Header Ads



தோல்வி எமக்கா..? எமது அரசியல் தலைமைகளுக்கா..??


(J.M.H)

இரண்டு டசன் முஸ்லிம் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தி முடிந்த கதையாகி விட்டது. ஆனால் இதுவரை ஒரு பள்ளியும் உடைக்கப்படவில்லை என்று துணிந்து கூற தர்கரீதியாக பலருக்கு அவகாசம் இன்னும் உள்ளது. அதை பட்டியல் இடலாம்.

1.அது பள்ளி அல்ல தைக்கா, 2.அது பதிவு செய்யப்பட இல்லை. 3.அது அனுமதி பெறப்பட்ட கட்டிடம் அல்ல. 4. அது குர்ஆன் மத்தரசா.

இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் ஒரு உண்மையை மட்டும் மறுக்க  முடியாது. குறைந்தது ஒரு நாளாவது அது வணக்கஸ்தலமாகப் பயன் படுத்தப்பட்டது என்பது. அண்மைய சம்பவமான கிரேண்பாஸ் சம்பவம் தொடாபாக ஊடகங்களில் வெளியானவற்றை மட்டும் வைத்துப்பாhத்தால் பின்வரும் சில விடயங்களை யூகிக்க முடிகிறது.

கிரேண்பாஸ் சம்பவம் தொடாபாக தினக்குரல் 12.8.2013 ல் பிரசுரிதுதுள்ள புகைப்படத்தில் மாற்று மதப் பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில் மகிழ்சி ஆரவாரம் செய்கின்றனர். ஒரு பெண் வெற்றி என்பதைக் குறிக்கும் 'ஏ' (வீ) அடையாளத்தை தனது இரண்டு கை விரல்களாலும் தூக்கிக் காட்டுகிறார்.

அதே நேரம் தமிழ் தினசரிகள் முக்கியத்துவம் கொடுத்து இத்தாக்குதலுக்கு பல பக்கங்களை ஒதுக்கியுள்ளன. இது பத்திகை தர்மமா? அல்லது எம்மீதுள்ள பாசமா? விற்பனை யுக்தியா? தெரியவில்லை. ஆனால் அரச ஊது குழலான ஒரு சிங்களப் பத்திரிகையில் இவ்வளவு நடந்தும் அது பற்றி ஒரு எழுத்துக் கூட இல்லை. தலைநகரில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால் அது பற்றி ஏதும் இல்லை. ஏன் தெரியுமா அதுவும் பத்ரிகா தர்மம். பிரச்சினையை பெரிது படுத்தக் கூடாதல்லவா? அதேநேரம் கல்ப் நியூஸ், கட்டார் நியூஸ் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் கூட இச் செய்தியைப் பிரசுரித்துள்ளன.

மற்றொரு அரச ஊது குழலான தமிழ் பத்திரிகையில் பிரச்சினை எங்கோ இருக்க 'மதத்தலைவர்கள் கண்டனம்' என்று மட்டும் ஒரு சம்பிரதாயச் செய்தியைப் பிரசுரித்துள்ளது.

சிங்கள மக்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமான நடு நிலைப் பத்திரிகை எனப் பெயர் வாங்கிய நம்கபத்தன்மை பொருத்திய ஒரு பத்திரிகையும் கூட நிலைமையை இருட்டடிப்புச் செய்து 'சர்வமதத் தலைவர்கள் சமரசம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளது.

இவ்வளவு விளக்கம் ஏன் தரப்பட்டது தெரியுமா? சுருங்கக் கூறின் பெரும்பான்மை சமூகத்திற்கு நடந்த விடயங்கள் மிக்க மகிழ்ச்சி, நல்ல திருப்தி. உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் அரசுக்கு இது பற்றி எக்கவலையும் இல்லை என்பதாகும்.

மறுபுறம் அரசின் பிரபல பீரங்கிப் பேச்சாளரும் முன்னணி அமைச்சருமான ஒருவர் கட்டுகாஸ்தோட்டையில் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்த கருத்து www.jaffnamuslim.com இவ் இணையத்திலும், லங்கா தீப்ப சிங்கள இணையத்திலும் வெளியாகி இருந்தன. அதாவது 'இது அரசிற்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளில் சதி' என்பதாகும்.  வெளிநாடுகளுக்கு இலங்கை விவகாரத்தில் எந்தநாளும் மூக்கை விட்டுக் கொண்டிருக்க அவசியமில்லை என்பது வேறு விடயம். அரச அமைச்சர் என்ற வகையில் அவர் கூறிய அவ்விடயத்தை சரி என ஏற்றுக் கொள்வோமே.

அப்படி என்றால் பௌத்த சாசன அமைச்சில் வைத்து புதிய பள்ளியை அகற்ற சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி இதனைத் தானே வெளிநாட்டுச் சக்தியால் தூண்டப்பட்ட காடையர் கூட்டமும் செய்தார்கள். காடையர் கூட்டம் செய்தததை நியாயப் படுத்த முஸ்லிம்களுடன் முரண்பட்டு வாதாடுவதற்கு அங்கு வந்த பெரும்பான்மை அமைச்சர் ஒருவரும் அவருடைய கை ஆட்களும் புதிய பள்ளி அகற்றப்பட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார்களே. காடையர் கூட்டமும் அதைத்தானே செய்தது?  அப்படியாயின் இக்காடையர் கூட்டம்தான் வெளிநாட்டு உள் நாட்டு தீய சக்தியாயின் அவர்களுடன் கூட வந்தவர்கள் தானே அத்தீயசக்தி. முஸ்லிம்கள் என்றால் முட்டாள்கள் என்ற கணிப்பு அவர்கள் கணக்கில் சரியாக இருக்கலாம். சிந்தியுங்கள்.

இது போன்ற இன்னும் பல விடயங்களைத தொகுத்துப் பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு தோல்வி என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு தோல்வி என்றதும் கொதித்து எழவேண்டாம். ஏனெனில் நான் இன்று பஸ்ஸில் பிரயானம் செய்யும் போது ஒருவர் பின் வருமாறு கூறினார். முஸ்லிம்களுக்கு தோல்வி நிச்சயம் என்று. ஏன் எனக் கேட்டபோது-
மூன்று மாகாண சபைகளிலும் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம். பெரும்பாலும் அரசின் வெற்றி உறுதியாகி விட்டது என்றார். அரச தரப்பிலும், எதிர் தரப்பிலும் எமது அங்கத்தவர்கள் சிலர் தெரிவாகுவர் என்றார். அப்படியாயின் எப்படித் தோல்வி என்று கேட்ட போது ' எதிர் கட்சியில் தெரிவாகும் எம்மவர்கள் வாய்மூடி மௌனமாக சபையில் அமர்ந்து சுகபோகம் அனுபவிப்பர். அரச சார்பில் தெரிவாகுவோர் இன்னும் ஒரு படி இறங்கி எசமானுக்கு விசுவாசமாக 'ஆமா சாமி' போடுவார்கள். எனவே எவனைத் தெரிவு செய்தாலும் எமக்குத் தோல்வியே என்றார்.

இன்னொருவர் கூறினார் மாகாண சபைத் தேர்தலில் பின் எம்மை ஏமாற்றிய முஸ்லீம் அரசியல்வாதிகள் தோல்வி அடையப் போகிறார்கள். அவர்களும் முஸ்லீம்கள்தானே. எனவே முஸ்லீம்களுக்கு தோல்வி என்பது எமக்கல்ல. எமது அரசியல் தலைவர்களுக்கு ஏன்றார். பொருத்திருந்து பார்ப்போம்...!

6 comments:

  1. ippaonrum pasiyvallailla

    ReplyDelete
  2. Robbers of votes of Innocent Muslims.
    Worst
    Worst
    Worst

    ReplyDelete
  3. உங்கள் கேள்வியிலேயே "ஏ மக்கா? என்று சொல்வது நம்மைத்தான். நாம்தான் என்றைக்கும் மக்குகள்!!! அதனால் எப்போதுமே தோல்வி மக்(கு)களுக்குத்தான்! நமக்குத்தான்!

    அரசியல்வாதிகள்;
    - நரக நெருப்புடன் விளையாடும் வியாபாரிகள்!!
    - முதல்போடா வணிகர்கள்!!
    - நம் சிந்தனை வீச்சுக்கும் அடங்காத; பற்பல கோடிகள் மட்டுமே இலாபங்களாய்ப் பெறும் திருட்டுத் தொழிலதிபர்கள்!!
    - பண முதலைகள்!
    - தேர்தல் கால பிச்சைக்காரர்கள்!
    - நடிக, நடிகர்களின் பல்கலைக்களகங்கள்!!
    - சமுகம், மார்க்கம், மதம், நட்பு, பந்தம்,....... என்பன தன்; மற்றும் தனது குடும்ப, ஆடம்பர வாழ்க்கைக்கும், சொகுசுக்கும், தன் முதல்போடா கோடிக்கணக்கான, வரி இல்லா இலாபத்திற்கும்...அது போன்ற வரிசைகளுக்கும்...இடையூறாகுமென்றால்....

    அவர்கள்
    வார்த்தையில்,நடத்தையில், நடந்து கொள்வதில், போன்றவற்றில் மனம் கோணாமல் மாறு செய்வார்கள்! இதனால் காபிர்களிடமிருந்து நல்ல பேறு பெறுவார்கள்!

    ஆக,
    இந்த அரசியல்வாதிகள் எப்போதுமே "இவ்வுலக" வெற்றியாளர்கள்!!! அல்லாஹ் இடத்தில் "வெற்று ஆளர்கள்"

    இத்தனை முஸ்லிம் விரோதப் போக்குடைய, முஸ்லிம்களுக்கு மத்தியில்...ஒரு,
    -நம்பிக்கையீனத்தையும்,
    -பயத்தையும்,
    -இதுவரைக்கும் 24 பள்ளிகளையும் உடைத்திருக்கும்.....

    இந்த நச்சு வெற்றிலையில் இன்னும் சுன்னாம்புகளாய் ஒட்டிக்கொண்டு...

    இத்தருணம் வரைக்கும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்குக் கேட்கும் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு வரும் ----

    இவர்களா? தோற்பவர்கள்?????????????

    இவர்கள் என்றுமே இவ்வுலகில் வெற்றிக்காரர்கள்! அல்லாஹ்விடத்தில் "வெற்றுக் காரர்கள்"

    அல்லாஹ் இவர்கட்கு "ஹிதாயத்தைக்" கொடுக்கட்டும்!!! ஆமீன்



    ReplyDelete
  4. namaku than ivargal vetri tholvi election matumthan

    ReplyDelete

Powered by Blogger.