Header Ads



பைசல் காசிம் எம்.பி.யின் விளக்கம்..!

(Umar Ali)

கடந்த 28 06 2013ஆம் ஆண்டு நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி திறப்பு விழாவின்போது  நடைபெற்றதாக சுலைமான் ராபி அவர்களால் எழுதப்பட்டிருந்த  "நிந்தவூர் பிரதேச செயலகக் கட்டிடத்திறப்பு விழாவின்போது அதிகாரங்கள் பாவிக்கப்பட்டதா?"என்ற செய்தி சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களை  நேரில் சந்தித்து  பேட்டி கண்டபோது  அவர் என்னிடம் கூறியதாவது,

சுலைமான் ராபி என்றவர்  தனது செய்தியில் உண்மையைத்திரித்துக்கூறி முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்  முடிச்சுப்போட்டு  அவரது தகப்பனுக்கு அரசியல் லாபம் தேட முற்பட்டிருக்கின்றார் என்பது தெட்டத்தெளிவாக  புரிகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் முன்னைநாள் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா அவர்களிடம் அப்போதைய நிந்தவூர் பிரதேச செயலாளர் அல் ஹாஜ் IM ஹனீபா அவர்கள்  விடுத்த வேண்டுகோளிற்கு  இணங்க  மாவட்டத்திற்கு கிடைத்த 4 பிரதேச செயலக கட்டிடங்களில் ஒன்றை நிந்தவூரில் அமைக்க நான் தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்து பேசியிருந்தது மட்டுமன்றி ,மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை பலமுறை நேரில் சென்றும் சந்தித்திருக்கின்றேன்.

நிந்தவூர் பிரதேச செயலக கட்டிடம் மக்கள் பாவனைக்கு விரைவில் வரவேண்டும் என்ற  மக்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு புதிதாக   கட்டப்பட்ட இந்தக்கட்டிடம்  விரைவில் மக்களின் பாவனைக்கு வரவேண்டும் என்று மக்களது ஆணையைப்பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் கரிசனை கொண்டது சிலரது ஊனக்கண்களுக்கு  பிழையாக தெரிந்திருக்கின்றது. திறப்புவிழா  ஒன்றிற்கான  அழைப்பிதழில் எனது பெயர் வரவில்லை என்று  நான் கவைலைப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது ,எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகின்றது ,வேறு சில விடயங்கள் சம்பந்தமாக அரசாங்க அதிபர் அல்விஸ் அவர்களை சந்திக்கச்சென்றபோது   அழைப்பிதல் விடயம் பேசப்பட்டது  அதன் மாதிரி காண்பிக்கப்பட்டது. அப்போது இதனை வடிமைத்தது நீங்கள்தானே?இந்த ஊரில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்  அவர்களை ஏன் இதில் போடவில்லை என்று அரசாங்க அதிபர் அவர்களே  பிரதேச செயலாளரிடம் வினா எழுப்பி யதைத்தொடர்ந்தும அரசாங்க அதிபர் அவர்களது வேண்டுகோளிற்கு இணங்கவுமே   அழைப்பிதல்  இரண்டாம் முறை அச்சிடப்பட்டது.இதில் எனது அதிகாரங்கள் எதுவும் பாவிக்கப்படவில்லை .

கடந்த காலங்களில் இது போல  நமது அயல் பிரதேசத்தின் பிரபல அரசியல் வாதிகளை புறந்தள்ளிவிட்டு     நடைபெற்ற சில நிகழ்வுகளில் குறிப்பிட்ட  அரசியல்வாதிகள் எவ்வாறு  அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கின்றனர் மேடைகள் உடைக்கப்பட்டதும் ,அழைப்பிதழ்கள் கிழித்தெறியப்பட்டதும மக்களது மனதில் மறக்காமல்தான் இருக்கின்றது ,ஆனால் நானோ எனது ஆதரவாளர்களோ அவ்வாறு நடந்து கொள்ளவில்லை  நாங்கள்  நாகரீகமாக நடந்து கொண்டோம்,ஆனால் நேற்று  முளைத்த சில அரசியல் புது முகங்கள் தமது பிரபல்யம் தேடி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்,அதனை மக்கள் நன்கு அறிவார்கள்,

மேடையில் ஆசன ஒழுங்கமைப்பு வரவேற்பு தோரணம்  என்பன நேரடியாக பிரதேச செயலாளரின் கண்காணிப்பில்தான்  நடைபெற்றது இதற்கும் எனக்கும்  எந்தத்தொடர்பும் இல்லை.

பொது மேடைகளில்  ஒருவர் ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு செல்லும்போது  மேடையிலுள்ளவர்களுடன் உரசிக்கொள்லாமல் போவது என்பது  கடினம் அவ்வாறு நான் விளக்கிச்செல்லும்போது ஒருவர்ர் கரம் பிடித்தால் அவரை ஒதுக்கித்தள்ளியது என்று பொருளாகுமா?  தவிர அரசியளைப்போருத்தவரியோ ஒரு படிநிலையும் இருக்கின்றது அவரவர் அந்தஸ்துக்கேற்றவாறே கதிரைகளும் வழங்கப்படுவது வழமை,அதிபர் பின்வரிசையில் இருக்க ஆசிரியர் முன்வரிசையில் அமரலாமா?இந்த நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டது எனது தனிப்பட்ட அழைப்பின்பெரிலேயாகும் அவருக்கான பகல்போசனத்தையும் நானே  ஏற்பாடு செய்திருந்தேன்.தவிர இந்நிகழ்வில் நான் அவரை அழையுங்கள் இவரய் அழைக்காதீர்கள் அவரை இங்கே  இருப்பாட்டுங்கள்,இவரை இங்கு நிற்பாட்டுங்கள் என்று  ராபி எழுதியிருப்பது போன்ற சில்லறை விடயங்களில் நான் ஈடுபட வில்லை என்று கூறுவதுடன் அனுபவமில்லாத எழுத்தாறது பிழையான அனுமானங்களை  தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.02.07.2013

Administrator for Jaffna Muslim Website,

This is to express my displeasure on publishing news item on 1st of July 2013 on your Website titled as  "நிந்தவூர் பிரதேச செயலகக் கட்டிடத்திறப்பு விழாவின்போது அதிகாரங்கள் பாவிக்கப்பட்டதா?"by your reporter Sulaiman Rafee, who is a son of one and only UPFA Pradeshiya Sabah Member Sulaimalebbe. He is a very corrupted politician who betrays people of Nintavuer village ever in numerous ways, by the way his son using your media to protect his nasty politics. Further I regret about the subject below.

01.  Though, he did not mention my name directly you published my photo to enforce his view,
02.  you could have clarified through other your reporters from this area, and publish his name also in the publication.
03.  You have published this news item targeting to tarnish me.
04.  He blankly concealed the item his farther welcome the minister by giving Beetle leaves and bow down to the minister.
05.  He mentioned that the Chairman of Nintavur Pradeshiya Sabah Attended to this meeting is blatant lie.
06.  As it is a state function it was thoroughly monitored by the District Secretary.

Considering these information you can clarify the fact through Diostrict Secretary of Ampar, if your want to confirm my expression.

Please, note that country’s minority privileges are in question now a days, so that,  publishing like this news items are give much regret to your regular Muslim readers and think about like this reporters and their news items.

Faizal Cassim MP.

Digamadulla District.

2 comments:

  1. இவரின் இந்த விளக்கத்தினை பார்த்த போது கீழ் வரும் பாடல் ஞாபகதிற்கு வந்தது.

    தஞ்சை ராமையாதாஸ் இயற்றி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்காக (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) மலைக்கள்ளன் (1954) திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஒரு கருத்தான பாடல்.


    எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே - இன்னும்

    எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்

    உண்மையில் எனது தந்தைக்கு அரசியல் இலாபம் தேடுவதற்கு இந்த www.jaffnamuslim.com எனும் இணையத்தளத்தை பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நிந்தவூரிலும், அதற்கு வெளியிலும் எனது தந்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் செய்ய முடியாத பல அபிவிருத்தி வேலைகளை செய்து இரண்டு முறைகள் மக்கள் ஆணை மூலம் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க ஒரு நாளிலும் அவரின் தனிப்பட்ட செய்தி இந்த இணையத்தளத்தில் வெளியாகவில்லை.

    உண்மையில் இந்த பிரதேச செயலக கட்டிடம் வருவதற்கு முன்னாள் நிந்தவூர் பிரதேச செயலாளர் அல் ஹாஜ் IM ஹனிபா அவர்களே முழுக்காரணியாக இருந்துள்ளார் என்பதனை அவரின் விளக்கத்தில் நன்கு உணர முடிந்தது. அதில் முன்னாள் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா அவர்களிடத்தில் அம்பாறை மாவட்டதிற்கு கிடைத்த 04 பிரதேச செயலக கட்டிடங்களில் ஒன்றை நிந்தவூரிற்கு கொண்டுவர வேண்டுகோள் விடித்திருந்ததாகககூறினார். ஆனால் தான் இந்தக் கட்டிடத்தினைப் பெறுவதற்கு சிபாரிசு செய்ததாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். வேண்டுகோளுக்கும் சிபாரிசிற்கும் வித்தியாசம் தெரியாதா அவருக்கு? சிபாரிசு ஆகக்குறைந்தது பிரதேச சபை உறுப்பினர் கூட செய்ய முடியும் என்பதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றேன்.எனவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் விளக்கம் மூலம் இக்கட்டிடமானது முன்னாள் நிந்தவூர் பிரதேச செயலாளர் அல் ஹாஜ் IM ஹனிபா அவர்களின் எண்ணக்கருவில் உருவானதென்பது நன்றாகப் புலப்படுகின்றது.

    மேலும் அழைப்பிதழ் விடயம் சம்பந்தமாக பிரதேச செயலக அதிகாரியொருவர் தகவல் தருகையில் ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாமல் சுமார் 250 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டதாகவும் பின்னர் 02 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு 50 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டதாகவும் தெரிவித்தார். இதில் ஆரம்பத்தில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் அதே அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது வேடிக்கையாகத்தென்படுகின்றது. இதனை ஒரு ஊடகவியலாளன் சுட்டிக்காட்டுவது தவறா?

    ReplyDelete
  2. மேலும் புது முகங்கள் தங்கள் முதல் அரசியல் பிரவேசத்தின் போது அவர்களின் மேடைகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி இன்னும் நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுக்கொண்டு போவதனையும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மறந்து பேசுகின்றார். உண்மையில் புது முகங்கள் பழைய முகங்களால் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் இருக்கின்ற போது புது முகங்கள் தோன்றி பல அபிவிருத்தி வேலைகளை செய்வது பேரிடியாகக் காணப்படுகின்றதென்பதனை அவதானிக்க முடிந்தது.

    மேலும் ஒரு அரச அலுவலகத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்படுமானால் ஏற்பாட்டுக்குழுவே அன்றையதினம் அனைத்தையும் நெறிப்படுத்த வேண்டும். (பகல் போசனம் உட்பட) ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அமைச்சரை தனிப்பட்ட முறையில் வேறு இடதிற்கு அழைத்துச்சென்றது தனது சுய இலாபதிற்கே தவிர மக்களின் போது நலத்திற்காக அல்ல என்பது புலப்படுகின்றது. எனவே இந்த இடத்தில நிந்தவூர் பிரதேச செயலகம் அமைச்சர் அவர்களுக்கு பகல் போசனம் வழங்காமல் அமைச்சரை புறந்தள்ளியதா?

    அதேபோன்று பொதுவாக அனுப்பப்பட்ட செய்தியில் எனது தந்தையை மட்டும் குறுப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாடியிருப்பது அவரின் இயலாமைப் பண்பினை காட்டுகின்றது.

    எனவே உண்மையைக்கூறும் ஊடகவியலாளர்களை அதிகாரங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பது அறியாமைப் பண்பாகும். எனவே ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களிடத்தில் பிழையான அணுகு முறைகளைத்தவிர்த்து ஊடக தர்மத்தினப்பேன முன்வரவேண்டும்...!

    ReplyDelete

Powered by Blogger.