Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதத்தின் கோரமுகம்..!

(உடையான்)   

வடக்கும் ,கிழக்கும்  இணைய வேண்டும் நாங்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக  வாழ வேண்டும்  என்று  கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்துக்கள்  இதுவரைகாலமும்  இனரீதியாக  வட கிழக்கில் வாழும் முஸ்லீம்களுக்கு  எவ்வளவோ  கொடுமைகளை  செய்து வந்தனர். மறப்போம் மன்னிப்போம் என்று கூறிக்கொண்டு  இருசாராரும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்த  முயன்று கொண்டிருக்கும்  போது..
                               
இம்மாதம் 3ஆம் திகதி திருகோணமலை, நிலாவெளியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 93 முஸ்லீம் மாணவர்களை  பர்தாவை அணிவதானால் பாடசாலையினுள்  நுழையக்கூடாது என்று பாடசாலை நிருவாகம் உத்தரவிட்டு மாணவர்களை நாடு வீதியில் நிப்பாட்ட,   இந்து மாணவர்களது  பெற்றோர்கள்  என்று  ஒரு   சில இனவெறியர்கள்   எங்களது கலாச்சாரம்  சீரழிந்துவிடும்  என்று  பேய்கூச்சல் போட்டார்களே! இதை என்னவென்று  தட்டிக் கேட்க  முடியாத தமிழ் தமிழ்  அரசியல் கட்சிகளை  நம்பி  எப்படி  கூட்டு சேர முடியும் ?

வெளி நாடுகளில் எத்தனையோ மதங்களை பின்பற்றுகின்ற  மாணவர்கள் கல்வி கற்கின்ற  பாடசாலைகளில்  முஸ்லீம் மாணவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு  கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில்  ஒரே மொழி பேசி ஒரே ஊரில் வசிக்கும்  பக்கத்து   தெரு சிறார்களை எதிரியாக தமக்குள்ளே  இவர்கள்   சித்தரித்து   கொண்டதானது  தமிழ் இனவாத சிந்தனையின்  வெளிப்பாடுகளில்  ஒன்று  என்று கூறினால் அது மிகையாகாது.

சிங்கள பேரினவாதம் என்று  அடிக்கொரு தடவை   குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும்   இவர்கள்  தம்மை  விட குறைந்த  எண்ணிக்கையில்  வாழும் முஸ்லீம்கள் மீது செய்யும் இப்படியான அட்டூழியங்களை  தமிழில் என்ன சொல் கொண்டு அழைப்பது ?

குறித்த அதிபர்  இந்து  சமயத்தை  பாதுகாக்கும் அதிபர்  என்றால்   அறநெறி பாடசாலைக்கல்லவா   அனுப்பப்  பட்டிருக்க வேண்டும்? கடந்த  காலங்களில் நாட்டில் பல்வேறு  அரச பாடசாலைகளில்  இதுபோலான குறித்த  பிரச்சினைகள்    ஏற்பட்டிருந்தாலும், இதுபோல ஒரு வக்கிரமான  முடிவுக்கு  எந்தவொரு  பாடசாலையும்  இதுவரை  வந்ததில்லை.

சுமுகமான சகவாழ்வு   வாழ நினைத்திருக்கும்  இரு சமூகங்களுக்கு  இடையே  இவ்வாறான கசப்பு மிக்க  சம்பவம்  நடைபெற்றது  அதுவும்  மாணவர்களது   மனித உரிமையை  முற்றாக   மறுத்திருக்கின்ற  இச்சம்பவமானது , எதிர்காலத்தில்  வடகிழக்கு முஸ்லீம்களது நிலையானது "இப்போது  இல்லாத அதிகாரங்கள் எதிர்காலத்தில்   கிடைக்கப்பெற்றால்    யானை  வாயில் அகப்பட  கரும்பின்  நிலைபோலாகிவிடும் " என்று நினைக்கத் தோன்றுகின்றது ,

இது விடயமாக  எல்லோராலும்  கலந்தாலோசித்து  எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவானது,கிட்டத்தட்ட முஸ்லீம்களை   முட்டாளாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு நடவடிக்கைக்கான முஸ்தீபு என்றே   என்னால் கருதப்படுகின்றது. இங்கு நடைபெற்றது  போல  இன்னொரு சம்பவம் நாளை வேறோர் இடத்தில்  நடைபெறலாம், இங்கு எட்டப்பட்ட  முடிவே அடுத்த பிரச்சினைக்கு  முன்னுதாரணமாக  எடுக்கப்பட்டு மீண்டும் அது போன்ற முடிவுகளே எடுக்கப்பட  வாய்ப்புகள் அதிகம். உடலில் சிரங்கு வந்தால்  உறுப்பை வெட்டுவதா அல்ல சிரங்கை  குணப்படுத்த மருந்து கட்டுவதா ?

மாகாண  சபையில்  பெயருக்கே  அமைச்சர்களும், முதலமைச்சரும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில்   நிருவாக ரீதியாக  எந்தளவு முஸ்லீம்களை முடியுமோ    தமிழ் பேரினவாதிகள்  புறக்கணித்துக்கொண்டே  வருகின்றனர் ,அலுவலர்களின், சம்பள   ஏற்றம்,,நிலுவைகள் ,பதவி  உயர்வுகள் என்பனவும்  திட்டமிட்டு   புறந்தள்ளப்படுகின்றன.

கலாச்சார ரீதியாக பின்னிப்பினைந்ததே    இலங்கைத் திருநாடு, இந்நாட்டில்  ஒருவரது மதம்,மொழி ,கலாச்சாரம்  என்பன  ஒவ்வொரு சமூகத்திலும்   ஒன்றிற்கொன்று  ஒன்றிய வாழ்வு   நடாத்துகின்றது என்பது    யாவராலும்   ஒரு  உண்மையாகும் 

எனவே வடக்கு கிழக்கை பிரதிநிதிபடுத்தும் தமிழ்  அரசியல்வாதிகள் எதிர்காலத்தில்  இவ்வாறான    செயல்பாடுகளுக்கு தூபமிடாமல்  இரு இனங்களும்   அன்னியோன்னியமாக  இருப்பதனை உறுதிப்படுத்தக்கூடிய   செயற்பாடுகளில்   உண்மைக்கு உண்மையாக  மனம் வைத்து  நடந்து கொள்ள வேண்டும்.

4 comments:

  1. முதலில் எனது மனமார்ந்த நன்றியை திரு. உடையான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனக் குமறலை அப்படியே பதிவு செய்துள்ளிர்கள்.

    இந்த பாடசாலை அதிபரின் முடிவை மிக மிக வன்மையாக கண்டிப்பதுடன் அந்தபாடசளையிலேயே அனைத்து முஸ்லிம் மாணவர்களும் அவர்களது மத உருமைகளை பாதுகாத்து அங்கு படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    இது முஸ்லிம்களின் அடிப்படை உருமையை மீறும் செயலாகும். எங்கே சென்றார்கள் இந்த சுயநல முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தலைமையும் அதன் அடிவருடிகளும்.

    ReplyDelete
  2. yaarathu muslim arasiyal thalaimaihalai kooppiduwathu? konjam porungal. therthal thiruvila vanthathum koopidaamale varuwaarhall. sendra therthalil palliwaasal meethu irakkam kondu oodivanthaarhalallawaa?

    ReplyDelete
  3. இவர்களுடன் ஒருநாளும் சோர்ந்து போகமுடியாது நம்மை அழி்க்கவே நினைப்பவர்கள்.எத்தனையோ பாடங்கள் படித்தாகிவிட்டது.இன்னுமா இவர்களை நம்புவது.

    ReplyDelete
  4. சிங்களப் பேரினவாதம்... தமிழ் இனவாதம்..இப்படுயே போனால் முஸ்லீம்களை செல்லாக் காசாக்கி விடுவார்கள்.இப்பொழுதும் கூட நாம் ஒற்றுமையாக இருக்கவில்லையென்றால் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை தான்....
    யா அல்லாஹ்..! எம்மை கோலைகலாக்கி விடாதே..!!!!

    ReplyDelete

Powered by Blogger.