கட்டாரிலிருந்து ஒரு சகோதரரின் குமுறல்..!
ரமழான் மற்றும் ஷவ்வால் மாதம் மட்டுமா பிறை உள்ளது?
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் எந்த இயக்கத்துக்கும் சார்பானவன் அல்ல, உங்களுடைய தஹ்வாஹ் பணி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படாதவாறு, மாற்று மதத்தினர் இஸ்லாத்தை வெறுக்காதவாறு இருந்தால் நல்லது, தலைமை பொறுப்பில் உள்ளோர் நிச்சயமாக படைத்த ரப்புல் ஆலமீனுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்கள் என்பதை எவராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மை,
இந்த பிரச்சினைக்கு எல்லா இயக்கங்களும் பொறுப்பு கூற வேண்டும், நான் எல்லா உலமாக்களையும் மதிப்பவன், இயக்க வேறுபாடு கிடையாது, உலமாக்களை பூசாரி, மதகுரு என்றெல்லாம் கூறியது ஏகத்துவவஅதிகள் என்ற பெயரில் உள்ள சில உள்நோக்கம் கொண்டவர்கள், இது மிகப்பெரிய தவறு, வேற்றுமையை மறந்து ரமழான் மாதம் மட்டும் அல்ல, ஒவ்வொரு மாதமும் பிறை பார்க்க ஒன்று கூடுங்கள்,தனிப்பட்ட நபர்களையோ இயக்கங்களையோ விமர்சிப்பதை தயவு செய்து இனிமேலாவது விட்டுவிடுவோம், ஒவ்வொரோவரும் அவரவர்களினது தவறுகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து அல்லாஹ்வுக்காகவும் , முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும், சுயநலம் இன்றி ஒன்று படுவோமாக ...., இன்ஷா அல்லாஹ் (இந்த வேண்டுகோள் எல்லா இய்யக்கங்களுக்கும் பொருந்தும் அடுத்த மதத்தினர் நம்மை பார்த்து கேலி செய்கின்ற அளவுக்கு விஷயம் விஷமாக மாறி விட்டது) அல்லாஹுத்தாலா நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக,
மார்க்கம் சம்பந்தமான எல்லா விடயங்களையும், மஷூரா செய்யுங்கள்....,அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் ஏற்ற வகையில் முடிவை பெற்றுக்கொள்ளுங்கள், அதனை விட்டு விட்டு இணையத்தில் எவரையும் சீரழிக்கதீர்கள், "ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அல்லாஹ் உங்களுடைய குறையை மன்னிப்பான்" , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் கொடுப்பானாக! ஆமீன்
(டோஹாவிலிருந்து நூருல் ஹசன்)
.jpg)
விமர்சனம் இல்லாமல் தெளிவு வராது.
ReplyDeleteஇன்று இறைத்தூதர்கள் இல்லை. தூதுத்துவத்திற்கு அல்லாஹ் முத்திரையிட்டு விட்டார். கடைசித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் என்றும் அவர்களிடமிருந்துதான் மார்க்கத் தீர்ப்புகள் எடுக்க வேண்டுமென்றும் அல்லாஹ் தெளிவாகவே அல்-குர்ஆனில் பிரகடனப்படுத்தி விட்டான்.
உலமாக்களை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், இந்த உலமாத்தலைவரின் பொய்யும் புரட்டும் சாக்கடை போல் இன்று நாறுகிறது.
இவ்வாறான தலைவர்களை முன்னிறுத்தி எவ்வாறு சமூகம் அந்நியர்களுடன் இஸ்லாத்தைச் சொல்ல முடியும். ஊடகங்கள் மூலம் பச்சைப் பொய்களைப் பிரசாரம் செய்திருக்கக் கூடிய அ.இ.ஜ.உ. தலைவரின் வண்டவாளம் இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டது. பொய்யான ஹதீஸ்களை எடுத்துக் கூறி மக்களை நரகின் பக்கம் இழுத்துச் செல்லும் இவர்களெல்லாம் உலமாக்கள்தானா என்பதை முதலில் இஸ்லாமியர்கள் உணரவேண்டும். இவர்களையெல்லாம் உலமாக்களென்றால் உலமாக்களை என்னவென்பது?
இவ்வாறான உலமாக்களின் பின்னால் சென்றால் மற்றவர்களெல்லாம் மாக்களாக வேண்டியதுதான்.
ஆலோசனை சொல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது.
அல்-குர்ஆனுக்கு முரணாக அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டலுக்கு முரணாக எவன் இட்டுக்கட்டித் தனது புகழ் பாடுகிறானோ அவனெல்லாம் ஆலிமாக இருக்க முடியாது. இந்த சான்றிதழ்கள் பெற்றவர்களெல்லாம் ஆலிமாக முடியாது என்பது இன்று தெளிவாகி விட்டது.
சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்தே தீரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அல்லாஹ் நிச்சயமாக பொய்யான போலியான அறிஞர்கள் வேஷம் போட்டு அவனுடைய மார்க்கத்தில் விளையாடக் கூடியவர்களைத் தோலுரித்துக் காட்டுவான். அவனுடைய அதிகாரத்தில் தலையிடுபவர்களை அவன் நிச்சமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவான்.
அவனுக்கே எல்லாப் புகழும்.
ondru neengal ready ungala ulamakal redya samuham onru patal avrgaluku bussines illa
ReplyDeleteஅன்புக்குரிய நூருல் ஹஸன் அவர்களுக்கு
ReplyDeleteபிறைவிடயத்தில் மக்கள் பிரிந்துவிட்டார்களே! தலைமைத்துவக்கட்டுப்பாட போய்விட்டதே.! அந்நிய சமுகத்தார் என்ன நினைப்பார்களோ! தனிநபர்களைவி மர்சிக்கிறார்களே!
எனக்கவலைப்பட்டுள்ளீர்கள் உங்கள் ஆதங்கமும் கவலையும் தூய்மையானது.
அதே நேரம் ஊடகம் என்ற வகையில் அண்மையில் பிறைவிடயம் தொடர்பாக இணையதளங்களில் கருத்துக் கூறப்பட்டுவருவது தவிர்க்க முடியாதது. ஏனெனில்,இணையமும் ஒரு பவபுல் ஊடகம்.
பிறைவிடயமாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பிறை தொடர்பாக முடிவெடுத்தவரை அல்லது களை நோக்கியே முன்வைக்கப்படும். அரசியலானாலும், ஆன்மீகமானாலும் தலைமைப்டம் நியாயமான கருத்தொன்றின் ஊடாக விமர்சிக்கப்படவது வரவேற்கத்தக்கதாகும்.
ஆனால் கருத்துக்கூறுகிறேன் என்று தனிநபரின் சொந்த வாழ்வு தாக்குதலுக்குட்படுத்தப்படலாகாது.
இன்று பிறைவிடயத்தில் ஜ.உ.சபை தலைமைப்பீடமே கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அப்பீடத்தில் இருப்பவர் றிஸ்வி முப்தியென்ற பெயருடையவராக இருக்கிறார். அவ்வளவு தான்.
அதேநேரம் முடிவுகளை எடுப்பவருக்கு அல்லது களுக்கு மார்க்கத்தில் உள்ள அக்கறையையும், கருத்துக்கூறுபவர்களது அக்கறையையும் நாம் நிறுத்துப்பார்க்கத்தேவையில்லை. அது ஒன்றுக்கொன்று எந்தவகையிலும் குறைவுபடாததாக இருக்கலாம்.
'ஆண்டவனே! முஸ்லிம்கள் பிரிந்துவிட்டார்களே என அந்நிய சமுகம் நினைக்குமே' என்ற ஆதங்கம் நிலவத்தான் செய்கிறது. அதற்காக அந்த சமுகத்திடம் அச்சாப்பிள்ளையாக மாற, பிழை ஒன்றின் மீது ஒரு ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டுமா? அவ்வாறு கட்டியெழுப்பப்படவது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா?
மார்க்க விடயங்களில் அல்லாஹ்வும் ரசுhலும் காட்டிய வழிதான் முதலும் முடிவுமானது. மாற்றமாக தனிநபர் வழிபாட்டுக்கான சாத்தியம் எங்கு தலைகாட்டுகிறதோ அங்கு அது நியாயமான முறையில் அதாரத்துடன் உடன் கண்டிக்கப்படவேண்டும்.
'முஸ்லிம்கள் பிரிந்துவிட்டார்கள் அல்லது பிரிந்துவிடுவார்கள்' என அந்நியர் நினைப்பார்களோ என அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஏனெனில்,
'நான் சொல்கிறேன் (நக்குண்டவன் நாவிழப்பது போல) கேள்விக்கிடமின்றி ஏற்று நட' என்ற நாட்டாண்மை பாணியிலான மார்க்க தலைமைத்துவப் போக்கை முஸ்லிம்கள் அனுமதிக்கமாட்டார்கள. யாராக இருந்தாலும் கேள்விக்குட்படுத்துவார்கள்'
என்ற செய்தியும் சகோதர சமுகத்துக்கு போய் சேர்ந்திருக்கிறது.
பிறை விடயத்தில் முஸ்லிம்களிடத்தில் ஏற்பட்டிருப்பது ஒரு தற்கால உரசல் தான். எப்போது தனி நபர் முனைப்பு பின்தள்ளப்பட்டு அல்லாஹ்வும் அவனது ரசுhலும் முதன்மைப்படுத்தப்படுகிறார்களோ. அப்போது சமுகம் அழைக்காமலே ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.
'நீரடித்து நீர்விலகுமா?'
என்றைக்கும் மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவன் தந்த ஒப்பற்ற பரிசான தூதரும் தான் முதலாம் பட்சமும் முடிவான பட்சமும்.
i am also agree.
ReplyDeleteJamiyathul ulama owworu maathamum pirai parpatgarku koodukiraarkal. PAKIRANKAMAHA ariwilliraarkal. Tp no kodukkiraarkal. Kulappawaathikal thaan shawwalil mattum parkiraarkal.
ReplyDeleteyes, I agree to certain extend with u.Unity is very important to our ummaa,
ReplyDeleteMy dear friends who all commenting against the ACJU kindly stop criticizing ulamahs because u guys r thinking that u guys r really talking about Islam but its not because in Islam its not at all allowed to divide the ummah by any ways and u guys having any issue or if u guys find out any mistake from ACJU don't write the comments on the public networks and made a bad image about our Ulamas and Islam if u guys really having the consideration about our Muslim community take some time and just visit the ACJU and discuss the issues what u guys having.the people who all writing some nonsense they just try to be a proper Muslims by all our activities because who ever doing the mistakes they have to answer to Allah in the day of qiyamah but u guys don't create the way to be question in the day of qiyamah for dividing the ummah by these kind of comments on the public networks.Jazakallahu hair.
ReplyDeleteYEVARAHA IRUNTHALUM QURRAN HADEETHUKU KATTUPATTUTHA NADAKANUM THALAIVAR ENNE SONNALUM YETRUKOLLANUMDU ILLIYE
ReplyDelete