ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், ஆசிரியர்களுக்கு சிக்கல்
(எம்.எம்.ஏ.ஸமட்)
முஸ்லிம் ஆசிரியர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக கோரும் விடுமுறை தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் இறுதியாக 2011இல் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையில் வாழும் 9.2 வீதமான 18 இலட்சத்து 69 ஆயிரத்து 820 முஸ்லிம்களில் 30.44 வீதமான 5 இலட்சத்து 69 ஆயிரத்து 182 முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றார்கள்.
கல்வி அமைச்சின் 2011.06.01 தகவல்களின் படி, நாட்டில் மொத்தமுள்ள 9731 பாட சாலைகளுள் 824 முஸ்லிம் பாடசாலைகள் உட்பட 2969 தமிழ் மொழி மூலப் பாட சாலைகளாகும்.கிழக்கு மாகாணத்தில் இத்தொகை 1020 ஆக உள்ளது. இங்குள்ள 768 தமிழ் மொழிப்பாடசாலைகளுள் முஸ்லிம் பாடசாலைகளின்தொகை 318 ஆகும்.
அவ்வாறே நாட்டில் மொத்தமுள்ள 219.886 ஆசிரியர்களுள் 52.998 பேர்,தமிழ்மொழி மூல ஆசிரியர்களாகும். கிழக்கு மாகாணத்தில் இத்தொகை 16.050 ஆக உள்ளது. நாடெங்குமுள்ள முஸ்லிம் ஆசிரியர்களின் தொகை 19.170ஆக இருக்க கிழக்கிலுள்ள முஸ்லிம் ஆசிரியர்களின் தொகை 6.645 ஆகும்.
இதுபோல், 225 பேர் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்றத்தில், சிரேஷட அமைச் சர், அமைச்சரவை அமைச்சர்கள், திட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாரா ளுமன்றப்பேரவை உறுப்பினர் என மொத்தம் 18 பேர் முஸ்லிம் மக்களைப் பிரதிநி தித்துவப்படுத்தி அங்கத்துவம் வகிக்கின்றனர்.
கிழக்கு மாகாணசபையிலும், அங்கு அங்கத்துவம் பெறும் 37உறுப்பினர்களில், முதலமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதிச்சபைமுதல்வர் என மொத்தம் 15 பேர் கிழக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கத்துவம் வகிக்கின்றனர்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்திலும், மாகாணசபையிலும் பேச இத்தனைபேர் இருந்தும், ஆயுளில் ஒருதடவை செய்யும் புனித ஹஜ் யாத்திரைக்கு, சம்பளமற்ற விடுதலையில் நாட்டுக்கு வெளியே செல்ல அனுமதி பெறும் பிரச்சினை கடந்த 2011 முதல் தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தலயாத்திரைக்கு நாட்டுக்கு வெளியே சம்பளமற்ற விடுதலையில் செல்ல விண்ணப் பத்துடன், சம்பளத்துடனான சேமித்த விடுதலை விபரங்கள் இணைக்கப்பட வேண் டியது அவசியம் எனவும், அவர்கள் சேமித்த விடுதலை நாட்களுக்கு மட்டுமே விடு தலை அனுமதி வழங்கப்படும் எனவும், கிழக்கு கல்வி வலயங்களுக்கு, மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் 2011.07.21ஆம் திகதிய அனுப்பி வைத்த கடிதத் தின்படியே இந்த அனுமதி மறுப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
நாட்டிலுள்ள எந்த ஒரு மாகாணத்திலும் இல்லாத, தாபன விதிக்கோவையிலும் இல் லாத அதிபர், ஆசிரியர்களுக்கு மட்டுமுள்ள இந்த நடைமுறை காரணமாக, புனித ஹஜ்ஜூக்குத் தேவையான போதிய பண வசதி மற்றும் தேக ஆரோக்கியம் என்பன இருந்தும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான 2240 ஹஜ்யாத்திரிகர் குழுவில் இடம் பிடித்தும், போதிய சேமித்த விடுதலை இல்லாமையினால் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும், கிழக்கு மாகாணக் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களின் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பது யார்?.
ஹஜ் கடமையை மேற்கொள்ள விரும்பும் அரசாங்க ஊழியர் ஒருவர், கடந்த இரண்டு வருடங்களில் அவருக்குரிய சம்பளத்துடனாக விடுதலையைச் சேமித்திருந்தால் மட்டுமே விடுதலை அனுமதி வழங்கப்படுகிறது. விடுதலை சேமிக்காத அல் லது சேமித்த விடுதலை குறைவாக உள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுதலை மறுக்கப்பட்டு வருவதனால், அரச ஊழியர்கள் சமயக்கடமைகளை நிறை வேற்ற முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இது தொடர்பில், 2011 டிசம்பர் மாத அமர்வில், கிழக்கு மாகாண வீதி ,நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை வாரியம், இவ்வருடம் (2012) முதல் அரச ஊழியர்கள் சேமிக்காத, விடுதலை இல்லாத சம்பளமற்ற விடுதலை வழங்க முடியுமென திர்மானத்தை நிறை வேற்றியுள்ளதாகத் தெரிவித்தார் என தேசிய நாளிதழ் 2012.01.09 இல் தகவல் தந்திருந்நது.
இவ்வாறு, 2012இல் அமுல்படுத்துவதென 2011 டிசம்பர் மாத அமர்வில் திர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கையில்,, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சோ தற்போதும், போதிய சேமித்த விடுதலை இல்லாதவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து வரு கின்றது.இந்நிலiயில், 2013.04.09இல் இவ்வாறானவர்களுக்கு சம்பனமற்ற விடுதலை யில் செல்ல அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவையின் திர்மானம் ஒன்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு சபை யின் பிரதித் தவிசாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
2013இல் சம்மாந்துறைக் கல்வி வலயயத்தில் 29 நாட்கள் சேமித்த விடுதலை நாட் களுடன் 34 நாட்களுக்கு புனிதஹஜ் யாத்திரைக்கு நாட்டு வெளியேசெல்ல விடு தலை அனுமதிகோரி விண்ணப்பித்த ஆசிரியை ஒருவரின் விண்ணப்பம், போதிய சேமித்தவிடுதலை நாட்கள்(05)குறைவு என்ற காரணத்திற்காக நிராகரிக்கப் பட்டுள் ளது. அனுமதியின்றிச் சென்றால்,பதவி விலகியதாகக் கருதப்படுவார் என்றகாரணத் தால், பதவியா? புனித ஹஜ்ஜா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அவ் ஆசி ரியர் தவித்துக் கொண்டிருக்கின்றார். மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், பயணநாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கிழக்குக்கு மட்டுமுள்ள இப்பிரச்சினைக்கு, பொதுத்தீர்வாக ஹஜ் விடுதலையை சம்பளத்துடனான விசேட விடுதலையாக்கும் வகையில், தாபனக்கோவையின் 23:1 மற்றும் 23:2க்குதிருத்தம் கொண்டுவரக்கோரி, முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கம் விடுத்து கோரிக்கை, அவர்களது செவிகளுக்கு எட்ட வில்லை. முஸ்லிம்களின் உரிமை மீறல்களை பெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என உரக்ககூறும் இவர்களுக்கு இது உரிமை மீறலாகத் தெரியவில்லை போலும்.
இந்தியாவில் திருக்கேதீஷஸ்வரம், மற்றும் புத்தகாயா போன்ற திருத்தலயாத்திரைக்கு நாட்டுக்கு வெளியே செல்ல இந்த அனுமதிப் பிரச்சினை இல்லை. ஏனெனில் அவர்களுக்கு சம்பளத்துடனான சேமித்த விடுதலை ஏதுவும் கோரப்படாமலேயே இதற் கான விசேட விடுதலை அனுமதிக்கப்படுகின்றது. ஆனால் புனித ஹஜ் யாத்திரைக்குச் செல்ல கிழக்கில் இவ்வாறான விசேட விடுதலை அனுமதிக்கப்படுவதில்லை. சம்பளமற்ற விடுதலை மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றது. அதனை அனுமதிப்பதற்காகவே அதே அளவான சம்பளத்துடனான சேமித்த விடுதலை கோரப்படுகின்றது.
2012முதல் அரசாங்க ஊழியர்கள் சேமிக்காத, விடுதலை இல்லாத,சம்பளமற்ற விடு தலை வழங்க முடியுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கிடப்பில் இருக்க, 2013. 04.09ஆம் திகதிய கடிதம் மூலம் பிரதித் தவிசானர் கோரியபடி, விடுதலை வழங்க அமுலாக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் பெற்றுத்தருவாரா? கல்விச் செயலாளரின் 2011.07.21ஆம் திகதிய கடிதத்திற்கு மாறாக,போதிய விடுதலை சேமிக்காத கிழக்கு
அதிபர், ஆசிரியர்களும் அனுமதிபெற்று தம்;ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்களா? ஏன அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
.jpg)
அரச ஊழியர்களில் அதிக விடுமுறைகளை அனுபவிப்பவர்கள் ஆசிரியர்களும் அதிபர்களும் என்றால் மிகை அல்ல அதிலும் பாடசாலை நாட்கள் 200க்கு மேலாகாது என்பது எனது அனுமானம் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தொகை 6645ல் 90வீதமானோர் தங்களது கடமையினை தங்களது வீட்டில் இருந்து ஓரிரு கி.மீ தூர இடைவெளியில் உள்ள பாடசாலையிலயே கடமை செய்கின்றனர்....இந்த நிலமையில் அவர்களால் இரண்டு வருடங்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சேமிக்க முடியாதிருப்பது வினோதமே....கல்முனையின் ஆசிரியர் மர்ஹூம் அலியார் ஏறக்குறைய 40 வருட சேவையின் பின் ஓய்வு பெற்றார்....நான் அறிந்தவரை விடுமுறை எடுக்காமல் சேவை ஆற்றிதன் பேரில் கல்வி அமைச்சினால் கௌரவிக்கபட்டார்...இவரது முன்மாதிரி புனித கடமையை மேட்கொள்ள உள்ள புனிதமான தொழிலை செய்யும் ஆசிரியர்களுக்கும் படிப்பினையாக அமையட்டும்.
ReplyDelete