Header Ads



மௌலவி முபாறக் அவர்களே, பிளவுகளை விஸ்தரிக்க வேண்டாம்


(DR. N. Ariff)

நீங்கள் கூறுவது போன்று செய்ய முனைந்தால் என்ன நடக்கும்? கிழக்கு மாகாணத்திற்கு ஒரு பிறைக்குழு, வடமாகாணத்திற்கு ஒரு பிறைக்குழு, மேல்மாகாணத்திற்கு ஒரு பிறைக்குழு, தென்மாகாணத்திற்கு ஒரு பிறைக்குழு என்பதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு நாளில் பெருநாள் கொண்டாடுகின்ற நிலையும் ஏற்படும். ஏனெனில், நீங்கள் கிழக்கு மாகாணத்தில் பிறை கண்டு பெருநாள் தினத்தைப் பிரகடனப்படுத்துகின்ற போது, அதனை ஏனைய பிரதேசத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விடலாமல்லவா?

இன்னும், நீங்களே கூறுகின்றீர்கள் கிண்ணியா பிரதேசத்தில் பிறை தென்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று. அப்படிப் பார்த்தால் கிண்ணியாவை மையப்படுத்தித் தானே நீங்கள் கூறுகின்ற கிழக்கு மாகாணத்துக்கான பிறைக்குழு அமையவேண்டும்.  அவ்வாறு அவர்கள் கோரினால் அது நியாயமாகத் தானே இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுப்பீர்களா? முடிவு.... மாவட்டத்துக்கு ஒரு தனிப்பிறைக்குழு.

ஒருவேளை அவ்வாறு செய்தால், அதன்பிறகு வரக்கூடிய பிரச்சனைகளுக்கெல்லாம் பிராந்திய ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற நிலை தோன்றி எங்களுக்குள் ஒற்றுமை என்ற கயிற்றைத் தொலைத்து எங்களை நசுக்கிவிட வெறிகொண்டலையும் எமது எதிரிகளுக்கு அவர்களின் இலக்கை அடைய நாங்களே வழியமைத்துக் கொடுப்பது போலாகி விடுமல்லவா? எங்களின் ஒற்றுமை தான் எங்களின் பலம் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை. அண்மையில் வெளிநாடொன்றில், புகையிரதத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணொருவரை, பயணிகள் அனைவரும் சேர்ந்து புகையிரதத்தையே ஒருபக்கமாக உயர்த்தி மீட்டது, ஒற்றுமையின் பலம் என்னவென்பதை காட்டுகின்றது.

நிட்சயமாக, எமது மார்க்கத்திலே இமாம் அல்லது தலைமைத்துவம் பற்றித் தெளிவாகவே கூறப்படுகின்றது. தலைமைத்துவம் ஏதாவது வேண்டுமென்றே பிழைவிட்டால் இறைவனிடம் அதற்குரிய பொறுப்பு அவரையே சாரும். அவ்வாறான பிழையொன்றை நாங்கள் திருத்த முனைகின்றபோது, அது எங்களுக்கிடையில் சிறிதளவேனும் பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். மேலும், நீங்கள் கூறுவது போன்று, நாங்கள் மக்காவில் காணுகின்ற பிறையை வைத்து தீர்மானிக்க முடியாது. ஏனெனில் நாங்கள் பூகோள ரீதியாக பிறை தென்படக்கூடிய பகுதியில் வாழ்கிறோம் என்பதை மறந்து விட்டீர்களா அல்லது வேறு நோக்கத்துடன் கூறுகிறீர்களா? சகலவற்றையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கறிவான். அவனைப் பயந்;துகொள்வோம்.

எனவேதான் பிறை பார்க்கும் விடயத்திலும் நாம் பிரிந்துவிடாமல் ஒற்றுமையாக நின்று ஒரு தலைமையின் கீழ் தீர்வொன்றைத் தேட வேண்டும். நான் சில நாட்களுக்கு முன் கூறியது போன்று,

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் பகுதிகளில் உப பிறைக்குழுவை அமைத்தல்.
இதிலே குறிப்பட்ட பிரிவினர் மட்டும் என்றில்லாமல் புத்தி, சுவாதீனமுள்ள வெளிப்படையாக பார்வைக் குறைபாடுகளற்ற விரும்பிய சகலரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஒரேயொரு நிபந்தனை, இதிலே இணைந்துகொள்பவர் பெயரளவில் இல்லாமல், குறித்த தினத்திலே, குறிப்பிட்ட இடமொன்றில், குறித்த நேர இடைவெளியில் பிறை பார்ப்பதற்காக பிரசன்னமாகியிருப்பதற்கு தயாரானவராக இருக்க வேண்டும்.
குறித்த இடத்தில், இப்தார் மற்றும் மஹ்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு சாரார் தொழ, மற்ற சாரார் பிறை பார்க்க, பிறகு, தொழுதவர்கள் பிறை பார்க்க, பிறை பார்த்தவர்கள் தொழுது கொள்ளலாம். உண்மையில் இப்தார் நடாத்த விரும்புவர்கள் இவ்விடத்தில் அதனைச் செய்ய போட்டி போடவேண்டும்.
தலைமைப் பிறைக்;குழுவானது பிறை பார்க்கும் தினம், பிறை தென்படக் கூடிய நேரம், திசை என்பனவற்றை முன்கூட்டியே சகல உப பிறைக்குழுக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
சகல உப பிறைக்குழுக்களும் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
பிறை தென்பட்டால் இந்தக் குழு தான் தலைமைக் காரியாலயத்துக்கு அறிவிக்கும். இதன் பிறகு, பிறை கண்டது யார், அவரின் நம்பகத் தன்மை என்ன, உறுதிப்படுத்தியது யார் போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு காலத்தை இழுத்தடிக்க வேண்டிய தேவை இருக்காது.
உடனடியாகவே தலைமைப் பிறைக்குழு சகல முஸ்லிம்களுக்கும் அறிவிப்புச் செய்து பெருநாள் தினத்தை பிரகடனப்படுத்தும்.
இவ்வாறு செய்கின்ற போது தனிப்பட்ட நபர்களில் தங்கியிருக்க வேண்டிய தேவை இருக்காது. குழப்பங்கள் வருவதற்கான சாத்தியங்களும் குறைவு. ஏனெனில் ஒரு குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பிறை பார்ப்பவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் தனியொருவர் கண்டார் என்பதற்கும் சந்தர்ப்பம் வராது.

இதுகாலவரைக்கும், முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழுகின்ற பகுதிகளில் கூட பிறை பார்ப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டதில்லை. நாங்கள் கொழும்பிலே நான்கு அறைகளுக்குள்ளே கூடியிருக்கும் பிறைக்குழுவை எதிர்பார்த்திருக்க, அவர்களோ எங்கேயோ இருக்கின்ற தனிநபர்களில் தங்கியிருந்து விட்டு ஆயிரம் கேள்விகள் கேட்டு, நடுநிசி தாண்டியும் தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலை தொடருமாயின், ஒவ்வொரு பெருநாளைத் தீர்மானிக்கின்ற போதும் இந்த சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். எனவே எனது இந்த யோசனையை பரிசீலித்துப் பாருங்கள். சரியாக இருக்கலாம் என்று தீர்மானித்தால் அதனை உரிய முறையில் அமுல்படுத்த முயற்சியுங்கள். நீங்கள் செய்கின்ற பொதுவான செயல்களில் வெளிப்படைத் தன்மையைக் காட்டுங்கள். எந்தப் பிரச்சினையும் வராது.

என்னையும், உங்களையும், மற்றும் சகல முஸ்லிம்களையும் நேர்வழியின் பக்கம் செலுத்தி, எங்களை ஒற்றுமைப்படுத்தி, சகல பிரச்சினைகளிலும் எங்களுக்கு வெற்றியைத் தந்தருள்வானாக! ஆமீன்!

4 comments:

  1. samooha otrumaiyai seerkulaikum ivan pondra maolavihalai illadolika wendrum thanadu arasiyal iruppukkaha kootti koduppadill ivanai minja alillai....................

    ReplyDelete
  2. Dr. Ariff....What you suggest is correct, it is the need of the hour....Our ACJU should think about organizing such sub-groups to sight the moon in order to avoid Un-necessary problems in the future...

    What had happened is happened, no need to criticize about it....just leave it and get in to the field for the future of our UMMAH....

    ReplyDelete
  3. இவர்கள் வானியல் சாஸ்திரத்தை நம்புகிறவர்கள். மனிதக் கண்களை நம்பமாட்டார்கள். மடையர்கள் போன்று முடிவெடுப்பார்கள் பின்னர் தலைமைத்துவத்துக்கு கட்டுபடுங்கள் என்று அறைகூவல் விடுவார்கள். வானொலி,தொலைக்காட்சி மற்றும் இன்னோரன்ன மீடியாக்களிலே ஆயிரம் விளக்கமளிப்பார்கள். அவை முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கும். எவன் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதை விட்டு தனது பகுத்தறிவு வாதத்தை முன்வைக்கிரார்களோ அவர்கள் இவ்வாறுதான் முடிவெடுப்பார்கள்.

    ReplyDelete
  4. விட்டால் முபாறக் மெளலவி அவருக்கு தனிப்பிறைவேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்.

    ReplyDelete

Powered by Blogger.