மேயர் பதவி...!
(முனையூர் ஏ. ஸமட்)
ஊரில் மேயர் பதவிக்காய்
கட்சிக்குள் சண்டையாம்.
கடைகளுக்குள்ளும் சண்டையாம்
அலைகள் பேசிக்கொள்வதாய்
கரையில் பேசிக் கொண்டார்கள்
என் ஊரின்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்கச் சென்றவேளை...
வாதம்
பிரதேச வாதம் பிடித்தவர்கள்
பேய்பிடித்து அழைகிறார்களாம்
ஏனென்றேன்...
மேயர் பதவி பறி போனால்
பத்தோடு பதினொன்றும் போய்விடுமே - என்று
கிலி கொண்டதனால் என்றார்கள்
என் பள்ளித்
தோழர்களைச்சந்தித்தவேளை....
பள்ளியில் போர்க்காலச் சத்தம்
வணக்கங்களின் ஒலிதானென
என் வழியே
நம்பி நடத்த பொழுது
இல்லை - அது
தங்கள் ஊராரின்
பதவியைப் பறித்துக் கொடுக்கும்
கட்சித் தலைவரை மாற்றக் கூவும்
ஊர்வாதிகளின்
வாய்ச்சமர் முழக்கம்
என்றார்கள்
வழியில் வந்தவர்கள்
அந்தி மாலைப் பொழுது
ஊரார்
எல்லோரினரதும் கரங்களில்
துண்டுப்பிரசுரம்
என்னவென்றவேளை.
ஊர்ப்பற்றாளர்களால்
அடுத்த ஊரார் பற்றி
அசிங்கமாய் எழுதிய அலங்கோலமாம்
சின்னத்தனத்தின் வெளிப்பாடாம்
அது சில்லரைத் தனமும்தானாம்
என்றார்கள்
பெரியார்கள்.
எதற்காக இத்தனையும்
கல்முனை
என்ன
இந்தியாவின்
தெலுங்கானாவா
அல்ல
ஆபிரிக்காவின்
சூடானா
ஆளுக்கொரு
அதிகார எல்லை கேட்பதற்கு
நாம்
இருப்பதே
நாலு ஊருக்குள்
அதற்குள்
யார்
யாரை ஆளுவது
யாரும்
யாரையும்
ஆளுவதுமில்லை
ஆளப் பிறப்பதுமில்லை -அது
வாதிகள்
பிரதேச வாதிகளின்
ஆளுமையின் பலவீனமே
அகற்றுவோம் - அதனை
வாழ்ந்திடுவோம்
பிரதேச வாதத்துக்கு
அப்பால்
மனிதத்தோடு சகோதர முஸ்லிம்களாய்

பேசாம வரப்போற பி.அமைச்சு ஆசைய காட்டி நீதி அமைச்சர் இந்த GAME'எ முடிக்கலாம்.
ReplyDeleteஇப்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஒரு கதாநாயகன் இருக்கிறார் அவர் மிகவும் சந்தோசமாக பிரதி அமைச்சர் ஆக வரலாமென்ற கனவுதான். இந்தக்கனவுக்கு அடுத்த தேர்தல் அவருக்கு ஆப்பு என்பதை மறந்துவிட்டர்போலும். இருந்தும் கனவுகள் நிறைவேறட்டும். கல்முனை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் இப்படியான கோடரிகளுக்கு.
ReplyDelete