அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?
(அல்மாஸ்)
மகியங்கனைப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள துன்பியல் நிகழ்வானது ஒரு இனத்தின் மத உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.
ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதானகேயின் வேண்டுகோளையடுத்து பயத்தின் காரணமாக இன்று 19-07-2013 மகியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு மாகாண சபை அமைச்சரால் ஒரு பள்ளிவாசல் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்பது இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இச்செயற்பாட்டை வெறுமென கைகட்டி முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேடிக்கை பார்க்கப்போகின்றார்களா?
முஸ்லிம் அமைச்சர்களால் இப்பள்ளிவாசலைத் திறக்க முடியாதா? இப்பள்ளிவாசலில் அச்சமின்றி இப்புனித ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட பாதுகாப்பு வழங்க முடியாதா? யாருக்காக நீங்கள் பதவி வகிக்கிறீர்கள்? உங்களது சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காகவா அல்லது மக்களின் பறிபோகும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா??
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை வீணே வம்புக்கு இழுக்கும் சமகால நடவடிவக்கைகள் போன்று முன்னொருபோதும் இந்நாட்டில் ஏற்பட்டதில்லை. முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளும் எதிர்ப்பு நடவடிக்கைளும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே உள்ளன.
இந்நடவடிக்கைளை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இராஜதந்திர ரீதியில் தடுக்க ஏன் முன்வரக் கூடாது? உங்களை பாராளுமன்றதுக்கு அனுப்பி பட்டம் பதவிகளைப் பெறவைத்த மக்கள் வேதனைகளை வயிற்றில் சுமந்து கொண்டு வாழும்போது நீங்கள் வெறும் அறிக்கை விடும் மன்னர்களாக இருப்பதேன்..?
ஆளும் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் . நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் என்ன செய்யப் போகிறீர்கள்..??
அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா? அல்லது இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு தீர்வு காணப் போகிறீர்ளா? அல்லாஹ்காகவும் இந்த முஸ்லிம் சமூகத்தின எதிர்கால சந்திக்காகவுவும் மேற்கூறிய நபர்பளில் ஒருவராவது உங்களது ஒன்றுக்கும் உதவாத பதவியைத் துறப்பீர்களா..? அல்லது நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டின் அரசியல் சாசனத்தை மீறக் கூடிய, ஒரு இனத்தின் மத உரிமையை பறிக்கக் கூடிய திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இச்சமூகத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்..? எதைச் செய்யப் போகிறீர்கள்..?
தேசத்துக்கும் சர்வதேசத்தும் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் மதக் கடமைகளை எவ்வித அச்சமுமின்றி, எவ்வித இடையுறுகளுமின்றி மேற்கொள்ள குறைந்த பட்சம் எல்லோரும் ஒன்றினைந்தாவது தங்களது எதிர்ப்பைப் காட்ட முன்வருவீர்களா? மறுமையை அஞ்சுகள். மரணம் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள், கப்ரின் வேதனையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மரணிக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை என்பதை சற்று உணருங்கள் உங்களிடம் ஒப்படைக்கபட்டுள்ள அமானிதப் பதவியைக் கொண்டு இச்சமூகதுக்காக எதைச் செய்திருக்கிறீர்கள்.?
சமூகம் உரிமையை இழந்து மதக் கடமைளை நிறைவேற்ற முடியாது தவிக்கும் ஒரு காலத்தில் நீங்கள் உங்களுக்குள் அரசியல் தலைமைத்துவப் போட்டிகளுக்காக சமூகத்தை கறிவேப்பிலைகளாக மாற்றிக்கொண்டிருக்கீறீர்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும் அதை மறந்து விடாதீர்கள். பறிபோகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பீர்களா? காலமும் இந்த சமூகமும் காத்துக்கிடக்கிறது உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக....!

இதைவிடவும் உருக்கமாக எப்படி வடிக்க முடியும்?!!!
ReplyDeleteதலைவர்களே! வகிக்கும் பதவிகள் எதற்கு? கண் விழிப்பீர்களா?
masha allah nalla kruthu
ReplyDeleteஇவர்களை நம்பி இனியும் பயனில்லை ஆகவேண்டிய மாற்று வழிகளை யோசிப்பது பயனளிக்கும்
ReplyDeleteAwarhal Nadathum Nadhthil ivarhalum undo
ReplyDeleteithu sariyana karuthu
ReplyDeleteமஹியங்கனைப் பள்ளிவாசல் பிரதம நிர்வாகி அல்ஹாஜ் எஸ்.எம். சீனி முகம்மது ஜே.பி அவர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் இன்று தொடர்பு கொள்ள பல தடவை முயன்றும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteஅவரது உதவியாளர் நஸார் என்பவருடன் தொடர்பு கொண்டு பிரதிமைச்சர் எங்கே? என வினவியபோது, அவர் பக்கத்தில் இருக்கிறார் என பதில் கிடைத்தது.
அவரிடம் கொடுங்கள், மஹியங்கன நிலவரம் பற்றி கொஞ்சம் பேச வேண்டும் என சீனி முகம்மது ஜே.பி சொன்ன போது கொடுக்கிறேன் எனச் சொல்லப்பட்டதாம்.
30 நிமிடமாக ஒன்லைனில் காத்திருந்த பின்னர் 'சேர் உங்களோடு பிறகு பேசுவாராம்' என பதிலளிக்கப்பட்டதாம்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
மஹியங்கனையிலுள்ள எமது சகோதரர்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் எந்தவிதமான ஆபத்துக்களும் நிகழ்ந்து விடக் கூடாதென நாம் அனைவரும் இந்த அருள்மிக்க றமழான் இரவுகளில் அழ்ழாஹ்விடம் பிரார்த்திப்போம்!
மேலும் அவனை சுஜுது செய்வதற்காக ஒரு தலத்தை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்து இன்று இத்தனை அவதிப்பாடுகளையும் துனியாவில் அனுபவித்து வரும் அந்த சகோதரார்களின் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறும் நாம் அவனிடம் இறைஞசுவோம்!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Hon.Risath Bathurudeen.(MP)
ReplyDeleteHon.A.L.M.Athaullah.(MP)
Hon.A.H.M.Azwar.(MP)
Hon.Alavi Moulana.(MP)
Hon.Rauf Hakeem.(MP). etc…
I think that ;
The above Hon.MPs were done some unlawful activities, the evidences are with our President’s hand, so they will not talk on Muslim community now and then.
So, we will not cast votes to these Hon.MPs in the next elections, we can cast our votes to new politicians.
On the next elections, we should cast our votes to new politicians without cast our votes to these above MPs.
Sure…… Sure…………….. Sure………………….. Insha Alla.
Muslims first weapon is patient but we already exited the limit. Now we should go to next step through our scholars not through this rubbish politicians. May allah makes our steps stronger.
ReplyDelete1984 ம் ஆண்டு ஒரு சிலராக இருந்த வீர விதானதான் இப்போது பெறும் கூட்டமாக மாரியுள்ளது,இது இன்னும் அதிகமாகிக்கொண்டே போகும்.
ReplyDeleteசர்வதேசத்தில்,இஸ்லாமிய நாடுகளுக்கு இப்போதைய சூல்நிலையை எடுத்துச்செல்வது சாலச்சிறந்தது. இதன் பின்னணியில் அரசுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள் எதிர்கட்சியும் இருக்கிறது,மேற்கும் இருக்கிறது,ஐரோப்பாவும் இருக்கிறது.இவை உயர்ந்த மட்டத்திலுள்ளவர்களுக்கு பணம் கிடைப்பதால் முன்னெடுக்கிறார்கள் ஆனால் சாதாரண சிங்கள மக்கள் பாவிக்கப்படுகிறார்கள் ஆகவே இதன் தாக்கம் போகப் போக அகோரமாக மாறி விடும் அந்த நிலைக்கு போகாது தடுப்பதும்,தவிர்ப்பதும் முஸ்லிம்களின் கடமை எனலாம். ஆகவே அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் பயந்தவர்களாக அ.இ.ஜ.உ. செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.அத்துடன் அ.இ.ஜ.உ.சபைகளினுள்(முழு இலங்கையிலும்) இருக்கும் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானவர்கள் தயவு செய்து மாறிக்கொள்ளுங்கள் அல்லது உ.சபையிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் தான் இன்றை முழுப்பிரச்சினை்கும் காரணமானவர்கள்
ALMAAS! UNGAL VENDUHOL OK. AANAAL ITHANAI NAMATHU URIMAIKKAAVALARHALIDAM MUNVITHTHATHIL IRUNTHU UNGAL ANUFAVAKKURAICHCHAL THERIHIRATHU. KURUDANAIPPAARTHU MULIKKA SOLVATHU POLA IRUKKIRATHU.
ReplyDeleteKONJAM PORUNGAL-- SENDRA THERTHALIL PALLIVASALAI MOOLATHANAMAAKKIYAVARHAL ITHANAIYUM SOLLI ALUVAARHAL. BUT ORU THERTHAL VARAI KAATHTHIRUKKA VENDUM. MUDIYUMA?
வரட்டும் எலெக்சன் வோட்டு எண்டுக்கிட்டு.
ReplyDeleteஉருப்படியா ஏதாச்சும் செய்யாம சும்மா அறிக்கை கிறிக்கை எண்டு கதை உட்டுக்கிட்டு இருந்தீங்களாக்கும் மக்காள்...
வாங்கோவன் எங்கிட வாசல்கடக்கி பிஞ்சது, கிளிஞ்சது எல்லாம் வெச்சிரிக்கம். கவனம்.
ivarhalai nambuvathai vida naam vithikku iragguvathu meal...
ReplyDeletemasah allah nalla karutthu ippothavathu unarvaarhala ivarhal
ReplyDeleteHon.Rauf Hakkeem. Do you follow our Leader Marhoom M.H.M.Ashraf's guidance? Never, even a bit? Nothing. You follow money, power, woman, proud as Minister of Justies, Vehicles etc...
ReplyDeleteThen you are very week to lead and guide us... on Ashraf's way of life.
Isn't it so?
So, please go on your retirement soon, which is very better for us.
Ith thiruttuk koottatthin arikkaiyellam thattik kaliyungal.,arasiyal enginra amaanithaththai sakkadayaaha maatre ewargal vayiru valakkinraargal.padaithup paripaalikkum rabbai nambungal nitchchayam vidiyal varum.
ReplyDelete