அமெரிக்காவை கிரங்கடிக்கும் மற்றுமொரு சூப்பர் மேன்: எட்வாட் ஸ்நோடன்
'எட்வாட் ஸ்நோடன்' இந்த பெயரைக் கேட்டால் நமக்குள் எந்த மாற்றமும் நடக்காது ஆனால் உலக பொலிஸ்காரன் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு தூக்கி வாரிப்போட்டு விடும், சலேரென வியர்த்தும் விடும். அப்படி இவர் என்ன செய்திருக்கிறார்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது பெரிதாக ஒன்றும் செய்யவில்லை அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு, தேசிய பாதுகாப்பு முகவர் ஸ்தாபனம் போன்றவற்றில் அதி பாதுகாப்பிலிருந்த உயர் இரகசியங்களை (வுழி ளநஉசநவள) திருடி அதனை பிரித்தானியாவின் காடியன் பத்திரிகையில் வெளியிட்டார் அவ்வளவுதான் சுடு நீரில் கால் வைத்தது போலாகிவிட்டது அமெரிக்கா நிருவாகம்.
யார் இந்த ஸ்நோடன்?
29 வயது மட்டுமேயான இவர் ஒரு தொழிநுட்ப விற்பன்னர். அமெரிக்கப் படையில் ஈராக் யுத்தத்தில் கலந்து கொண்ட இவர் காயமடைந்து நாடு திருமிபியவர். நாடு திரும்பிய கையோடு அமெரிக்கா மத்திய புலநாய்வு துறையிலும் தேசிய பாதுகாப்பு முகவர் ஸ்தாபனத்திலும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். அனைத்து தகவல்களையும் பெற்றவுடன் அவற்றை வெளியிடுவதற்கு வாசிங்கடன் போஸ்ட் பத்திரிகையை நாடினார் ஆனாலும் அந்த செய்திகளை போடுவதற்கான உத்தவரவாதத்தை தாங்களால் கொடுக்க முடியாது என அவர்கள் கூறினர். இதன் பின்னரே காடியன் பத்திரிகையை நாடினார் ஸ்நோடன்.
அவர் வெளியிட்ட இரகசியங்கள்
அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக எந்த றேன்ஜூக்கும் இறங்குமளவு கேவலமானது என்பதனை இந்த செய்திகள் மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளன. தனது நாட்டிலும் வெளிநாட்டிலுமாக தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது, இன்டர் நெட், ஈமெயில் போன்ற அனைத்தையும் கண்காணிப்பு செய்வது என்பதோடு பல வெளிநாடுகளின் முக்கியமான வெப் தளங்களை ஹேக் செய்வுத, பெற்ற இரகசிய தகவல்களை வைத்து அடுத்தவர்களை மிரட்டுவது என பல கீழ்த்தரமான செயல்களை செய்துள்ளது. இதற்கு பக்கபலமாக பிரித்தானியாவும் இருந்தது என்பது மற்றொரு இரகசியம். ஹேக் செய்;யப்பட்ட தளங்கள் அதிகம் சீனாவிற்கு சொந்தமானது 1995ம் ஆண்டு முதல் அவர்கள் சீனாவின் வெப்தளங்களை ஹேக் செய்துவந்துள்ளனர். சினோடன் ஒரு பேட்டியில் ' நான் செய்யும் அனைத்தும், பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் ஒரு உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை' என்றார். இந்த அனைத்து தகவல்களையும் குறியீடுகள் மூலம்ளூ ஏநசயஒ எனும் பெயரில் (இலத்தின் மொழியில் உன்மையைச் சொல்பவன் எனும் அர்த்தம்) அனைத்து தகவல்களையும் நகர்த்தியுள்ளார்.
ஸ்னோடன் எங்கு உள்ளார்?
ஜூன் 21ம் திகதி அமெரிக்கா நீதிமன்றம் நாட்டின் உயர் இரகசியங்களை திருடினார், அனுமதியில்லாமல் மூன்றாம் நபருக்கு வழங்கினார் போன்ற குற்றச் சாட்டுக்களை சுமத்தி அவரை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஸ்னோடன் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்i. அவர் ஆரம்பத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங் கொங் சென்றார். அங்கிருந்து மொஸ்கோ சென்றதாக நமபப்படுகிறது. அவர் தற்போது ஈக்குவோடரில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அதனையும் ஊரஜிதப்படுத்த முடியவில்லை. அதே நேரம் இதே போன்று அமெரிக்காவின் வயிற்றில் புளிக்கரைத்த ஜுலியன் அஸ்ஸன்ஜே ஸ்னோடன் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
மொத்தத்தில் அமெரிக்காவின் வண்டவாழங்களை தண்டவாளம் ஏற்றி சூப்பர் மேனாக வலம் வந்தார் ஜுலியன் அஸ்ஸன்ஜே அந்த தலைவலி இன்னும் தீராத நலையில் மற்றுமொரு சூப்பர் மேனாக தோன்றியுள்ளார் ஸ்னோடன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டு என்பதை உண்மைப்படுத்துவதே அமெரிக்காவின் வேலையாக போய்விட்டது.
.jpg)
அமெரிக்கன் காசுக்காக ( p ) ஐ உண்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் அது புதிதல்ல நமக்கு. இதனால் யார் இந்த அக்கிரமங்களுக்கு தண்டனை வழங்கப்போவது அல்லது எதிர்து கேள்விகள் கேட்பது அல்லது அமெரிக்காவை நீதியின் முன் நிறுத்தப்போவது யாராவது உண்டா?
ReplyDelete