Header Ads



இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அழைப்பு, ஏற்பாட்டாளர்களுக்கு இப்படி ஒர் எச்சரிக்கை..!

(நஜீப் பின் கபூர்)

எப்போதும் முஸ்லிம்கள் தமது கண்டனங்களை, எதிர்ப்புணர்வுகளைத் தெரிவிப்பதற்காக வெள்ளிக் கிழமை ஜூம்மாத் தொழுகைக்குப் பின்னே சில நிமிடங்களைப் பாவிப்பது வழக்கமாகவும் சம்பிரதாயமாகவும் வைத்திருக்கின்றோம். இந்த வகையில் இன்று நாட்டில் பரவலாக அலுத்கம ,பேருவளை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடபெற வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றவர்களுக்கு அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்களுக்கு நாம் ஒரு எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது வன் செயலென்றை ஆரம்பிப்தற்காக சில விசமிகள் இதில் ஊடுருவி பெரும்பான்மை சமூகத்தின் ஓரிரு கடைகளுக்கு அவர்களே கல்லெறிந்து ஏதாவது அட்டகாசங்களைப் புரிந்து அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது வன்முறையை ஆரம்பிக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. 

பிரதமர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கல் லெறிந்ததால்தான் அலுத்தகம ,பேருவளைச் சம்பவங்கள் நடந்தது என்று கூறி வருகின்றார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கெஹெல்லியாவும் இதைத்தான் சொல்லி வருகின்றார். பொது பல சேனாவும் இந்தக் குற்றச்சாட்டைத்தான் சொல்லி வருகின்றது. அவர்கள் எல்லோரும் ஒன்றையே பேசுகின்றார்கள்.

எனவே இப்படி இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏதும் நடக்குமாயின் அதில் விசமிகள் புகுந்து வன்முறையை துவங்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதனை மீண்டும் முஸ்லிம்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் நாம் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். எனவே அவர்கள் கூறுவது போல் கல்லெறிந்து துப்பாக்கிச் சுடுவாங்கின்ற சமூகமாவும் சொத்துக்களை அழித்துக் கொள்கின்ற சமூகமாகவும் நாம் இருந்து விடுவோம். 

மேலும் அலுத்கம, பேருவளையில் அத்தனை அட்டகாசம் பண்ணியும் கண்ணீர் புகையையோ, தடியடிப் பிரயோகமோ செய்யாத பாதுகாப்புத் தரப்பு முஸ்லிம்கள் விடயத்தை சட்டத்தை ஒரு படி மேல் நின்று இந்தக் காரியங்களைப் பார்க்கும். இதுதான் கடந்த கால வரலாறு என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே என்ன காரியம் பார்த்தலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு நாம் இந்த நாட்டு முஸ்லிம்களிடத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.

1 comment:

  1. சரியாக சொன்னிர்கள் ஐயா. இந்த எதிர்ப்பின் பொது யாரவது வன்முறையை கையாண்டால் , அவன் முஸ்லிம் ஆக இருந்தாலும், நாமே அவனை போலீசில் பிடித்து குடுக்க வேண்டும். எதிர்ப்பு காட்டுவோம். வன்முறையை விடுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.