Header Ads



நாங்கள் ஏன் இன்னும் திணறுகிறோம்..?

(Dr. N. Ariff)

எளிமையான, இலகுவான மார்க்கம் எமது இனிய மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் எளிதான, இலகுவான எக்காலத்துக்கும் பொருத்தமானது என நாங்கள் எல்லோருமே ஏற்றிருக்கின்றோம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது என நினைக்கின்றேன். இவ்வாறானதொரு மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற நாங்கள் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து நிற்பதன் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளுக்கும், அதனை அழிக்க நினைப்பவர்களுக்கும் உரமிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சங்கைமிக்க புனித ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்று மகிழ்வுற்ற நாங்கள், பெருநாளைக் கொண்டாடி மகிழமுடியாமல் திணறுகிறோமே. இது ஏன்? சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுள்ள ஒரே மார்க்கம் எங்களுடைய இஸ்லாம் மார்க்கம் தான் என்று பெருமைப்படுகின்ற நாங்கள், இந்த விடயத்தில் தீர்வில்லாமல்(நிச்சயமாக தீர்விருக்கும்) அல்லது ஒன்றுபட முடியாமல் அல்லல் படுவதற்கான காரணம் என்ன? 

பிறை கண்டு நோன்பை ஆரம்பியுங்கள், பிறை கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள்ள, பிறை தென்படாவிட்டால் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தியாக்குங்கள் என்று படியாத பாமர மக்களுக்குக் கூட விளங்கக் கூடியவாறு மிகவும் இலகுவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டிருக்கும் போது நாங்கள் ஏன் இன்னும் திணறுகிறோம்?

நாங்கள் பூகோள ரீதியாக பிறை தென்படக்கூடிய ஒரு அமைவிடத்திலே இருப்பதன் காரணமாக, வேறொரு நாட்டையோ தேசத்தையோ பின்பற்றுவதற்கு அவசியம் ஏற்படாது. பிறை தென்படாத நாடுகளில் வாழ்பவர்களுக்கு அது அவசியமாகலாம். எனவே இந்த விடயத்திலே முரண்பட இடமிருக்காது. அப்படி முரண்பாடு வருமாக இருந்தால், அது அடிப்படையை விளங்கிக் கொள்ளாத தன்மையாகவே இருக்கும். 

பிறை தெனபட்டதை அறிவித்தும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற பிரச்சினைக்கு தீர்வு இல்லையா? உண்மையில் இதற்கான பிரதான காரணம், பிறைக்குழுவானது கொழும்பை மட்டும் மையப்படுத்திக் கொண்டு எதுவித திட்டமிடலும் இல்லாமல் பிறரில் தங்கியிருப்பதாகும். கொழும்பைத் தவிர வேறு எந்த ஊரிலாவது ஒரு குறித்த அமைப்பை மட்டும் சாராமல், சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பிறைக்குழு இருக்கின்றதா என்றால் இல்லை என்றே கூறலாம். இதன் பிறகாவது, குறைந்தது கரையோரத்தைச் சேர்நத ஊர்கள் அனைத்திலும் இவ்வாறான பிறைக் குழுவை அமைத்து, குறித்த தினத்திலே பொருத்தமான இடத்திலே குறிப்பிட்ட நேர இடைவெளியில் பிறை பார்ப்போமாக இருந்தால் நிறைய குழறுபடிகளை தவிர்க்கலாம். இதன் மூலம், பிறை கண்டது யார், அவரின் நம்பகத்தன்மை என்ன, அது உறுதிப்படுத்தப்பட்டதா போன்ற கேள்விகள் தேவையற்றதாகி விடும்.

இலகுவாக தீர்க்கப்படக்கூடிய இவ்வாறான விடயங்களிலே நாங்கள் அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிக்காமல், வெறுமனே ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்வதால், ஏற்கெனவே சில விடயங்களிலே எம்மைப் பார்த்து நகைக்கின்ற மாற்று சமுகத்துக்கு மேலும் நகைக்க இடம் கொடுப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது. 

அதுமட்டுமல்ல, இம்முறை நடக்கின்ற உயர்தரப் பரீட்சை பற்றியும் பரவலாகப் பேசப்படுகின்றது. இந்தப் பரீட்சைக்கான நேரசூசி நேற்றுத் தீர்மானிக்கப்பட்டு இன்று நடக்கின்ற ஒன்றல்ல. கல்வியமைச்சில் அல்லது கல்வித் திணைக்களங்களில் உயர் பதவிகளில் எந்த முஸ்லிம்களும் இல்லையா? இந்த நேரசூசியின் படி இன்றைய இந்தமாதிரியான பிரச்சினை வர இடமிருக்கிறது என்பதை உரியவர்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்தி (அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனாவது), விடுமுறை தினத்துக்கு முன், பின்னான இரண்டு நாட்களிலும் பரீட்சை நடைபெறாமல் முயற்சித்திருக்கலாம் அல்லவா? இறுதி நேரத்தில் நாங்கள் அரசாங்கத்தை குறைகூறுவதில் அர்த்தமில்லையே.

இதுதான் எமது சமுகத்திலுள்ள குறைபாடு. பொதுநலனில் யாருக்குமே அக்கறையில்லை. பொதுவான பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதற்கு எவரும் முன்வருவதில்லை. அப்படி யாரும் முன் வநதாலும் கூட அவர்களுக்கு ஒத்துழைப்பு கூடக் கொடுப்பதில்லை. ஆனால் விதண்டாவாதங்களை முன்வைத்து குட்டையைக் குழப்பிவிடுவதில் சந்தோஷமடைவார்கள். 

எனவே, எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்டவர்கள் பொதுவான பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்கக் கூடியவாறு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வரவேண்டும். எமது முஸ்லிம் சமுகம் தங்களுக்குள்ளே விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து தலை நிமிர்ந்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

6 comments:

  1. Good advice. Please read and follow it correct your faults.
    Discuss complecated issues with others.
    Talk with bright mind.
    Do not make any nuisance Destruction for community in vain in futrue.
    Please look into consider the situation that our enimies what they do with our Islamic countries. Study well and lead our poor people in a peacefull way.
    Do not consider your selfishness only.

    ReplyDelete
  2. Only the solution: we need an intellectual body with Astrologists,geographies, lawyers,doctors,engineers....etc for ACJU to guide our society for varies problems facing in sri lanka while ACJU got only Arabic books knowledge which is far from modern astrology and geographic knowledge. Also Islamic banking there got no even a single Alim to Analyze and re search but we got intelligent from our society but not an Alim and non Muslims too. Do ACJU will consider on an intellectual body??? Or follow only some Arabic books written 500 years ago??

    ReplyDelete
  3. Dr. Ariff, thank you for sharing such a nice piece of advice.

    ReplyDelete
  4. இதில் ஒரு சதி நிட்சயம் இருக்க வேண்டும்

    ReplyDelete
  5. Very usefull advice. Will they consider?

    ReplyDelete
  6. Good, there is a truth arisen, that at least one ulama should nominate for the ACJU mother body from every village all over the island, and the crescent committee should formed in the coastal Eastern side of the country.... well ...

    ReplyDelete

Powered by Blogger.