பைஸர் முஸ்தபாதான் கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்குக் காரணமா..?
(G + A)
கிரேண்ட்பாஸ் பள்ளிவிவகாரம் தொடர்பாக சிங்கள இணையம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தமிழ் வடிவத்தை கீழே தருகிறோம். இது ஓரு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆக்கமே தவிர எமது சொந்தக் கருத்து அல்ல.
மத்தியில் கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஏ.எச்.எம்.பவுஸி அவர்களுக்கு அப்பாற் சென்று தொழில் நுட்ப ஆராய்ச்சித் துறைப் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை முஸ்லிம் சமூகத்தில் பிரபலம் மிக்கவராக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாகவே கிரேண்ட்பாஸ் பள்ளி மற்றும் பன்சலையை மையமாகக் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணம் என நோக்கப் படுகிறது.
ரமலான் நோன்பு ஆரம்பமாவதன் காரணமாக அப்பிரதேச முஸ்லிம்மக்கள் முதலில் களஞ்சிய அறையாக நிர்மாணித்த ஒன்றை புதிய பள்ளியாகப் பாவித்தமையே இப்பிரச்சினக்குக் முக்கிய அடிப்படைக் காரணமாகும்.
நோன்பு முடிந்த பின் இவ் இடத்தில் இடம் பெற்று வந்த சமய நிகழ்சிசகளைக் கைவிடுதல் என்ற அடிப்படையில் ஆரம்பக்கட்டத்தில் அப்பிரச்சினை இணக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதியூடாக பௌத்தசாசன அமைச்சில் இருந்து பெற்றப்பட்ட கடிதம் காரணமாகவே இப் புதிய பள்ளியை தொடர்ந்தும் பாவிப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. இதுவே ஆகஸ்ட் 10ம் திகதி மோதலுக்கு முதலாவது அடிப்படைக் காரணமானது.
இது தொடர்பாக மேற்கொண்ட தேடலில் சமாதி விகாரையின் விகாராதிபதி போபலேனே அனுருத்த ஹிமி தெரிவித்ததாவது,
களஞ்சியசாலை என்று கம்பீரமாகக் கட்டப்பட்ட புதிய கட்டிடமே இப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமான போதும் ரமலான் மாதத்தைக் கருத்திற் கொண்டு தானும் பிரதி பொலீஸ் மா அதிபர் அனுர சேநாநாயக்காவும் பள்ளியின் இமாமும் (மதகுரு) பௌத்த சாசன அமைச்சும் இணைந்து ஏற்படுத்திய இணக்கமானது நோன்பு காலம் முடிந்த உடன் புதிய கட்டிடத்தை வேறு இடத்திற்கு அப்புறப் படுத்துவது என்ற அடிப்படையிலாகும்.
இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியை திசை திருப்பி பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா பெற்றுக் கொண்ட கடிதம் காரணமாக ஏற்கனவே பேசிய படி அப்புறப் படுத்தாத படியால் கடந்த 10ம் திகதி மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பிரதிஅமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.
இது தொடர்பாக மத்திய கொழும்பு தொகுதி இணை அமைப்பாளர் அமைச்சர் ஏ.எச்.எம்.பவுஸியுடன் நாம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்ததாவது,
தான் பன்சலையுடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைக்கு இணக்கம் ஒன்றை ஏற்படுதிய போதும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் நடவடிக்கை காரணமாக அது கை கூடாது போனதாக தெரிவித்தார்.
அத்துடன் பௌத்த சாசன அமைச்சில்லிருந்து அவர் பெற்ற கடிதம் மற்றும் கண்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட உதவியாளர்கள் மூலம் இப்பிரச்சினை மேலும் சிக்கலானதாகத் தெரிவித்தார்.
.jpg)
He did all the things a man. He is in the mosque when the incident occur, He cries when we gave up the New mosque. I heartly felt His eeman goes up in that time.
ReplyDeleteநல்ல அமைச்சு அங்கே வேலை இல்லாவிட்டால் வீட்டிலிருந்து வெங்காயம் உரிக்கலாமே .
ReplyDeleteபேசி முடிவான விடயங்களை பேசியே உஎவராகினும் கூடாது !!! கூடாது !!
ReplyDelete