Header Ads



ஷீஆக்களின் சீர்கேடு (பகுதி 1) ரமழான் அறிவுப் போட்டி கேள்வி 24


ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம், பிரிவு என்று அர்த்தமாகும். அலி(ரலி) அவர் களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட் டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத் தினர் ஷஷீஅத்து அலி| என அழைக்கப் பட்டனர். அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும் பலுக்கும் எத்தொடர்புமில்லை என்பதால் நாளடைவில் ஷஷீஆ| என்று அழைக்கப்ப டலானார்கள். உண்மையில் அத்து அலி என்பதை விட ஷஷீஅத்து இப்னு ஸபா| என்று அழைப்பதே பொறுத்தமானது.

ஷீஆகூட்டத்தின் தலைவன் அப்துல் லாஹ் இப்னு ஸபா ஒரு யூதன். இஸ்லாத் தைக் ஏற்றுக் கொண்டதாக நடமாடி முஸ் லிம்களுக்குள் ஊடுருவினான். இஸ்லாத் தின் நம்பகத் தன்மையை சிதைக்கும் நோக் கமாக இவன் கையாண்ட பிரச்சாரங்களில் ஒன்று, அலி(ரலி) அவர்களுக்கும் நபிகளா ரின் குடும்பத்தினருக்கும் முன்னுரிமை வழங்கி அதிகாரத்தை அவர்களிடம் கொடு த்து விட வேண்டும் என்பதே யாகும். இவ னது பிரச்சாரத்தின் போலித்தன்மையை அலி(ரலி) உட்பட அனைத்து சஹாபாக்க ளும் நன்கு புரிந்திருந்தனர். எனவே இவனு டைய சூழ்ச்சியில் சஹாபாக்கள் சிக்கிவிட வில்லை. (அஹ்லுல் பைத்களுடைய நிலை என்ன அவர்களுடைய அந்தஸ்த்துக்கள் என்ன? சஹாபாக்கள் அவர்களுக்கு கொடு த்த மதிப்பும் மரியாதையும் என்ன என்பதை நாம் தன்யான தலைப்பில் நோக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.)

ஷஷமரியாதைக்குரிய சஹாபாக்களான அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் அலி (ரலி) யிடமிருந்து அதிகாரத்தை தட்டிப் பறித்த அநியாயக்காரர்கள்; தாங்கள் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டார்கள், அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டா கட்டும். என்று அப்துல்லாஹ் இப்னு சபா பிச்சாரம் செய்வதை கேள்வியுற்ற அலி (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவன் பிடித்துவரப் பட்டதும் தாம்; செய்த காரியத்தை ஏற்றுக் கொண்டான். அப்போது அலி(ரலி) அவனை தீயிலிட்டு கொன்று விடுமாறு உத்தர விட்டார் கள். இதைக் கேட்ட மக்கள் அமீருல் முஃமினீனே! உங்களது நேசத்தின்பால் அழைப்பு விடுக்கக்கூடிய மனிதனை கொலை செய்யப் போகிறீர் களா? என்று கேட்டார்கள். அவனை மதா இன் எனும் பகுதிக்கு அலி(ரலி) நாடு கடத் தினார்கள். இச்சம்பவத்தை அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைத் என்ற அறிஞர் ஷஇவாருன் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ் ஷீஅத்தி என்ற நூலில் குறிப்பிடுகிறார் கள். மேலும் கிதாபுர் ரவ்லா மினல் காபி பகாம் 2, பக்கம் 246 என்ற நூலிலும் பதி வாகியுள்ளது.)

இதன் பின்பும் இவனது பிரச்சாரம் ஓய்ந்து விடவில்லை. அலி (ரலி) கொலை செய்யப்பட்டபோது அலி மரணிக்கவில்லை. அவர் வானத்தின் பால் உயர்த்தப்பட்டுள் ளார் அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையைக் கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர் மேகத்தில் இருக்கிறார். இடி அவரது ஓசை, மின்னல் அவரது பார்வையாகும்' என அப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான். ஷீஆக்களின் இக் கொள் கையை ஸபஈய்யா என அழைக்கப்படுகி றது. (நூல்: பிரகுன் முஆசிரதுன் தன்ஸிபு இலல் இஸ்லாமி, பாகம் 01, பக்கம் 145, அல்பிரகு பைனல் பிரக் பக்கம் 234)

அலி(ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன் மையை உரிமை கொண்டாடும் கூட்டமும் ஷீஆவில் உருவானது. இக்கூட்டத்தை நஸீரியா எனப்படும். (இக்கூட்டமும் இன்று சிரியாவில் ஆட்சி செய்கிறது.) இது தவிர ஸைதியா, இமாமியா, இஸ்னா அஷரியா, இஸ்மாயிலியா, பாஹாயியா என பல பிரிவுகள் ஷீஆக்குள் தோற்றம் பெற்றன.

தங்களுடைய அபத்தமான பிரச்சாரங் களை முன்னெடுத்து இஸ்லாத்தின் அடிப் படைகளை ஒன்றன்பின் ஒன்றாக  தகர்ப்ப தில் தீவிரம் காட்டிய இக்கூட்டம் தங்க ளுடைய போலித்தன்மை வெளிப்படக் கூடாது என்பதற்காக ஷஷஅலி(ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் (அஹ்லுல் பைத்) மீதும் நேசத்தை காண்பிப்பது' என்ற முகமூடியை அணிந்து கொண்டு போலி ஹதீஸ்களை உருவாக்கினர்.

அலி(ரலி) அவர்களும் அவர்களது குடும் பமும் விஷேடமான மண்ணால் அல்லாஹ் வினால் படைக்கப்பட்ட படைப்புகள் என்றும் அவர்கள் மனித சமுதாயத்தில் தனித்து வமானவர்கள் என்றும் அலி(ரலி)க்கு வந்த நபித்துவம் முஹம்மத் நபிக்கு ஜிப்ரீல்(அலை) கொடுத்து விட்டுப் போனார் என்றும் வாதிட ஆரம்பித்தனர். 

இதுபற்றிக் கூறும்போது: அல்குர் ஆனை (வஹீயை) அலிக்கு கொடுக்கு மாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பிவைத் தான். அலியும் முஹம்மதும் தோற்றத்தில் ஒன்றாக இருந்ததனால் அலிக்கு கொடு க்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப் போனார்' என்கிறார்கள்.(நூல்: அல்மனீயா வல்அமல். பக்கம். 30) ஷீஆவின் இக்கொள்கையை குராபிய்யா எனப்படும். 

அலிக்குரிய நபித்துவ உரிமையை முஹம் மத் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுக்க வில்லை. அல்லாஹ்வும் ஜிப்ரீலும் உரிய முறை யில் நியாயம் தீர்க்கவுமில்லை; என்றே இன்று வரை ஷீஆக்கள் குற்றம் சுமத்து கிறார்கள். எனவே முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனையும் ஹதீஸ்களையும் மொத்த மாக நிராகரித்ததோடு அவர்களுக்கென கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

அத்தோடு நிற்கவில்லை. இறை நம்பிக் கையின் (ஈமானின்) அடிப்படை கோட்பாடு களையே மாற்றி விட்டு புதிய கலிமாவை கொண்டு வந்தார்கள். ஷஷஇஸ்லாம் ஐந்து விடயங்களின்மீது நிறுவப்பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4.ஹஜ் 5.விலாயத்து அலி. (அலியின் தலைமைத்து வத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்றார்கள். (நூல்: அல்காபி)

நபி(ஸல்) அவர்கள் போதித்த உலக முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்ற கலிமாவுக்கு இது முரணானதாகும். விலாயத்து அலி ஈமானின் அம்சம்| என்று ஒருபோதும் அல் லாஹ்வும் அவனது தூதரும் போதித்த தில்லை. அலி(ரலி) பெயரில் ஒரு மதத்தை உருவாக்குவது என்ற நிலையில் இவர்கள் கண்டுப் பிடித்த கலிமா தான் இது. இக்கலி மாவின் மூலம் இவர்களைத் தவிர ஏனைய வர்கள் காபிர்கள் என்று முடிவு கட்டி னார்கள்.

ஸஹாபாக்களை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்தவர்கள், ஷமிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அபூதர் அல்கிபாரி (ரலி) ஸல்மா னுல் பாரிஸி (ரலி) ஆகியோரைத் தவிர எல்லா ஸஹாபாக்களும் காபிர்களாகி விட்டனர் என்றார்கள். (நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245)

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தங்களது உயிர், செல்வம் அத்தனையும் அர்ப்பணித்து சித்திரவதைகள் பலதை சந்தித்து பிறந்து வளர்ந்த மண்ணை விட்டும் வெளியேறி ஹிஜ்ரத்கள் செய்து யுத்தங்களை எதிர் கொண்டு மரணித்த உத்தம ஸஹாபாக் களை -அல்லாஹ்வினாலும் நபி(ஸல்) அவர் களாலும் சுவர்க்கத்தைக் கொண்டு நன் மாராயம் சொல்லப்பட்ட ஸஹாபாக்களை காபிர்களாக (முர்தத்களாக)வும் நயவஞ்சகர் களாகவும் ஷீஆக்கள் அன்று முதல் இன்று வரை பேசிவருகின்றனர். 

ஆட்சி அதிகாரம் அலி(ரலி)க்குரியது என்று கூறியவர்கள் பிறகு அலிக்கு  மட்டு மன்றி அவரது குடும்பத்தினருக்கும் ஷீஆ வின் பரம்பரையில் வந்த பன்னிரெண்டு இமாம்;களுக்கும் அந்த அதிகாரம் உரியது என்றும் வாதிட்டனர்.

முஹம்மது இப்னு அலி ஹுசைன் இப்னு பாபவைஹி என்கின்ற ஷீஆக்காரர் கூறும்போது ஷஷஎவர் அலி (ரலி)யின் தலை மைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (எமது) இமாம்களது தலைமைத்து வத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட நபித்துவத்தை மறுத்தவர் போலாவார்.

எவர் அலி (ரலி)யின் தலைமைத்து வத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக் குப் பின்னால் வந்த இமாம்களது தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களின் நபித்துவத்தையும் ஏற்றுக்கொண்டு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்க மறுத்த வன் போலாவான் என்றார். (நூல:; ரிஸா லாதுல் இஃதிகாதாத் பக்கம் 103)

எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத் தையும் அவருக்குப் பின்னால் வந்த (ஷீஆ) இமாம்களின் தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர்கள் நிரந்தர நரகவாதி கள் என்பதை அறிவிப்பதுதான் ஷிர்க், குப்ர் என்ற வார்த்தையின் விளக்கமாகும் என முல்லா முஹம்மது பாகிர் மஜ்லிஸி என்ற ஷீஆக் காரர் குறிப்பிடுகிறார். (நூல்: பிஹாருல் அன்வார் 23ஃ90)

ஷீஆ என்கின்ற கொள்கையை ஏற் காமல் இருக்கும் எல்லா முஸ்லிம்களும் ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இன்று வரை அனைவரும் காபிர்கள் நரகவாதிகள் என்பது ஷீஆக்களின் உறுதியான கொள் கையாகும். ஆனால் முஸ்லிம்களுடன் பேசும்போதும் பழகும் போதும் ஷீஆவும் சுன்னியும் ஒன்றுதான்|| எனக் கூறி தங்கள் கொள்கையின விபரீதம் மக்கள் புரியா வண்ணம் நடிப்பார்கள். இவ்வாறு நடிக்க வேண்டும் என்பதே இவர்களது மதக் கொள்கையாகும். இதனை ஷஷதக்கிய் அல்லது துக்யா எனப்படும். ஷீஆவின் கொடூரம் பற்றி அறியாத அப்பாவி முஸ்லிம் கள் மாட்டிக் கொள்வதோடு அவர்களை ஷஷீஆ முஸ்லிம்| என அழைக்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்து விட்டு சஹாபாக்களை காபிர்கள் என்ற கொள்கையுடையவர்கள் எப்படி முஸ்லிம் களாக இருக்க முடியும்?

ஷீஆவின் ஆன்மீகத்தின் குருபீடமாக அலி (ரலி) அவர்களையும் அவர்களது குடும் பத்தினரையும் சித்தரித்ததுடன் அவர்களை தனிமனித வழிபாட்டுக்குரிய வர்களாகவும் ஆக்கினார்கள். 

தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்களை முன்வைத்தால்தான் சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக பின் வரும் போலி ஹதீஸ்களை உருவாக்கி னார்கள்.

நானும் இம்ரானுடைய மகன் ஹாருனும் ஸகரியாவின் மகன் யஹ்யாவும் அபூ தாலிபின் மகன் அலியும் ஒரே மண்ணிலி ருந்து படைக்கப்பட்டோம். (நூல்: அல்பவா இதுல் மஜ்மூஆ பில்அஹா தீஸில் மவ்லூஆ பக்கம்.342)

நானும் அலியும் ஒரே ஒளியிலிருந்து படைக்கப்பட்டு ஆதம் (அலை) படைக்கப் படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் அர்ஷின் வலது பக்கத் தில் இருந்தோம். (அல் பவாஇதுல் மஜ்மூஆ பில்அஹாதீஸில் மவ்லூஆ பக்கம்.343)

ஆதம் (அலை)தவறிழைத்தப்போது, யாஅல்லாஹ்! முஹம்மதின் பொருட்டாலும் அலி பாதிமா ஹஸன் ஹூசைன் ஆகியோ ரின் பொருட்டாலும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று மன்னிப்பு கேட்ட போது அல்லாஹ மன்னிப்பு வழங்கினான். (நூல்: அல்மவ்லூஆத் லிஇப்னி ஜவ்ஸி)
அஹ்லுல்பைத் எனும் எனது குடும்பம் நூஹ் நபியின் கப்பலைப் போன்றது. யார் அதில் ஏறினாரோ அவர் வெற்றிப் பெற்றார். யார் ஏறவில்லையோ அவர் அழிந்து விட்டார். (நூல்: மின்ஹாஜுல் கராமா பக்கம் 172)

எனக்குப் பின்னால் பன்னிரெண்டு இமாம்கள் இருக்கிறார்கள். அவர்களின் இறுதியானவர் மஹ்தியாவார். அவர்களின் தலைவர் அலி (ரலி)ஆவார்.அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்ட வராவார். அவர்களுக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்த வராவார்;. அந்த பன்னிரெண்டு இமாம்களில் ஒருவரைக்கூட நிராகரித்தவர் என்னை நிராகரித்தவராவார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதத் பக்கம் 103)

பன்னிரெண்டு இமாம்களும் எனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எனது விளக் கத்தை (அறிவை) அல்லாஹ் அவர்களுக் குக் கொடுத்துள்ளான். அவர்கள் எனக்குப் பின்னால் கலீபாக்களாக இருப்பார்கள். அவர்கள் என்னால் வஸீயத்து செய்யப்பட்ட வர்களாகவும் எனது பிள்ளைகளாகவும் எனது பரம்பரையைச் சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள்.அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்;டவராவார். அவர்களுக்கு மாறுசெய்பவர் எனக்கு மாறுசெய்தவரா வார். வானம் பூமியின் மீது வீழ்வதை விட்டும் அவர்கள் மூலமாக அல்லாஹ் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் பூமியில் வாழ்வதனால்தான் அல்லாஹ் பூமியைப் பாது காத்துக் கொண்டிருக்கிறான். (நூல்: யவ்முல் இக்லாஸ் பீ லில்லில் காஹிமில் மஹ்தி பக்கம் 

கேள்விகள்

 கேள்வி 1;. அலி (ரலி) அவர்கள் மரணிக்கவில்லை அவர் வானத்தில் உள்ளார் என்று கூறிய ஷீஆவின் தலைவன் யார்?

கேள்வி – 2. அலி (ரலி) அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மத் நபிக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டார் என்று எந்த நூலில் எழுதி வைத்துள்ளார்கள்.

1 comment:

  1. இலங்கையில் அதிகரித்து வரும் ஷீஆக்களின் யூத சீர்கேடுகளுக்கு மத்தியில் இது ஒரு ஆக்கபுர்வமான விளக்கம்

    ReplyDelete

Powered by Blogger.