Header Ads



அஷ்ரபின் கனவை முன்னெடுக்கின்றோம், நிறைவேற்றுகின்றோம் என்று கூறுபவர்கள் எவரும்..?

(ஏ.எல்.ஜுனைதீன்)

  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி முஸ்லிம்களுக்கு சுய முகவரி பெற்றுத் தந்த சரித்திர நாயகன் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மரணித்து 13 வருடங்கள் கடந்து விட்டன.

  அன்னார் மரணமடைந்த தினத்தில் நினைவு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்பொழுது நடத்தப்படுகின்றன. அன்னார் மறைந்த நாளிலோ பிறந்த நாளிலோ மட்டுமன்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் நினைவு கூறப்பட வேண்டியவர். இவ்வருடம் அன்னாரின் பிரதான நினைவு வைபவம் புத்தளத்தில் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

  ஆனால், அன்னாரின் நினைவு வைபவங்கள் கூட அரசியல் இலாபம் கருதியே நடத்தப்பட்டதா? என்றும். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலைக் குறி வைத்து புத்தளப் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அன்னாரின் நினைவு வைபவம் இவ்வாண்டு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதா? எனவும் அன்னாரின் அனுதாபிகள் கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ளனர்

  கடந்த காலங்களில் அன்னாரின் நினைவு வைபவங்கள் இவ்வாறுதான் அரசியல் நோக்கத்திற்காக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இடங்களைத் தெரிவு செய்து நடத்தப்பட்டதாகவும் அன்னாரின் அனுதாபிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

   மாமனிதர் அஷ்ரஃபின் நினைவு நாளையொட்டி எதிர்கால சந்ததியினர்களான  முஸ்லிம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய திட்டமிடப்பட்ட நிகழ்வுகள், முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய பிரச்சார நடவடிக்கைகள், முஸ்லிம் தலைமைத்துவங்களை ஒன்றுபடுத்தக்கூடிய ஒற்றுமைக்கான நிகழ்வுகள் என்பன போன்றவை  இக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்படாமல் அரசியல் நோக்கமாகவே அன்னாரின் நினைவு நாள் கூடப் பயன்படுத்தப்படுகின்றதா? என்றும் இம் மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.

  இதுமாதிரமல்லாமல், அன்னாரின் அகால மரணம் பற்றிய மர்மம் இன்னும் துலக்கப்படவில்லையே என்ற ஏக்கத்தையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர். அன்னார் விபத்தில் மரணித்தாரா? அல்லது திட்டமிடப்பட்ட சதி முயற்சியின் காரணமாக மரணமடையச் செய்யப்பட்டாரா? என்ற விடயம் பொறுப்பு வாய்ந்தவர்களால் இன்றுவரைத் தெளிவுபடுத்தப்படவில்லையே என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

  மாமனிதர் அஷ்ரஃபின் கனவை முன்னெடுக்கின்றோம், நிறைவேற்றுகின்றோம் என்று கூறுபவர்கள் எவரும் அன்னாரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை உறுதியாகக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையே என்றும் அன்னாரின் நினைவு நாளில் அன்னாரை நேசிக்கும் அனுதாபிகள் தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

2 comments:

  1. M H M Asraf sir he is a great human been Allah Grant him jannathul firthouse no doubt he will be in jannah that much he has done for srilankan (tamils & muslims & singalish) communities in his period he has sacrifice his whole life for society like this people borne in 1000 years. one time Alhamthlillah.

    ReplyDelete
  2. மாமனிதரின் நினைவு நாளில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் அன்னாரின் மஃபிரத்திற்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    சகோதரர் ஜுனைதீன் தெரிவித்திருப்பது போல பலரும் அவ்வாறான கேள்விகளை இன்று எழுப்பி வருகின்றனர். அரசியல் உள்நோக்குடன்தான் புத்தளத்தில் இம்முறை அன்னாரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதாக அவரது அபிமானிகளான தமிழ்ச் சகோதரர்களும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவிக்காது இருந்திருக்குமாயின் ஒரு வேளை ஸ்ரீ.ல.மு.கா. தலைமையும் இவ்வாறான ஒரு நினைவு தினத்தை நினைவே கூர்ந்திருக்காது.

    எல்லாம் தேர்தல் திருவிளையாடல்கள்தான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்.

    -புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.