நிந்தவூர் வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிரின் விளக்கம்.
(யு.எல்.எம். றியாஸ்)
2013.07.21ம், திகதி எமது இணையத்தில் வெளியான நிந்தவூர் வைத்தியசாலை கவனிக்குமா செய்தி தொடர்பாக நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்,சி,எம், மாஹிரின் விளக்கம்.
வைத்தியசாலையானது முற்றுமுழுதாக சேவையின் நோக்காக செயற்படும் ஒரு உன்னத இடமாகும். அதிலும் குறிப்பாக அரசாங்க வைத்தியசாலையானது 24 மணிநேரமும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு உன்னத இடமாகும். அந்த வகையில் வைத்தியர்களும் அத்துரைசார்ந்தவர்களும் பெரும் தியாகத்துடனும்,அர்பணிப்புடனும் மக்களுக்கு தன்சேவையை வழங்கி வருவதை நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.
இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவமானது முற்றிலும் வைத்தியசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிலவிசமிகளால் நடாத்தப்பட்ட விடயமாகும்.
அதாவது குறித்த சம்பவதினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் அன்றையதினம் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் மதியம் இரண்டு மணிக்கு கடமையை முடித்து சென்றுவிட்டார். மறு கடமைக்கு உரிய வைத்தியர் வருவதற்கிடையில் சில நிமிடங்களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடமை வைத்தியர் வைத்தியசாலைக்கு வந்துகொண்டிருக்கும் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து அனுமதித்ததும்உடனடியாக வைத்திசாலையில் அவருக்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் உரிய கடமை வைத்தியர் வைத்தியசாலைக்கு வருகைதந்துவிட்டார்.
இதற்கிடையில் விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவர்கள் வைத்தியசாலையின் வைத்தியசேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமிட்டு வைத்தியசாலையின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட விதமானது முழு வைத்தியசாலையின் நடவடிக்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கை அமைந்திருந்தது.
இதனால் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் , தாதியர்கள் உட்பட வைத்தியசாலை வட்டாரத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
இதேவேளை ஆரம்பகட்ட சிகிச்சையை குரித்தனபருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் மேற்கொள்ளபட்டது சாதாரணமாக அவசர சிகிச்சைப்பிரிவில் நோயாளியைத்தவிர வேறு எவரையும் அனுமதிப்பதில்லை . இருந்தபோதும் சிலர் உள்நுழைந்து அவசர வைத்திய சேவைப்பிரிவில் சேவையாற்றிக் கொண்டிருந்த வர்களிடம் சத்தமிட்டு உரத்த தொனியில் எச்சரித்துள்ளார்கள். இதனால் குறித்த தினம் வைத்தியசாலை நிர்வாகம் பெரும் அச்சத்தை எதிர்கொண்டது. இதற்கிடையில் குறித்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது
அவ்வேளையில் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையின் அம்பிலன்ஸ் வண்டியின் சாரதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை பெற்றிருந்தார். வாரத்தில் ஒருநாள் அம்பிலன்ஸ் வண்டி சாரதிகளுக்கு விடுமுறை வழங்குவது வழமை. அந்த வகையில் குறித்த சாரதிக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது அதனால்தான் பக்கத்து கிராமமான காரைதீவு வைத்தியசாலையில் இருந்து அம்பிலன்ஸ் வண்டி பெறப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நோயாளி அனுப்பி வைக்கப்பட்டார்,
எமது வைத்தியசாலையானது அம்பாறை மாவட்டத்தில் பலராலும் போற்றத்தக்க வைத்திய சேவையையும் ,அதனோடு இணைந்த சேவைகளையும் செய்து பல தேசிய சான்றுகளை பெற்றுக் கொண்டமை யாவரும் அறிந்த விடயமே
ஆனால் இதை பொருக்க முடியாத சிலருடன் (சுலைமான் ராபி ) என்பவருக்கு பிழையான தகவல்களை வழங்கியதுடன் தனது தகப்பனின் அரசியல் இலாபத்தை இரட்டிப்பாக்கும் வகையில் குறித்த சம்பவத்தை பிழையாக சித்தரித்து முழுமையான சரியான தகவல்களை பொறுப்பு வாய்ந்தவர்களிடம் பெற்றுக்கொள்ளாமல் அரை குறையாக தனக்கு கிடைத்த சிறு தகவல்களை வைத்து எழுதிய விடயமானது ஊடக தர்மத்தை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும்
இந்த நடவடிக்கையானது வைத்தியசாலையின் நடவடிக்கைக்கும் சேவைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது இவ்வைத்தியசாலையின் ஒட்டுமொத்த சேவையையும் கொச்சைப்படுத்திய நிலைமையைக் கொண்டுவந்துள்ளது.
ஒரு சிறு தவறை வைத்துக்கொண்டு முழு வைத்தியசாலையின் நடவடிக்கையும் பிழையானது என்று நினைப்பது முற்றிலும் தவறானதாகும். என நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி,எம், மாஹிர் தெரிவித்தார்.

மரியாதைக்குரிய வைத்தியர் அவர்களே!
ReplyDeleteஉங்களுடைய நிருவாகத்தில் நிந்தவூர் வைத்தியசாலை எமது பகுதியில் எந்த வைத்தியசாலையும் பெற்றிராத விருதுகளை பெற்றுள்ளது யாவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை ஆகும். விருது வழங்கியது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல அதன் சிகிச்சை முறை,வெளி நோயாளர் எண்ணிக்கை போன்ற பல அம்சங்களுக்காக என்பதை அப் பகுதி மக்கள் உணராமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. குறை கூறுபவர்கள் அதனை தொழிலாக கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு நான் கூறுகிறேன் தினமும் காலை வேளை சென்று பார்த்தல் அங்கு உள்ள சனதிரளும் அவர்களிடம் கேட்டல் விளங்கும் அங்கு என்ன நடக்கிறது என்று,
மேலும் வைத்தியசாலையில் நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கு கடமை புரியும் சிற்றூழியர்கள் (minor staff ) அதிகளவு காரணமாக இருக்கிறார்கள்.நீங்கள் அவர்களுக்கு அவர்களுடைய கடமை என்ன என புரிய வைக்க வேண்டும், அவர்களின் ஆதிக்கம் இங்கு நிறைந்து உள்ளது. அவர்களுடைய கடமை தரம் தாதியர்களையும் வைத்தியர்களையும் விட குறைந்ததை நினைவு படுத்த வேண்டும், அண்மைய காலமாக தாதிமாரை ஆதிக்கம் செலுத்தும் பல வினோத சம்பவங்கள் உங்கள் வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது அந்த நேரத்தில் அங்கு இருந்த நோயாளிகளின் மனதை வேதனை படுத்தியது. தாதிமார் வைத்தியர்கள் இவர்களை தமது அதிகாரத்தை கொண்டு பயன்படுத்தாமல் இருப்பதனாலே தான் இவை, எனவே இவர்களை தமது அதிகாரத்தை பயன்படுத்தும் ஆளுமை தோற்றுவிக்க நடவடிக்கை எடுங்கள், செய்யும் தொழிலை எவ்வாறான தடை வந்தாலும் பரவா இல்லை என்று அல்லாஹ்வுக்காக மட்டும் என்று செய்யுங்கள், நிந்தவூர் மக்களும் உங்களை இலக்க தயாராக இல்லை,சில சுயநலவாதிகளை தவிர,
அல்லாஹ் உங்களை போன்ற நேர்மையானவர்கலின் ஆயுள் காலத்தை நீடித்து எமது சமூகத்துக்காக பாடுபட தவ்பீக் செய்வானாக! ஆமீன்!!!!!
முதலில் 21.07.2013ம் திகதி வெளியாகிய "நிந்தவூர் வைத்திய சாலை கவனிக்குமா? என்ற செய்திற்கு முக்கியத்துவம் கொடுத்து Dr MCM மாஹிர் அவர்கள் நெய்யப்பட்டிருக்கின்ற உப கதையாகும். உண்மையில் ஒரு வைத்தியர் அதுவும் DMO அவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைதெரிவித்திருக்கிறார். ஆனால் இவைகள் அவரின் கருத்தாக இல்லாமல் இந்த செய்தியை வடிவமைத்த சகோதரர் ULM றியாஸ் அவர்களின் சொந்தக் கருத்தாகும் என்பது அவரின் எழுத்தறிவின்மை பண்பின் மூலமாக நன்கு புலப்படுகிறது.
ReplyDeleteஎன்னால் எழுதப்பட்ட இந்த செய்தியானது யாருக்காகவும் வக்காலத்து வாங்கவோ அல்லது யாரையும் மட்டம் தட்டவோ எழுதப்படவில்லை என்பதனை முதலில் நன்கு உணர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் குறுப்பிட்ட தவறை சுட்டிக்காட்டுவது ஒரு ஊடகவியலாளனின் கடமை. அதனைத்தான் செய்தேன் சகோதரரே! நீங்கள் வெளியில் வசிக்கும் ஒரு சகோதரர். உங்களுக்கு சம்பவ தினம் பற்றிய அறிவும், போதிய ஆதாரமும் உள்ளதா?? அது இருக்க எனது தந்தைக்கு அரசியல் இலாபத்தினை இந்த சம்பவத்தின் மூலமாக இரட்டிப்பாகும் தேவை இல்லை. ஏனென்றால் Dr MCM மாஹிர் அவர்களுக்கு வந்த இடமாற்றம் இதற்கு சான்று பகிரும் !! மேலும் இந்த செய்தி விடயத்தில் எவ்வித அரசியல் சாயமும் பூசப்படவில்லை. அப்படி சாயம் பூசப்ப்படுமாக இருந்தால் அது அநாகரீகமாகப் போய்விடும். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது சான்றோர் வாக்கு
இது ஒரு புறமிருக்க குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது எந்த DOCTOR உம் இல்லை. அதனால் அங்கிருந்த ஒரு அரச சேவையாளர் குறிப்பிட்ட Dr (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) க்கு அவரின் Mobile மற்றும் Land Phone ஆகியவைகளுக்கு call எடுத்தும் அவர் பதிலளிக்காமல் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த Mobile இலக்கதிற்கு அழைப்பு எடுத்ததன் பிற்பாடு நடு நடுங்கி வைத்திய சாலை பக்கம் ஓடி வந்தார்... ஆனால் அன்றைய தினம் DMO அவர்கள் கடமையில் இல்லை. மேலும் சம்பவத்தில் பாதிக்கபடவருக்கு முறையான சிகிச்சை வழங்காமல் அவரின் ஈரல் பகுதியில் இரத்தம் கட்டியான நிலையில் தற்ற்போது அம்பாற வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பது தங்களுக்கு தெரியுமா?? இதேவேளை இந்த விடயம் (ACCIDENT) சம்பந்தமாக கடந்த 23.07.2013ம் திகதி வைத்திய சாலையில் விஷேட கூட்டம் ஒன்றினை கூட்டி இந்த செய்தி சம்பந்தமாக விஷேட கவனம் செலுத்தி மன்னிப்பு கேட்ட சம்பவங்கள் சகோதரர் ULM றியாஸ் அவர்களுக்கு தெரியுமா???? பல் பிடுங்குபவர் பல்லை மட்டும்தான் பிடுங்க வேண்டும்! நுகர்ந்து பார்க்கக்கூடாது!!! நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் வெளி நாட்டு வேலையை பார்க்க வேண்டும்!!
பொதுவாக அந்த விபத்து சம்பவம் உங்களுக்கோ அல்லது வைத்தியசாலை ஊழியர்களின் பிள்ளைகளுக்கோ நடந்தால் அதன் கதி என்னவாகியிருக்கும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு புறமிருக்க Ambulance சாரதி அன்றைய தினம் விடுமுறை எடுத்ததாக DMO அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அரச வைத்தியசாலையானது 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்யுமொரு உன்னத இடமாகும் என்று சொல்லிவிட்டு லீவு எடுக்க சென்றால் இதனை யார் கவனிப்பது மாசிலா.......?? அப்படிஎன்றால் உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு மாற்றான் வண்டியை எதிர்பார்த்துத்தான் நிற்பீர்களா? அப்படி என்றால் மாற்றான் வண்டி சாரதி அவரும் விடுமுறை எடுத்தால்?? வண்டிக்கு எங்கே செல்வது ஐயா?
ஓரிரு நபர்கள் செய்யும் வேலைக்கு முழுச்சமூகத்தையும் கொச்சைப்படுத்த நினைப்பது மனித மாண்பில்லை என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும் ஐயா!!!!
மாசம் மாசம் சாப்பாடு போடாமல் சாதிதுக்காட்டுங்கள் !!!!!!
இந்த செய்தியை நிந்தவூர் மக்கள் ஆகிய நாங்கள் நிராகரிக்கேன்றோம்... சுலைமான் றாபி சொன்னது முற்றிலும் உண்மை. இது போன்று முன்பும் பல தடவை நடந்துள்ளது.. தேசிய ரீதில் விருது பெற்ற வைத்திய சாலை என்றால் உரிய நேரத்துக்கு அனைவரும் கட்டாயம் இருக்க வேண்டும்.. தாமதமாகி வந்த வந்த வைத்தியருக்கு என்ன ஒழுக்காற்று நடவடிக்கை Dr மாகிர் எடுத்தார்? அம்புலன்ஸ் சாரதிக்கு விடுமுறை என்றால் பதில் ஒருவர் நியமிக்க பட்டிருக்க வேண்டும் .. ஏன் அதை மாகிர் செய்யவில்லை ??? அங்குள்ள சுகாதார தொழிலாளியும் , ஒரு தாதியும் தன இருந்துள்ளார்.. இவர்கள் வீடுகளில் சிஹிச்சை வழங்க செல்ல வேண்டும் , பொது மக்களாகிய நாங்கள் சிரமப்பட வேண்டும் ??? அவட உம்மா உம்மா..!! மத்தவங்கட உம்மா சும்மாவா ???? சுலைமான் றாபிக்கு அவ்ர்ர வாப்பாக்கு அரசியல் லாபம் தேடுவதற்கு இந்த செய்தி எந்த வகையில் பொருத்தம் Dr மாகிர் ??? நிந்தவுருக்கு இரண்டு MP மாறும் செய்யாத அபிவிருத்தி வேலைகளை சுலைமான் செய்துள்ளார். அகவே அவருக்கு அரசியல் லாபம் தேவை இல்லை. இப்படி உண்மையான செய்தி கலை சுலைமான் றாபி பிரசுரிப்பது வரவேற்க தக்கது... இந்த செய்தி இன்பின்னால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார் .. அவர் சுலைமானை பலி வாங்க முட் படுகின்றார். கேவலமான அரசியல் செய்யாமல், மக்களின் தேவை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்
ReplyDeleteவைத்தியசாலை வைத்தியர்கள்
ReplyDeleteமேலே குறிப்பிட்ட விடயத்தில் ராபி அவர்களின் தந்தை பற்றிய விடயமானது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி துறையில் ஆரம்பம் முதல் அவரின் பக்களிப்பு அளப்பரியது.
இப்படிக்கு
வைத்தியசாலையின்
வைத்தியர் குழாம்.
உடகவியலாளரின் தந்தை சம்மந்தமான அறிக்கை எங்களுக்கு மிகவும் வேதனை அளிககின்றது. இவருடைய அர்பணிப்பு சேவை வைத்தியசாலைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
ReplyDeleteஇப்படிக்கு
வைத்தியசாலை உழியர்கள்
???????
ReplyDeleteMr. Unaish - ntr
ReplyDeleteMr. Mahir u make big falls to the ninthavur hospital. bcs we know about ur good mond. but some of ur staff making falls to the hospital. but u dont know abut it. like
# morning time presenting time,
# using usless words wth patients.
# Dont give good massage from Receptionist.
# and night time some body using Hospital Phone.
# and some body going to home to sleep
so, pls sir we kindly inform you, please take action and u apply ur power to them
then u can see good achievement as a best hospital.
Thank you
Mr. மாகிர் வைத்தியர் ஒரு விடயத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளார், அவரின் வரியிலிருந்து "காலையில் பணியிலிருந்த வைத்தியர் இரண்டுமணிக்கு (பணியை உரிய முறைப்படி அடுத்த பணியாளிடம் ஒப்படைக்காமல் ) சென்றுவிட்டார்,( இதில் ஒரு கேள்வி உள்ளது உண்மையில் அவர் 2 மணிக்கா சென்றார் ???? இந்த நிலைமை அன்றுமட்டுமா இல்லை என்ரென்றைக்குமா நடப்பதா?)
ReplyDeleteமற்றய வைத்தியர் சரியாக 2 மணிக்கு பணியில் இருக்கவேண்டியவர்,அவர் அங்கிருக்கவில்லை என்பதை
அவருக்கு பல முறை கோல் பண்ணப்பட்டதாம் என்கிறார் பின்னர் வந்தாராம் , என்னகதை இது?
வெறும் கட்டிடங்களுக்கும் ,அதன் அழகுக்கும்,முன்புற தோட்டத்துக்கும்,பின்புற கதவுக்கும், அலுமாரிக்கும்,அடுக்கிவைக்கப்பட்ட பேப்பர்களுக்கும் உங்களால் பல விருதுகள் பெற்றிருக்கலாம்,பெறப்பட்டிருக்கலாம்.
ஆனால்,அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு சொல்லுங்கள் உண்மையில் உங்களுடன் இந்த வைத்தியர்கள் நீங்களுட்பட சரியாக கடமை தவறாமல் உரிய நேரத்துக்கு வேலை(கடமை)க்கு வந்து போகிறார்கள் தானா?
சம்பளம் மட்டும் சரியாக வாங்குரீர்கள், பிரைவட் செய்வதில்லை என்று மேலதிக நேரப்படி போர்ம்மில் கையெழுத்து போட்டுவிட்டு ஓவர்டைமும்,பிரைவட்டும் செய்கிறார்கள்
இதுக்கெல்லாம் என்ன ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்