Header Ads



அல்லாஹ் எவ்வாறெல்லாம் உணவளிக்கின்றான், என்று ஒரு கணம் சிந்தியுங்கள் (வீடியோ)

பறக்க முடியாமல் தவிக்கும் தாய்ப், பறவையை மறக்காத பிள்ளைகள்! 

பறக்க முடியாமல் தவிக்கும் தனது தாய்ப் பறவைக்கு அதன் பிள்ளைகள் உணவைக் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதத்தை பாருங்கள். ஆனால் ஆறரிவு கொடுக்கப்பட்ட மனிதன் தன்னை வளர்த்து ஆளாக்கியதன் பின் தனது பெற்றோர்களையே மறந்து விடுகின்றானே என்று எண்ணும்போது இவன் சிறந்தவனா? அல்லது இந்தப் பறவைகள் சிறந்ததா? 

அல்லாஹ் எவ்வாறெல்லாம் தனது ரஹ்மத்தின் மூலம் உணவளிக்கின்றான் என்று ஒரு கணம் சிந்தியுங்கள்:

وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ 
"வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்". (அந்நம்ல் 27: 64).
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ وَإِنَّا أَوْ إِيَّاكُمْ لَعَلَى هُدًى أَوْ فِي ضَلَالٍ مُبِينٍ 
"வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?' என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக,  நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்' என்றும் கூறும்". (ஸபஃ 34: 24).

يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ 

"மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள், வானத்திலும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை, அவ்வாறு இருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்". (பாஃதிர் 35: 3).

عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه و سلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا 

"அல்லாஹ்வின் மீது நீங்கள் உரிய முறையில் தவக்குல் வைப்பீர்கள் என்றால், பறவைகளுக்கு உணவளிப்பதுபோல் அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான் அவைகள் காலையில் தனது கூண்டுகளிலிருந்து பசியுடன் வெளியேறுகின்றன, மாலையில் வயிறு நிறம்பிய நலையில் கூண்டுகளை அடைகின்றன". என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், திர்மிதி, இப்னு மாஜாஹ், முஸ்னத் அஹ்மத்).

லிங்கை பாருங்கள் http://www.youtube.com/watch?v=U1SN0X-p0vQ&feature=youtu.be

அன்புடன் 
இஸ்லாமிய அழைப்பாள்
அஸ்ஹர் ஸீலானி

No comments

Powered by Blogger.