மஹ்தி அலைஹிஸ்ஸலாம் (இறுதிப் பாகம்)
'மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார், அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்' என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவூது 4272)
மேலுள்ள ஹதீதின் பிரகாரம், மஹ்தி (அலை) அவர்கள் வரக்கூடிய சூழல், கொடுமையான ஓர் சூழலாகும். இன்றைய காலகட்டத்தை நாம் எடுத்து நோக்குகின்ற பொழுது எங்கு பார்த்தாலும் அநியாயமும் அக்கிரமமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் சொல்லொணா சோதனைகளை உலகெங்கும் அனுபவிக்கின்றார்கள். துனிசியாவில், சிரியாவில், எகிப்தில், பர்மாவில் ஏன் இலங்கையில் கூட இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சோதனைகள். இப்படி பூமியெங்கும் “பித்னா” உள்ள ஓர் காலகட்டத்தில்தான் இமாம் மஹ்தி (அலை) வெளிப்படுவார்.
ஆனால், அவர் வெளிப்படப் போகும் காலம் எந்த மனிதருக்கும் தெரியாது. அப்படி யாராவது கூற முற்பட்டால் அது பொய்யாகத்தான் இருக்கும். அதை யூகிப்பதும் முடியாத காரியம். பித்னா பூமியெங்கும் பரவியிருக்கின்றது, ஆகவே, மஹ்தி (அலை) வெளிப்படுவார் என்று கூட ஆரூடம் கூற முடியாது. அதை அறிந்தவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவன்தான்.
அவர் எங்கு.வெளிப்படுவார் என்ற விடயம் பற்றி ஆய்வுகள் மூலம் மார்க்கவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்னு மாஜாவில் உள்ள பலமான ஹதீத் ஒன்றின் பிரகாரம், முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாஹ் பிரதேசத்தில் ஜுர்ஹும் கோத்திரத்தினரால் மறைக்கப்பட்ட புதையல் ஒன்றை எடுப்பதற்கு மூன்று இளவரசர்கள் யுத்தம் செய்து ஈற்றில் ஒருவரும் வெற்றி அடைய மாட்டார்கள். அப்போது, கிழக்கலிருந்து கறுப்புக் கொடிகள் (ஒரு படை) வரும். எந்த தேசமும் கண்டிராத கடுமையான போர் மூளும்.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீத் ஒன்றின் பிரகாரம், கறுப்புக் கொடிகளைக் கண்டால், மஹ்தி (அலை) இருப்பார் (யாருடன் என்று குறிப்பிடப்படவில்லை) என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், தவழ்ந்தேனும் அவரிடம் சென்று பையத் செய்து கொள்ளுங்கள் என்று ரசூல் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூது கிரந்தத்திலே இடம்பெற்றுள்ள பலமான ஒரு ஹதீதின் பிரகாரம், கலீபா ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து ஓர் உள்நாட்டு யுத்தம் மூளும். அப்போது, எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மதீனாவிலிருந்து தப்பித்து பாதுகாப்புத் தேடி மக்காவிற்கு வருவார். அவர் மக்காவில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மக்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து, கட்டாயப்படுத்தி, கஃபாவில் வைத்து, ஹஜ்ருல் அஸ்வத் மற்றும் மகாமு இப்றாகீம் ஆகியவற்றிற்கிடையே பையத் செய்வார்கள்.
எனவே, இமாம் மஹ்தி (அலை), மதீனாவிலிருந்து மக்காவிற்கு வருவார்கள். கஃபாவில் இளவரசர்கள் புதையல் ஒன்றிற்காய் யுத்தம் செய்வார்கள். கிழக்கிலிருந்து கறுப்புக் கொடிகளுடன் ஓர் படை வரும். அப்போது மக்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்களைத் தேடிக் கொண்டுவந்து பலவந்தப்படுத்தி பையத் செய்து, இந்த யுத்தங்களுக்கு ஓர் தீர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.
எனவே, இமாம் மஹ்தி (அலை), தானாக முன்வந்து தன்னை மஹ்தி என்று அழைக்க மாட்டார். பதவியை, தலைமைத்துவத்தை விரும்ப மாட்டார். அவர், யுத்தம் நிறைந்த ஓர் சூழலில், மக்களால், அடையாளப்படுத்தப் படுவார். உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஓர் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று திரட்டுவார். அவருடைய ஆட்சி மிகவும் செழிப்பானதாக இருக்கும். எல்லோருக்கும் பணத்தினை அவர் வாரி வழங்குவார். விளைச்சல் பெருகிக் காணப்படும். எல்லோரும் தன்னிறைவோடு வாழ்வார்கள். அவரின் ஆட்சி ஏழு வருடங்களாகும். அந்த ஏழு வருடங்களும் செம்மையான ஆட்சி நிகழும்.
அப்போதுதான் தஜ்ஜாலின் வருகையும் நிகழும். ரசூல் (ஸல்) எதனைக் கொண்டு அதிகம் எச்சரித்தார்களோ, அது நிகழும். இமாம் மஹ்தி (அலை), தஜ்ஜாலை எதிர்த்துப் போரிடுவார்கள். அதற்காக, அவர் டமஸ்கஸில் படையுடன் சென்று ஓர் பஜ்ருத் தொழுகைக்கு தயாரகும் போது ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இரண்டு மலக்கு மார்களின் சிறகில் இறங்குவார்கள். தொழுகைக்காக இமாம் செய்ய தயாராக இருந்த மஹ்தி (அலை), ஈஸா (அலை) அவர்களை இமாம் செய்யுமாறு பணிப்பார்கள். அப்போது, ஈஸா (அலை) அவர்கள் மறுத்து விட்டு மஹ்தி (அலை) அவர்களைத் தொடர்ந்து இமாம் செய்யுமாறு பணித்துவிட்டு பின்னால் நின்று தொழுவார்கள்.
இந்த சம்பவத்திற்கு மேலதிகமாக, மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எந்த ஆதாரபூர்வமான ஹதீதுகளும் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் ஈஸா (அலை) அவர்களால் தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஏனைய நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு இறங்கி ஆட்சி செய்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சீராக்கி வைப்பது மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலாகும்.
உலக அழிவின் சிறிய அடையாளங்களையும் பெரிய அடையாளங்களையும் இணைக்கும் சங்கிலியாக அமையப் போகும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும்.
(முற்றும்)
(எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பல அறிஞர்களின் பயான் மற்றும் ஆவணங்களின் துணையுடன், இயன்றளவு ஸஹீஹான ஹதீதுகளின் பிரகாரம் இது தொகுக்கப்பட்டுள்ளது. அறியாமையினால் ஏதும் தவறுகள் நிகழ்ந்திருப்பின் அல்லாஹ் மன்னித்தருள்வானாக, ஈருலகிலும் வெற்றியாளர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக. ஆமீன்)
Part 3
http://www.jaffnamuslim.com/2013/07/3_2632.html
Part 3
http://www.jaffnamuslim.com/2013/07/3_2632.html

the black flags 4m east is the thalibans coz itz known in some hadhees as the black flags cuming 4m khurasaan[Afghanistan]
ReplyDeleteجزاك الله خيرا
ReplyDeleteநன்றி இந்த அருமையான கட்டுரைகள் வழங்கியதக்கு,இனி வரும் காலங்களிலும் இவ்வாறான கட்டுரைகள் இன்னும் இங்கு வந்து தருவிர்கள் என்று எதிபார்க்கிறோம்.masahallah!
ReplyDeletereally really very interesting and nice article...normally i do not like to read any long article...but from the beginning i got interest read this article...thank you so much...kindly post this all article to gather in your special news area
ReplyDeleteஇவ்வாறான கட்டுரைகள் jaffnamuslim.com இல் இடம்பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது..
ReplyDeleteஇதனை எழுதியவரிற்கு அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக..
Jazakallah
ReplyDeleteUseful
ReplyDeleteஇவ்வாறான கட்டுரையை வழங்கியமைக்கு தொகுத்தவருக்கும் பிரசுரித்த யாழ் முஸ்லிம் இணையத்துக்கும் நன்றி இவ்வாறான கட்டுரைகளுக்கு இனி வரும் காலங்களிலும் முக்கித்துவம் கொடுக்க வேண்டும் என்பது எமது அவா
ReplyDeleteجزاك الله خير
ReplyDeleteJazzakallahu hairaha
ReplyDeleteம்3