Header Ads



ஸகாத்தும், இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் ஏழைகளும்..!

(அஸ்செய்க் அப்துல் மலீக் மௌலவி)

இவ்வுலகத்தில் மனிதனைப் படைத்த இறைவன் மனிதனை ஏழை, பணக்காரன் என்று பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளவனாக ஆக்கியுள்ளான். எனினும் வசதி படைத்தவர்கள் எளியவர்களுக்கு உதவ வேண்டு மென்றும் அல்லாஹ் உறுதியாகக் கட்டளையிட்டுள்ளான். தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள நேரடியான தொடர்பாகும். ஆனால் ஸகாத் என்ற நற்செயல் அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட அடியானுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பாகும்.

 முஸ்லிம்களைப் பரஸ்பரம் உதவி செய்து வாழும்படிச் செய்வதே ஸகாத்தினால் உலகில் ஏற்படும் நன்மையாகும். எந்த முஸ்லிமும் ஆடையில்லாமலோ, உணவில்லாமலோ, நிர்க்கதியாகவோ இருக்கக் கூடாது. செல்வர்கள் ஏழைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். ஏழைகள் இரந்துண்டு திரியக் கூடாது. யாரும் தங்கள் செல்வத்தைச் சுக போகங்களிலும் ஆடம்பரங்களிலும் வாரி இறைக்காமல், அச்செல்வத்தில் சமுதாயத்தில் உள்ள அனாதைகள், விதவைகள், தேவையுள்ளவர்கள் ஆகியவர்களுக்கும் உரிமையுண்டு என்று கருதி வாழ வேண்டும். அச்செல்வத்தில் யாராவது வியாபாரமோ, தொழிலோ செய்யும் தகுதியுடையவர்களாக இருந்து கையில் முதல் இல்லாமல் செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கும் இயற்கையாக நல்ல கூர்மதியும், திறமையும் பெற்றிருந்தும் ஏழைகளாயிருக்கும் காரணத்தால் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கும், அங்கஹீனர்களாயிருந்து யாதொரு வேலை செய்யவும் தகுதி இல்லாதவர்களாயிருப்பவர்களுக்கும் பங்கு உண்டு. எவன் இந்த உரிமையை ஒப்புக் கொள்ளவில்லையோ அவன் கொடுமையாளன் ஆவான். நீங்கள் உங்களிடம் பணத்தைக் கற்றை கற்றையாக வைத்துக் கொண்டு மாடமாளிகைகளில் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு, மோட்டார் வாகனங்களில் பறந்து திரிந்து கொண்டு, உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சோற்றுக்கு இல்லாமல் வாடி வதங்குவதையும், ஆpயரக்ககணக்கானவர்கள் வேலையில்லாமல் தெருத் தெருவாக அலைவதையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் மிகவும் கொடுமையான செயல் எது இருக்க முடியும். இஸ்லாம் இத்தகைய சுயநலத்துக்கு விரோதி. இறைநிராகரிப்பாளர்களுக்கு அவர்களுடைய நாகரீகம், கையில் கிடைத்த பணத்தைச் சுருட்டி அள்ளி அள்ளி வைத்துக் கொண்டு, அதை வட்டிக்குக் கொடுத்து அக்கம்பக்கம் உள்ள மக்களின் சம்பாத்தியத்தையும் தங்களிடம் ஈர்த்துக் கொண்டு வாழும்படிக் கற்பிக்கிறது.

ஆனால் முஸ்லிம்களுக்கோ, அவர்களுடைய மார்க்கம், உங்களை தேவைகளுக்கு வேண்டியது போக மிஞ்சும் அளவு அல்லாஹ் உங்களுக்குச் செல்வம் அருளினால் அதைக் குவித்துப் பதுக்கி வைக்காதீர்கள். உங்களுடைய ஏழைச் சகோதரர்களுக்கும் வழங்குங்கள். அவர்கள் தேவைகள் பூர்த்தியாகட்டும். உங்களைப் போல அவர்களும் சம்பாதிக்கவோ, வேலை செய்யவோ தகுதியுடையவர்கள் ஆகட்டும் என்று அறிவுறுத்துகிறது.

இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் ஏழைகள்

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.  வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களின் பணம், நகை, வியாபாரச் சரக்குகள், வாகனங்கள், வீட்டுச் சாமான்கள், உடைகள் போன்ற அனைத்துச் சொத்துக்களும் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பத்துக்கு தலா 200 ரூபாவுடன் வந்த அவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அகதி முகாம்களிலும் நன்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர். கொண்டு வந்த 200 ரூபா ஒரு நாளிலேயே முடிந்துவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது என்ற ஏக்கத்தில் பிள்ளைகளுடன் வயதான பெற்றோருடனும் பாடசாலைகளில் அகதிகளாக வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையின் எல்லைக்கே சென்று விட்டனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை கைவிடவில்லை. அகதிகள் தஞ்சமடைந்த ஊர்களில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்கள் மீது இறக்கம் கொள்ள வைத்தான். ஊரவர்கள் தமது சாப்பாட்டில் ஒரு பார்சலையும் உடுத்த உடைகளையும் புதிய உடைகளையும் வந்த அகதிகளுக்கு வாரி வழங்கி அவர்களின் துயர் துடைத்தனர். 

புதிய இடம் பழகிப் போகவே ஆண்கள் கூலி வேலை வியாபாரம் என்று தமது உழைப்புக்கான வழியைத் தேடினர். அல்லாஹ்வின் கிருபையால் வெறும் கையுடன் வந்த அகதிகள் குறுகிய காலத்துக்குள் சுயமாக உழைத்து முன்னேறும் தகுதியைப் பெற்றனர். அவர்களில் சிலர் காலப்போக்கில் வீடுகள் வாகனங்களையும் வாங்கி பெரும் செல்வந்தர்களாக ஆகிவிட்டனர். 

அவ்வாறு செல்வந்தர்கள் ஆனவர்கள் தமது செல்வங்களை பொத்தி வைத்துவிடவில்லை. தமது பிரதேசங்களிலிருந்து வெளியேறி அகதிகளாக வாழ்பவர்கள் மீது இறக்கம் கொண்டு அவர்களுக்கு வாரி வழங்கினார்கள். இதனால் வெளியேறிய முஸ்லிம்களில் ஏறக்குறைய 75 சதவிகிதமானோர் சுயமாக வாழும் வசதிகளை பெற்றுக் கொண்டனர். ஆனாலும் 25 சதவிகிதமான மக்களின் நிலமை மிக மோசமாக உள்ளது. 

அண்மையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் சில அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த போது அதிர்ச்சியான சில விடயங்களை அறிய முடிந்தது. சில குடும்பங்கள் குடும்பத் தலைவனின் இறப்புக்கு பின்னர் பிள்ளைகளுடன் அநாதைகளாக வாழ்கின்றனர். தாயொருவரின் தலைமையில் வாழும் ஒரு குடும்பத்தில்  37, 35, 32, 28, 25 வயதுகளினான பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க முடியாத நிலையில் வைத்துக் கொண்டு அந்த தாயும் பிள்ளைகளும் ஏக்கத்துடன் வாழ்கின்றனர். இன்னும் பல வீடகள் குடும்பத்தில் தலைவனோ அல்லது  ஆண் பிள்ளைகளோ இன்றி பெண் பிள்ளைகளுடன் அநாதைகளாக வாழ்கின்றனர். சில குடும்பங்களில் ஆண்; தலைமை இருந்தும் மூலதனமின்மையாலும் அகதியாக இடம் பெயர்ந்த அதிர்ச்சி இன்னமும் நீங்காத காரணத்தாலும் தொழில்கள் எதுவும் செய்யும் மனநிலமையும் உற்சாகமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அவ்வாறான குடும்பங்களும் மிகவும் வறுமையின் கீழ் வாழ்கின்றனர்.

இவ்வாறானவர்கள் வாழும் முகாம்களாக புத்தளத்திலுள்ள பாலாவி பரீத்தாபாத் முகாம், தில்லையடி தென்னந்தோப்பு முகாம், சதாமியா புரம், அரபா நகர், ரத்மல்யாய   போன்ற முகாம்களைக் குறிப்பிடலாம். 

இந்த மக்களுக்கு அவசர தேவையாக தொழில் செய்ய மூலதனமும், வீடமைத்தல் , கொட்டில் வீடுகளை திருத்தல், குமர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தல் போன்ற பல்வேறு தேவைகள் உள்ளன. 

ஏற்கனவே யாழ்ப்பாணச் செல்வந்தர்கள் மீள்குடியேற்றத்துக்காக பலகோடிக் கணக்கான ரூபாய்களை செலவிட்டுள்ளனர். அத்துடன் புத்தளத்திலுள்ளவர்களையும் அவர்கள் தம்மால் இயன்றளவு கவனிக்கின்றனர். இருந்த போதிலும் எல்லோரையும் பராமரிக்க அவர்களுக்கும் முடிவதில்லை. எனவே ஏனைய ஊர் தனவந்தர்களும் வசதியுள்ளவர்களும் இம்முஸ்லிம்களுக்கான பண பொருளாதார மற்றும் பொருள் உதவிகளை இந்த ரமலானில் வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.   

ஸகாத்

ஸகாத் இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையாகும். ஒரு முஸ்லிம் நிஸாப் எனும் உச்சவரம்பு பணம் பெற்றிருந்து, அதற்கு ஒரு வருடம் பூர்;த்தியாகி விட்டால் அவர் மீது அப்பணத்திற்கு ஸகாத் கடமை யாகி விடுகின்றது. அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத் கொடுங்கள்|| (2 : 110). அல்லாஹ்வுக்கு வணக்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும் அவர்கள் தொழுகையை நிலை நாட்ட வேண்டும். மேலும் ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். (98 : 5)

மேலும் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமலிருப்பதற்காக ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுங்கள். (59 : 7)

ஸகாத் எவற்றின் மீது கடமை

தங்கம், வெள்ளி, வியாபாரச் சரக்குகள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள், பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றின் மீது ஸகாத் வரி கடமையாகிறது.

ஸகாத்தை யார் யாருக்கு வழங்கலாம் 

ஸகாத் பெறத் தகுதியுடையோர் யார் என்பதை திருமறை அல்-குர்ஆன் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: (ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோரில்) எவர்களின் இதயங் கள் அன்பு செழுத்தப்பட வேண்டுமோ அத்தகையவர்களுக்கும், இன்னும் (அடிமைகளின்) பிடரிகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையி(ல் செலவழிப்பதி)லும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். (இது) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். மேலும் அல்லாஹ் நன்கறிகிறவனும், தீர்க்கமான அறிவுடையோனுமாவான். (9 : 60) 

தானதர்மங்கள்

ஒரு முறை நபியவர்கள் அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர்கள். யாசிப்போரை விரட்டதீர்கள்| என மக்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.

 இறைவன் குறிப்பிடுகிறான்: கிராமப் புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ;டமாகக் கருதுபவர்களும் இருக்கின்றனர். நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதுதான் கெட்ட காலம் சுழன்று கொண்டிருக்கின்றது.(9 : 98)

 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தினை செலவு செய்பவர்களுக்கு உவமையானது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். (2 : 261)

 நபியவர்கள் நவின்றார்கள்: (நல்ல காரியங்களுக்குச் செலவழிப்பதில்) கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உன் விஷயத்தில் கணக்குப் பார்ப்பான். (அஸ்மா (ரலி), புகாரி)

 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்க ளுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித் தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்.|(2 : 264)

 (தான, தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு iஷத்தான் உங் களைப் பயமுறுத்துகின்றான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வே (நீங்கள் தான, தர்மங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்குமென்று) வாக்களிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடை யுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (2 : 268) 

 ஆகவே தொழுகை, நோன்பு போன்றன ஒருவர் மீது எவ்வாறு அல்லாஹ் கடமையாக ஆக்கியிருக்கின்றானோ, அவ்வாறே வசதி படைத்த ஒவ்வொருவர் மீதும் ஸகாத் வரியும் கடமையாக்கியிருக்கின்றான். இதுவும் அல்லாஹ்வால் பணம் படைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட வணக்கங்களின் ஒரு அம்சமாகும். எந்தத் தேவையுமற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் தானதர்மங்களை வழங்கும் பாக்கியத்தையும் நமக்கு அருள்வானாக!


2 comments:

  1. The Zakat is an obligatory payment on all believers who have an income

    ReplyDelete
  2. Sakkath very important obligation (FOR MUSLIMs) not only Ramalan every year we must give according to the law of sharia Allah will develop our property .Allah promise in quran.

    ReplyDelete

Powered by Blogger.