தியாகத்தை நினைவுகூரும் உழ்ஹிய்யா
உழ்ஹிய்யா என்ற பெயரில் நிறைவேற்றப்படுகின்ற குர்பானி நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலிவுறுத்திய சுன்னத்தாகும்.
*உழ்ஹிய்யாவின் நோக்கம்*
இந்த மேலான துல்ஹஜ்ஜுடைய தினங்களில் அல்லாஹ்வுக்காக வேண்டியே அறுத்துப் பலியிடுகின்ற இந்த வணக்கம் ஆன்மீகம் மட்டும்; அன்றி இரு உன்னதத் தத்துவங்களை கொண்டிருக்கின்றது.
1.இப்றாஹிம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட முற்பட்ட பொழுது அல்லாஹ தஆலா சுவர்க்கத்தில் இருந்து ஒரு ஆட்டை இறக்கி அவர்களுக்கு அருள் புரிந்தான். இந்த தியாக வரலாற்றை நினைவு கூறுவதும் இந்த உழ்ஹிய்யாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
2.பெருநாள் தினம் என்பது மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய நாளாகும். அந்த நாளில் ஏழை எளியவர்களுக்கும் இந்த உழ்ஹிய்யாவை கொடுத்து நமது சந்தோசத்தில் பங்கு கொள்ளச் செய்வதும் மற்றொரு பிரதான நோக்கமாகும்.
*உழ்ஹிய்யா கொடுப்பதன் சிறப்புகள்
பெருநாள் தினத்தில் மனிதன் செய்யும் நல்லமல்கள் இரத்தம் ஓட்டி குர்பான்
கொடுப்பதை விட அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல் வேறு ஏதும் இல்லை. மேலும் அம் மிருகம் அதன் கொம்புகளுடனும், முடிகளுடனும், குழம்புகளுடனும் நாளை மறுமை நாளில் வரும். அதனுடைய இரத்தம் பூமியில் விழமுன் அது அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றது. எனவே மனமுவர்ந்து அதனை நிறைவேற்றுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பர் ஆயிஷா
(ரழி),திர்மிதி இப்னு மாஜா)*
*யார் மீது கடமை
பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள, சுதந்திரமான ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெருநாள் அன்றும் அதனை அடுத்து வரும் மூன்று தினங்களுக்கும் தன் பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் தேவையான அளவு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைகளின் செலவுகளைவிட மேலதிகமான வசதியுள்ளவர்கள் உழ்ஹிய்யாவை கொடுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் வசதி இருந்தும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நாம் தொழும் இடத்திற்கு வர வேண்டாம். (அறிவிப்பர் அபுஹறைரா ஆதாரம் ஹாகிம்)*
உழ்ஹிய்யா கொடுக்கும் நேரம்
ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை கொடுக்கலாம். (ஆனாலும் மிகவும் சிறந்தது பெருநாள் தொழுகை முடிந்த உடனே அறுக்கப்படுவதாகும்)
பெருநாள் தினத்தை நாம் தொழுகையைக் கொண்டு ஆரம்பிப்போம். பின்னர் திரும்பிவந்து உழ்ஹிய்யா கொடுப்போம் எவர் இக்காரியங்களை செய்கின்றாரோ அவர் எமதுவழிமுறையை அடைந்து கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்.(ஆதாரம் முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கு தகுதியான மிருகங்கள்
1.மாடு, வெள்ளாடு - இரண்டு வருடங்கள் நிரம்பியது.*
2.செம்மறியாடு – ஒரு வருடம் நிரம்பியது.*
3.ஒட்டகம் - ஐந்து வருடம் நிரம்பியது.*
*நபி (ஸல்) அவர்கள் வெள்ளை நிறமுடைய கொம்புள்ள இரு செம்மறியாடுகளை தனது காலை அதனுடைய கழுத்தின் ஓரத்தில் வைத்து “பிஸ்மில்லாஹி அள்ளாஹ{ அக்பர்” என கூறி அறுத்தார்கள். (ஆதாரம் புகாரி&முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால்நடைகளில் கீழ் கண்ட குறைகள் இருக்கலாகாது.
1.கண் குருடானவை *
2.கடுமையான நோயில் சிக்கியவை*
3.மிகவும் மோசமாக மெலிந்தவை*
4.நடக்க முடியாத அளவு நொண்டியானவை*
*உழ்ஹிய்யாக் கொடுப்பவர் செய்யக் கூடாதவை.*
உழ்ஹிய்யா கொடுக்க நிய்யத்து வைத்தவர்கள் துல்ஹஜ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை முடிகளை நீக்குவதும் நகங்களை வெட்டுவதும் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களில் உழ்ஹிய்யா கொடுக்க
நாட்டமுள்ளவர்கள் துல்ஹஜ் மாதத்திற்குரிய பிறையை கண்டு விட்டால் அவர் தனது நகம், முடிகளை களைவதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்ளட்டும்”.(அறிவிப்பவர் உம்முஸலமா ஆதாரம் முஸ்லிம்)*
யாருக்கு கொடுக்க வேண்டும்.
பரக்கத்திற்காக வேண்டி சிறிதளவு தாம் சாப்பிடுவதற்காகவும் ஏனையவற்றை சதகா செய்வது மேலானதாகும். அல்லது அதை மூன்றாக பங்கு வைத்து ஒரு பகுதியை தமது உணவிற்கும் மேலும் ஒரு பகுதியை உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் எஞ்சியதை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
*குறிப்பு நாம் மாற்றுமத சகோதர்களுடன் சேர்ந்து வாழ்வதனால் அவர்களது
உணர்வுகளைத் தூண்டும் வண்ணம் பிராணிகளை பாதை ஓரங்களில் கட்டி வைப்பதும் அவற்றிற்கு தீனி போடாமல் இருப்பதும் அறுக்கப்பட்ட பிராணிகளின் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதும் முற்றாக தவிர்க்கப்படுவதுடன் கழிவுகளை குழியில் புதைத்து விடவும் வேண்டும்.
எல்லாம் வல்ல அள்ளாஹ் நமது சகல நல்ல காரியங்களையும் அவன் விரும்புகின்ற முறையில் செய்வதற்கு அருள் புரிவானாக.*

Post a Comment