Header Ads



நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் அதிகாரி டாக்டர் மாஹிரிடம் சில கேள்விகள்..!

(இப்னு செய்யத்)

தங்களின் வைத்தியசாலையில் விபத்திற்குள்ளான நிலையில் 21.07.2013 அன்று அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில் ஏற்பட்ட காலதாமதத்தை மூடி மறைப்பதற்காக அச்செய்தியை எழுதிய சுலைமான் ராபி தனது தகப்பனின் அரசியல் இலாபத்திற்காக எழுதியாக தெரிவித்து முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சி செய்துள்ளீர்கள்.

01. வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. உரிய நேரத்தில் வைத்தியர் இருக்கவில்லை என்று சுட்டடிக் காட்டியதனால் சுலைமான்; ராபியின் தகப்பனால் அடைந்து கொள்ள இருக்கும் அரசியல் இலாபம் என்ன? அரசியல்வாதி ஒருவர் அரசியல் இலாபம் அடைந்து கொள்ள வேண்டுமாயின் இன்னுமொரு அரசியல்வாதியின் மீது குற்றம் பிடிக்க வேண்டும். அப்படியாக இருந்தால் நீங்கள் அரசியல்வாதியா? 

02. தங்களது வைத்தியசாலைக்கு மின்சார இணைப்புப் பெறுவதற்கு மின்மாற்றி (வசயளெகழசஅநச) ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாதிருந்த போது சுலைமானட ராபியின் தகப்பன் சாதாரண பிரதேச சபை உறுப்பினராக இருந்து போதிலும் உரிய அமைச்சர் மூலமாக மின்மாற்றியை பெற்றுத் தந்தார். இது பலருக்கு தெரியாது. இதில் அவர் அரசியல் இலாபம் அடைந்து கொள்ள எந்த முயற்சியையும் செய்யாது இருந்துள்ளார். இதில் அரசியல் இலாபம் அடைந்து கொள்ள ஒருவர் வைத்தியசாலையில் சிகச்சை நடைபெறவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளததன் மூலமாக அரசியல் இலாபம் அடைய முயற்சி எடுத்திருப்பாரா?

03. ஏற்கனவே கடமையில் இருந்தவர் தமது கடமையை முடித்துக் கொண்டு சென்று விட்டார். மறு வைத்தியர் வருவதற்கிடையில் விபத்துச் சம்பவம் இடம்பெற்று விட்டதாகவும், குறித்த வைத்தியர் வருவதற்கிடையில் இச்சம்பவம் இடம்பெற்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த ஒரு சில நிமிடங்கள் அடுத்த வைத்தியர் வரும்வரைக்கும் ஏற்கனவே கடமையில் இருந்தவர் சற்று தாமதித்துப்போய் இருக்கலாம் அல்லவா? இந்த இரு வைத்தியர்களுக்கும் இடையே ஒரு தொடர்பாடல் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. மற்றது சில நிமிடங்கள் தாமதித்து நிற்பதற்கு ஏற்கனவே கடமையில் இருந்த வைத்தியருக்கு பொறுமையில்லை. கடமைக்குரிய வைத்தியர் சற்று முன்னே புறப்பட்டு உரிய வேளையில் கடமையை பொறுப்பபெடுப்பதற்கு தவறியுள்ளார் என்பதனையும் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள் இதனை உங்களால் மறுக்க முடியுமா?

04. காயமடைந்தவரைக் கொண்டு வந்தவர்கள் வைத்தியசாலையின் நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகக் தெரிவித்துள்ளீர்கள். படுகாயமடைந்தவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியரைக் கேட்ட போது அங்கு கடமையில் இருந்த தாதிகள் கைகளை பிசைந்து கொண்டு வைத்தியர் வந்திடுவார் என்று சொல்லிக் கொண்டு நின்றதனால்தான் அமைதியின்மை ஏற்பட்டது. ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அது நடக்காது போகும் போதுதான் அந்த அமைதி இன்மை ஏற்பட்டது. இதனை அன்று கடமையில் இருந்த மனடசாட்சியுள்ளவர்களினால் மறுக்க முடியுமா?

05. இதற்கு முதல் உங்களின் வைத்தியசாலையில் இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. அவற்றை உங்களினால் இந்த புனித ரமழான் மாதத்தில் மறுக்க முடியுமா?

06. அம்பிலன்ஸ் வண்டியின் சாரதி விடுமுறையில் இருந்தாகக் குறி;பிட்டுள்ளீர்கள். பதில் கடமையாற்றுவதற்கு ஒரு சாரதி இருக்க வேண்டும் அல்லவா ஏன் பதில் சாரதி நியமிக்கப்படவில்லை. வைத்தியசாலையில் அப்படி ஒரு நிபந்தனை இல்லையென்று உங்களினால் கூற முடியுமா?

07. உரிய சம்பவத்தை ஒரு சிறிய தவறு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். வைத்தியர் காலதாமதமாகி வந்தமையை சிறிய தவறு என்றால் எது பெரிய தவறு என்று கேட்கின்றேன்? வேளைக்குச் செய்வதே வைத்தியமாகும். நினைத்த மாத்திரத்தில் செய்வது பொடுபோக்குத் தனமாகும்.

08. குறிப்பட்ட செய்தியாளர் சிலரிடமிருந்து பெற்றுக் கொண்ட அரைகுறை தகவல்களை வைத்து எழுதியாக குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், நீங்களும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருக்கவில்லை. வைத்தியசாலையில் சிலர் உங்களுக்கு வழங்கிய பிழையான தகவல்களை வைத்துக் கொண்டே சொல்லியுள்ளீர்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லவா?

ஒரு ஊடகவியலாளன் ஓரு குறையைச் சுட்டிக் காட்டுவது குறிப்பிட்ட நிறுவனம் மீண்டும் அது போன்று இருக்கக் கூடாதென்பதற்காகவேயாகும். ஊடகவியலாளன் நல்லதைச் சொல்லும் போது பாராட்டுக்களைப் பெறுவதில்லை. ஒரு தீயதை சுட்டிக்காட்டும் போது தண்டிக்கப்படுகின்றான். 

6 comments:

  1. போதும் நிறுத்துங்கள் .
    நடந்தது தவறு இனிமேல் நடக்காது வைத்தியசாலை நிருவாகம்,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கபட்டவர்கள் ஆத்திரப்படத்தான் செய்வார்கள்,
    இதுபோல என்ன சம்பவங்கள் இதற்கு முன்னர் நடைபெற்றது என்று அபு சயித் கூறமுடியுமா உங்களா?
    99 நன்மைகள் 1 செய்து தவறு அதுவும் பெரிய தவறாக இடம்பெறும்போது 99 நல்லதும் மறைந்து விட்டு அந்த ஒரே ஒரு விடயம்தான் முன்னிலைப்படுத்தப்படும் என்பது இந்த விடயத்தில் தெளிவாகின்றதல்லவா?
    நோயாளியின் சொந்தக்காரர்கள் அமைதி அடையுங்கள் அல்லாஹ் ரஹ்மாத்துச் செய்யட்டும்.
    இனிமேல் இதுபற்றி இழுக்காக யாரும் எழுதாதீர்கள்,
    நேரில் சென்று கேளுங்கள்
    ஏனெனில் இது நமது வைத்திய சாலை,

    ReplyDelete
  2. Mr ismail the doctor shuld be in oncall room in the hospital at any time He can't be out of hospital if not in the hospital call 119 for the legal action

    ReplyDelete
  3. இப்னு சையத் தான்ஒரு சுதந்திரமான பதிரிகையாலராஹ இருந்து இவ்விடயத்தை விமர்சித்திருக்கலாம். மாராஹ இன்னொரு பத்திரிஹையளருக்கு வக்காலத்து வாங்கியிருப்பது தானும் ஒரு அரசியல் சார்பான பத்திரிஹையாளர் என்பதை நிருபித்துகாட்டியுள்ளார். தான் குறிப்பிட்டுள்ள விமர்சனங்கள் காரியாலய ரீதியாஹ பஹுத்தறியப்பட வேண்டியவை என்பதை
    அவர் அறிந்துகொள்ள துணியவண்டும். அதுவே பத்திரிஹை தர்மமாஹும். இதை உணர்ந்து இனிவரும் செய்திகளை வெளியிடவும்.

    ReplyDelete
  4. நிந்தவூர் வைத்தியசாலையில இது போன்ற பல தவறான சமபவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. தவறு தொடர்ந்து இடம்பெறுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை மூடி மறைக்காமல் இனியாவது நேர்மையாக செயற்படுங்கள்.சகோதரர் சுலைமான் றாபி சுட்டிக்காட்டியதில் எந்த பொய்யும் இல்லை.

    ReplyDelete
  5. தவறு யாரு செய்தாலும் தவறு தவறுதான்

    ReplyDelete
  6. தயவு செய்து விவாதிப்பதை விட்டு விட்டு வைத்தியசாலையை சீராக்குவதை பாருங்கள். புனித ரமலான் காலம். எமக்குள் வீண் முரண்பாடுகள் வேண்டாம் ஆனால் காலையில் கிளினிக்கு வரும் நோயாளிகளிடம் அன்பாக பழக சிட்டுளியர்களிடம் தயவு செய்து அறிவுறுத்தவும்

    ReplyDelete

Powered by Blogger.