Header Ads



ஞானசாரர் விடயத்தில் முஸ்லிம்கள், சிங்கள சமூகத்திற்கு நன்றி கூறவேண்டும்


(நஜீப் பின் கபூர்)

பொது பல சேனா, ஞானசாரத் தேரர் என்ற வார்த்தைகள் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது மிகவும் ஜனரஞ்சகமாக நமங்களாக இருந்து வருகின்றது. இந்த நாட்டு சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக குறிப்பாக  முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரமொன்றை இங்கு தோற்றுவிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற வில்லை. இதற்கு முஸ்லிம் சமயப் பெரியார்கள் மற்றும் அரசியல் தலைமைத்தவங்கள் மேற் கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் எந்த வகையிலும் காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதனை இந்த நாட்ட முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையான புத்திஜீவிகளும் சாதாரண சிங்கள மக்களும் ஞான சாரர்தேரர் ஒரு சமயத் தலைவர் என்பதனைவிட அவர் இந்த நாட்டில் ஒரு இரத்தக் களரியையும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மனிதன் என்றுதான் நோக்குகின்றனர். அத்துடன் அவர்கள் இது பற்றி பகிரங்கமாகவும் பேசி தமது சமூகத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் தான் ஞானசாரத்தோர் நோக்கம் இந்நாட்டில் நிறைவு பெறமல் இருக்கின்றது என்பதனை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இது விடயத்தில் அரசின் அணுகுமுறை எந்த வகைளிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதக இல்லை.

சமயத்தின் பெயரால் அமைப்புக்களை வைத்திருப்போரும் சமூகத்தின்பேரால் கட்சி நடத்துகின்றவர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் இருக்கின்றது. மொத்தத்தில் அவர்கள் இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தை கைவிட்டு இருக்கின்றார்கள். ஆளும் தரப்பிற்கு வாக்காளத்து வாங்கி பதவிகளில் ஒட்டிக் கொள்ளவும் உலகம் சுற்றவும் தெரிந்த இவர்களுக்கு பெறுப்பானவர்களிடத்தில் இதுவிடயத்தை உரிய முறையில் எடுத்துக் சென்று தீர்வைப் பெற்றெடுக்க முடியாதிருக்கின்றனர் என்பது இப்போது முஸ்லிம் சமூகத்திற்கு நன்றாகப் புரிந்திருக்கின்றது.

தேர்தல் காலங்களில் வீரம் பேசி முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கின்ற முஸ்லிம் தலைவர்களினால் ஒருபோது இந்த நாட்டு முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்கவோ அது பற்றி பேசவே முதுகொழும்பு கிடையாது. ஞானசாரத் தேரரின் நோக்கங்கள் இன்று வரை நிறைவேறாமல் இருப்பதற்கு புத்திஜீவிகளான பௌத்தர்களே காரணமாக இருந்து வருகின்றார்கள் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவை ஒரு புறமிருக்க ஞானசாரர் விடுத்த விவாத அழைப்பை ஏற்று சிலர் முஸ்லிம் சமூகத்தின் பேரால் அங்குபோய் அவருடன் விவதாம் புரிந்து விளம்பரம் தேடிக் கொள்ள முனைவது தொடர்பாகவும் அறிய முடிகின்றது. இது மிகவும் முட்டால்தனமான  வேலையாகும். ஞானசாரர் பேச்சு நடவடிக்கைகள் விடயத்தில் எவரும் ஆஜராகமல் இருப்து தொடர்பாக கீழ் மட்ட மக்கள் மத்தில் ஒரு வேதனை இருக்கின்றது என்பது பரவலாகத் தெரிகின்றது.

இது விடயத்தில் சோமதேரர்-அஸ்ரஃப் விவதம் தொடர்பாக மக்கள் மத்தியில் பரவலாக இந்த சந்தர்ப்பத்தில் பேசபப்டுகின்றது. இன்று அஸ்ரஃப் இல்லை. ஆனால் அன்று அஸரஃப் சந்தித்த சோம தேரர் ஒரு புத்திஜீவி நாகரிகமான மனிதர்.  பௌத்தர்கள் அல்லாதவர்கள் கூட குறிப்பாக முஸ்லிம்கள் கூட அவரது பேதனைகளை தங்களது வீடுகளில் கேட்டும் பார்த்தும் வந்திருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் நாகரிகமாக அந்த விவதத்தை முன்னெடுத்தார்கள்.

ஞானசாரத் தேரர் ஒரு புத்திஜீவியுமல்ல பக்குவப்பட்ட மனிதரும் அல்ல நியாயம் அநியாயம் என்பது அவரிடத்தில் எடுபடாது. நிச்சயம் விவதத்தின்போது அவர் தனது வன்முறையைக் காட்சிப்படுத்துவார். அவர் சொல்வதற்கு மாற்றமாக எதாவது வார்த்தைகளை எதிர்வாதம் புரிகின்றவர் பேசினால் உன் பல்லை உடைப்பேன் சீலையை அவிழ்து எடுப்பேன் என்று தான் அவர் பேசுவார். எனவே அவருடன் விவாதம் பண்ணி விளம்பாரம் தேட முஸ்லிம் சமூகத்தின்பேரால் எவராவது அஜரானால் அவரையும் அந்தத் தரத்தில்தான் நாடு பார்க்கும். ஞானசாரத் தேரதர் முஸ்லிம் தலைவர்களுக்கு மட்டுமல்ல சிங்களத் தலைவர்களுக்கும்தான் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைத்திருக்கின்றார். எந்த சிங்களத் தலைவர்களும் அவரது அழைப்பு தொடர்பாக கண்டு கொள்ள வில்லை-கரிசனை காட்டவில்லை.அப்படி இருக்க முஸ்லிம்கள் தரப்பில் சிலர் விவாதம் புரிய முண்டியடித்துக் கொண்டு நிற்பதாகத் தெரிகின்றது ஞானசாரர்  வார்த்தைகளில்லேயே இதனைச் செல்வதானால் நான் சிங்கள அகராதியில் உள்ள வார்த்தைகளைத்தான் பேசுகின்றேன் புதிதாக எதையும் பேசவில்iயே நான் அப்படித்தான் பேசிப் பழக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொல்லகின்ற மனிதன் அப்படி ஒரு விவாதம் நடந்தால் எப்படி வார்த்தைகளைப் பிரயோக்கிப்பார்  என்பதனை அவரின் இந்தக் கேள்வியில் இருந்து புரிந்து கொள் முடியும்.

முஸ்லிம் சமூகம் ஞானசார விடயத்தில் தேவைக்கு அதிகமான  விளம்பரத்தை முக்கியத்தவத்தைக் கொடுத்து அவரை பெரிய மனிதனாக்கி இருக்கின்றது. ஆனால் அவர் ஒரு புத்திஜீவியோ பக்குவப்பட்ட மனிதனே அல்ல முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்சிசி நிரலுக்குச் செயலாற்றி அவரது பிழைப்பை அவர் நடாத்தி  வருகின்றார்.

முஸ்லிம்களிடத்தில் ஆயுதக் குழுகக்ள் இருக்கின்றது என்று ஞானசாரரிடத்தில் போட்டுக் கொடுத்தவர்களும் முஸ்லிம் அரசியல்வதிகள்தான் என்ற உண்மை முஸ்லிம்களில் எந்தனை பேருக்குத் தெரியும். இல்லாத ஒன்றை உண்டு என்று உருவம் கொடுத்தவர்கள் இப்போது அதுபற்றி காதைக்காமல் இருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகம் முதலில் அந்தத் துரோகிகளிடத்தில் கேள்விகளைக் கேட்கவேண்டி இருக்கின்றதது.  

3 comments:

  1. You are welcome. Good advice to All the muslims

    ReplyDelete
  2. Bro,.
    / முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரமொன்றை இங்கு தோற்றுவிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற வில்லை.இதற்கு முஸ்லிம் சமயப் பெரியார்கள் மற்றும் அரசியல் தலைமைத்தவங்கள் மேற் கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகள் எந்த வகையிலும் காரணமாக அமைந்திருக்கவில்லை//
    இந்த கருத்து முற்றிலும் தவறு. அரசியல் தலைமைகளுடனும் அரசாங்கத்துடனும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தீர்வை கேட்ட உலமா சபை... மக்களை அமைதியாக்கி விவாதங்களுக்கு போக வேண்டாம். சகோதரத்துவத்தோடு பழகுங்கள். என அவ்வப்போது சரியான வழிகாட்டலை செய்தது என்பதனை மறுக்க முடியாது. மீறி நாங்களும் ஏட்டிக்கு போட்டியாக போயிருப்பின் எத்தனை கலவரங்களை சந்தித்திருப்போமோ தெரியாது.

    ReplyDelete
  3. So called debate is the most wanted by talented people where our ALQur'anic Principles can be presented in order to remove the misconceptions!! Your comments on the debate is NOT sensible!

    ReplyDelete

Powered by Blogger.