பறகஹதெனிய சம்பவம் உணர்த்துவதென்ன..?
(ஜே.எம்.எச்)
'மாவத்தகம முஸ்லீம்களின் துணிச்சல். ஞானசார தேரருக்கும் பொலீஸாருக்கும் நெத்தியடி' என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக சில நடைமுறை உண்மைகளை யூகிக் முடிவதாக வாசகர்கள் சொன்ன கருத்து இதுதான். மேற்படி சம்பவம் மூலம் ஒன்றை மட்டும் யூகிக்க முடிகிறதாம்.
குருநாகலையில் இடம் பெற்ற பொதுபலசேனாவின் கூட்டத்தில் வைத்து மேற்படி அறிவித்தல் பலகையை உடன் அகற்றவேண்டும் என்றும் அகற்றா விட்டால் தாம் அதை அகற்றுவதாகவும் மேற்படி தேரர் கூறியிருந்தார்.
அதன்படி 12ம் திகதி பொலீஸார் வந்து அதனை அகற்ற முட்பட்ட சமயம் பொது மக்கள் தலையீட்டால் அது தடுக்கப்பட்டுள்ளது.
இதே கதையை நானோ நீங்களோ சொன்னால் என்ன நடக்கும்? எம்மை ஒரு பைத்தியக் காரன் என நினைப்பார்கள். அல்லது அப்படி நாம் அகற்றினால் பொது சொத்துக்கு தீங்கு விளைவித்தல் சட்டத்தின் கீழ் கைதாகி தேச துரோகியாவோம்.
ஆனால் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டவர் சொனனால் அது நடக்கும் அப்படித் தானே. இப்போது அவ்வாறே அதனை மேற்கொள்ள வந்துள்ளனர். அப்படியாயின் அதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டவர் அவர்தான். அதாவது இந்த நாட்டில் அச்சம்பவத்தில் அவர்தான் ஐ.ஜி.பி. நாளை இது போன்ற ஒரு விடயத்திற்கு பிரதம நீதயரசர் ஆகவும் வரலாம். சிலலேளை அவரே நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியானாலும் புதுமை இல்லை.
சரி நாம் ஏதொ பெரிய சாதனை புரிந்ததாக நினைக்கலாம். இது நீதிமன்ற உத்தரவுப்படி போடப்பட்டது என்று தெரியாமல் அதனை அகற்ற பொலீஸார் வந்ததாக தப்புக்கணக்குப் போடவேண்டாம். பொலீஸாருக்கு அது தெரியும். புதிய ஐ.ஜி.பி.யின் கோரிக்கையை நிறைவேற்றவே வந்தார்கள். சட்ட சிக்கள் காரணமாக சென்று விட்டார்கள். சட்ட சிக்கலைத் தீர்த்து அதற்கு புதிய விதி ஒன்றை உருவாக்கி மீண்டும் புதிய ஐ.ஜி.பி.யின் உத்தரவுடன் வருவார்கள். அல்லது இரவோடு இரவாக வருவார்கள். அதுவும் முடியாவிட்டால் வாகனம் ஒன்று மோதும். அல்லது வீதி அகலமாக்க வேண்டிய தேவை வரலாம். இப்படி ஏகப்பட்ட தேவைகள் காலப் போக்கில் வரும்.
இது புதிய செய்தியல்ல. ஏற்கனவே இவ்வாறு பல சம்பவங்கள் நடந்துள்ளன. இலங்கையில் 'அபிவிருத்தி' என்ற சொல்லின் வரைவிளக்கணமே அது தானே. எனவே அவதானம் தேவை.

Maasha Allah..!!!
ReplyDeleteஇந்த ஒற்றுமை தான் எமக்கு வேண்டும்.