குரல் இடுபவன் போல் சிலர் இருக்கின்றனர். தான் நம்பியுள்ள சமயத்தையாவது போதிக்கத் தெரியாது ஏதோ குறைபாடுள்ளவன்போல் உலறுவது ஆச்சரியமாக உள்ளது. 

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், சமய நிந்தனை இதைவிடப் பெரியது என்ன இருக்கிறது. இத்தோடு கஷினோக்கள், மஸாஜ் சென்டர், விபச்சார விடுதிகள், கிளப்புகள் என்பன பெறுகியுள்ளன. அந்த தர்மம் பேசும் புண்ணியவான்களுக்கு இவை தெண்படவில்iயா? இந்த பாவச் செயல்களை சொல்லித் திருத்தும் தைரியமும் திறமையும் இல்லாத சிலர் சமய நிந்தனைகளில் ஈடபடுவதன் மூலம் தாம் பௌத்த தர்மத்துக்கு பெரும் சேவை செய்வதாகக் காட்டப் பார்க்கின்றனர். 

கிறிஸ்தவ கோயில்களை, பள்ளிவாசல்களை தாக்குவதனால் பெறும் பணியாற்றியதாகக் கருதிக் கொள்கின்றனர். முஸ்லிம் சமூகம் பெருகிக் கொண்டிருப்பதாக கூக்குரலிடுபவர்கள் ஏன் கருக்கலைப்பைப் பற்றி பேசுகின்றார்களில்லை. பெண்களைக் கேவலப்படுத்தும் வண்ணம் விளம்பரங்களும் அழகுராணிப் போட்டிகளும் நடத்துவதைப் பற்றி கொஞ்சமேனும் பேசாத தர்மவாதிகள் ஒழுக்கமாக இருக்கும் பெண்ணை ஏன் சந்திக்கு இழுக்கின்றனர். உண்மையான தர்ம சிந்தனை இருக்குமாயின் இம்மாபாதகங்களை பற்றியல்லவா பார்க்க வேண்டும்.

பத்திரிகையாளர் மாநாடுகளைக் கூட்டி அவர்கள் விடும் சவால்கள் அவர்களையே கேவலப்படுத்தும் என்பதை அவர்கள் விளங்க வேண்டும். ஷரீஆ என்றால் நஞ்சு போல் பார்க்கும், இஞ்சு தின்ற குரங்கு போல் கத்தும் இவர்கள், அதன் பயன் பாட்டை தேடிப்பார்க்க வேண்டும். கொலைத் தண்டனை ஷரீஆ சட்டமல்லவா? போதைக்குரிய தண்டனையும் அவ்வாரல்லவா? இவைகளையும் நாட்டிலிருந்து அப்புறப்படுத்தக் கோரும் இந்த தர்மவாதிகள் பாவம்! சரியான வழிகாணாமல் இவர்கள் தடுமாறுவதைப் பார்த்து அணுதாபப்பட வேண்டும். இந்த நாட்டிலே உள்ள தனியார் சட்டங்களைப் பற்றி ஒன்றுமே விளங்காத, தன்னை கலாநிதியாகக் கூறும் ஒருவர் ஷரீஆ சட்டம் இங்கு அமுல்படுத்தப்படுவதாக கூக்குரலிடுகிறார். இந்த நாடடிலே கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவைகள் இருந்துவருகின்றன என்பதை அந்தக் கலாநிதி தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. 

இடையும் தொடையும் நெஞ்சும் தெரிய பெண்களை வெளிக் கிளம்பச் செய்து அவர்களோடு பேட்டிகளும் வழங்கி காதல் கதைப் பற்றியும் பேசும் அளவு நடந்து கொள்வது  தர்மதுவீபத்தை அடைந்து கொள்ள நட்பாசை கோண்டோரின் எண்ணமாகும். பெரும்பாலான பௌத்த மக்கள் இந்த சேனையின் முயற்சிக்கு எதிர்ப்பைக் காட்ட முடியாது தடுப்பது அத்துறவிகள் அணிந்துள்ள காவியுடையேயாகும். 

2 comments:

  1. Well written. Linguistic & interesting.

    ReplyDelete
  2. இவ் ஆக்கத்தை எழுதிய சகோதரருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக... உண்மையிலும் உண்மை.... சிறந்த ஆறுதலாகவும் இருக்கிறது...

    ReplyDelete

Powered by Blogger.