ஹசன் அலியிடம் கசீனோ பற்றிய சில கேள்விகள்...!
(நஜீப் பின் கபூர்)
அண்மையில் ஆளும் தரப்பால் கொண்டுவரப்பட்ட முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் சட்ட மூலம் கசீனோ என்பதனை இந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த பௌத்த அமைப்புக்களும் இனங் கண்டு அதற்கு எதிராக ஓரணியில் நின்று நேரடியாகவே ஜனாதிபதியிடத்தில் தமது கண்டன அறிக்கைகளை எழுத்து மூலம் கொடுத்திருந்தனர். ஆனால் நமது ஜம்மியத்துல் உலமா இது விடயத்தில் என்ன ராஜதந்திரம் பார்த்தது என்றும் சமூகத்திற்கு அறிந்து கொள்ள இன்றுவரை முடியவில்லை.
மு.கா. பார்வையில் வருவது கசீனோவா என்ற சந்தேகம் நிலவுவதான் காரணமாக அவர்கள் எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்தார்களாம்.?
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் விளக்கக் கூட்டத்தில் இது தொடர்பான கேள்விகள் பிரதி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட போது, ஏற்கெனவே ஜேம்ஸ் பேக்கருடன் கசீனோ தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு இரத்துச் செய்யப்பட்ட பின்னர்தானா இந்த மசோதாவைக் ஆளும் தரப்புக் கொண்டு வருகின்றது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதி அமைச்சர் இல்லை அந்த உடன்பாடு இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என்று அவர் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில்தான் இந்த புதிய மசோத கொண்டு வரப்பட்டது,
எதிரணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது ஆளும் தரப்பில் இருக்கின்ற கடும் போக்கு ஹெல உறுமய அதுருலியே தேரரே இதற்கெதிரக குரல் கொடுத்தது மட்டுமல்லது துணிச்சலுடன் எதிர்த்தும் வாக்களித்திருக்கின்றார். எனவே மு.கா. செயலாளர் வாதப்படி ஆளும் தரப்பிலுள்ளவர்கள் எதிர்த்து வாக்களிக்கத் தேவையில்லை. கசீனோ விடயத்தில் தள்ளி நின்று கொண்டால் போதும் என்றதானே முஸ்லிம் சமூகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முழு நாடே கசீனோவைத்தான் அரசு புதிய சட்டமூலத்தில் மறைத்து கொண்டு வருகின்றது என்று உறுதியகச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. கசீனோ என்று சந்தேகம் ஏற்பட்டாலே சமூகத்தின் சமயதின் பெயரில் கட்சி நடாத்துகின்ற நீங்கள் அதற்கெதிராக போர்க் கொடியைத் முதலில் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும் என்பது தானே இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் உங்களிடம் எதிர்பார்ப்பது. ஆனால் நீங்களோ எதிர்த்து வாக்களிக்காதது தவறில்லை என்று வாதிட முனைகின்றீர்கள்.
மஹிந்த ராஜபக்சா அதிகாரத்தில் இருக்கும் வரை பதவி பட்டங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் சொல்வது நியாயம் என்று முன்வைப்பீர்கள் ஆனால் நீண்ட காலத்திற்கு இந்த பயணம் சாத்தியப்படாது என்பதனை சமூகம் உங்களுக்க கற்றுத் தரும் நாள் விரைவில்வரும்.
அடுத்து சுயநலம் கலக்காத அரசியல் செய்ய முடியாது என்று உங்கள் தலைவர் பகிரங்கமாகப்பேசி அதற்கான வீதத்தைக்கூட ஊடகங்கள் முன் கணக்குப்போட்டுக் காட்டி இருந்தார். எனவே உங்கள் பார்வையில் இஸ்லாம் சொல்லுகின்ற பொது நல அரசியல் சாத்தியம் இல்லை என்றுதான் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு உங்கள் தலைவரும் கட்சியும் சொல்லுகின்ற செய்தி. ஆனால் ஜேவிபியோ இஸ்லாம் கூறுகின்ற அரசியல் நடைமுறைச் சாத்தியம் என்ற நிலையில் அதனை அமுல் படுத்தி வருகின்றது. எனவே முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறுகின்ற அரசியல் சாத்தியம் இல்லை என்று பகிரங்கமாகப் பேசுகின்ற உங்கள் பின்னால் வருவதா? அல்லது இஸ்லாம் கூறுகின்ற அரசியல் நடைமுறைச் சாத்தியம் என்று சாதித்துக் காட்டுகின்ற ஜேவியின் பின்னால் போவதா என்றும் எதிர் காலத்தில் முடிவுகளை எடுக்கக்கூடும்.
மேலும் இந்த கசீனோ விவகாரத்தில் இந்த நாட்டு ஜேம்ஸ் பாக்கிரின் உள்ளூர் பங்காளி தான் கசீனோவுக்கான அனுமதிப் பத்திரம் கைவசம் வைத்திருப்பதாகவும் அதனை அந்த ஹோட்டல் கட்டிடத் தொகுதியில் திறப்பதற்கு உபயோகிக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் பகிரங்கமாகச் சொல்லி இருந்தார். இந்த விடயங்கள் பாமர மக்கள் அறிந்திருக்காவிட்டாலும் பாராளுமன்றத்தில் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு இது விடயத்தில் அதிகமாகத் தெரிந்திருக்கத்தானே வேண்டும். அல்லது இதுபற்றி கூடுதலாக நீங்கள் அறிந்து கொள்ள முயற்சித்திருக்கத்தானே வேண்டும் இப்படி இருக்கின்றது போது பட்டும் படாமலும் அரசை நொந்து கொள்ளாமல் நீங்கள் காய்களை நகர்த்துவதை முஸ்லிம் சமூகம் எவ்வளவு நாட்களுக்கு இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
நீங்கள் சந்தேகிப்தாகச் சொல்லுகின்ற விடயத்தை பௌத்த குருமாரே ஒருமித்த குரலில் கசீனே; என்று அடித்துக் கூறுகின்றார்கள். ஆனால் இன்னும் உங்களுக்குச் சந்தேகமாக இருக்கின்றது. கசீனோ என்ற பதத்தை உள்ளடக்காமாலே இந்த நாட்டில் கசீனோவை அறிமுகப்டுத்துவதற்கு சட்டத்தில் இடமிருப்பதாக சட்ட வல்லுணர்கள் கருத்துக் கூறிவருகின்றார்கள்.
கசீனோ இந்தக் கட்டடித் தொகுதியில் இருக்க மாட்டாது என்று ஒரு திருத்தத்தை சேர்த்துக் கொள்ளுமாறு ஜேவிபி இது விடயத்தில் கேட்டபோது ஆளும் தரப்பில் அதற்கு அனுமதி வழங்கவிலையே? குறைந்தது இது போன்ற ஒரு ஆக்கபூர்வமான உறுதி மொழியை பெற்றுக் கொள்ள குறைந்தது நீங்கள் இந்த விடயத்தில் ஜே.வி.யுடன் அணி சேர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கலாமே? ஆளும் தரப்பு இந்தத் திருத்தத்திற்கு அனுமதி வழங்காமை எதனைச் சுட்டிக் காட்டுகின்றது மு.கா. செயலாளர் ஹசன் அலி அவர்களே?

நல்ல கேள்வி நெடுப்பமில்ல.....
ReplyDelete