வரங்களே சாபங்களானால்...!
(முகம்மதலி ஜின்னா)
தாரை தப்பட்டை ஒரு புரம். மேளதாளம் மறுபுறமாக முழங்கிவர நடு நாயகமாக '13 ல் கை வைத்துப்பார்...' என கோசம் போட்டு வீதி உலா வராததுமட்டும் தான் குறை. மற்றுமுண்டான ஆவேச அறிக்கைகள்,சவால்கள் அனைத்தும் அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களில் வந்தாயிற்று.
இது என்ன பீடிகை என ஓரளவுக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும் என நம்பியவனாக விடயத்துக்கு வருகிறேன். அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் 13 ம் அரசியல் திருத்தத்தில் மேலும் காணி,பொலிஸ் குறித்த விடயங்களில் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதாக கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டவண்ணமுள்ளன.
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து மு.கா.தலைவர் '13 ல் கை வைக்க விடமாட்டோம் எங்களைத் துரத்தும் வரை அரசை எதிர்ப்போம்' என்று அறிக்கைகளை ஆவேசமாக விட்டுக்கொண்டு வந்தார். துலைவர் இவ்வாறு ஆவேசப்படுவதைக்கண்ட சிஸ்யர்களுக்கும் ஆவேசம் தொற்றிக் கொள்ளவே அவர்களும் தனிஆவர்த்தணம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
கிழக்குமாகாண சபையின் முஸ்லிம்காங்கிரஸ் குழுவின் தலைவர் ஜமீல் அவர்கள் 16 அடி பாய்ந்து '13 ல் கை வைக்கவிடமாட்டோம்! 13ஐக் காக்க கிழக்கு மாகாண சபையில் தனிநகபர் பிரேரணை ஒன்றைக்கொண்டு வருவோம்!!' என கௌரவ மாகாண சபை உறுப்பினர் ஜமீல் அவர்கள் கடந்த வாரம் ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்டார்.
இவ்வறிக்கைகளைக் கண்டவர்களுக்கு கொடுப்புக்குள்ளால் சிரிப்புப் புறப்படத்தவறவில்லை. காரணம் 'திவிநெகும'.
அரசாங்கம் திவிநெகும சட்டமூலத்தை மாகாண சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தபோது 'இது சிறுபான்மை மக்களது உரிமையைக் காவு கொள்கின்ற சட்டமூலமாதலாலும், நாம் ஒரு சிறுபான்மைமக்களது உரிமைக்காக போராடுபவர்களாதலாலும் அதனை எதிர்த்து வாக்களிப்பது எமது கடமை என்று இதே ஜமீல் அவர்களின் தலைமையில் முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்குழு அப்போதும் சவால் அறிக்கை விட்டது.
எனினும் திவிநெகும சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டபோது சப்த நாடிகளும் அடங்க மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல முஸ்லிம்காங்கிரஸார் அச்சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மையினரின் உரிமையில் மண்ணள்ளிப் போட்டமை நாடறிந்த உண்மை. பின்பு தலைவர் வெளிநாட்டிலிருந்து எஸ்ஸெம்மெஸ் அடித்ததும், தலைவர் சொற்கேளாமல் ஆதரித்து வாக்களித்த துரோகிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வாக்காளப் பெருமக்களுக்கு பின் சொல்லப்பட்ட கீச்சி மாச்சி தம்பளக் கதைகள்.
மட்டுமல்லாமல் வடமேல் மாகாண சபையில் 13ல் திருத்தம் மேற் கொள்வதை மு.கா.உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிக்க, வாக்களித்தவர்களுக்கு தலைவர் துரோகிப்பட்டம் கட்ட, சடுதியாக வடமேல் மாகாண சபைக்கு வேட்புமனு கோரியதும் அத்துரோகிகளுக்கு தியாகிகளாக ஞானஸ்னானத்தை நடாத்திய சாணக்கியத்தின் அதி உன்னத சம்பவங்களெல்லாம் அரங்கேறியதை மக்கள் நன்கறிவார்கள்.
ஆதலால் தான் ஜமீல் அவர்களின் ஆவேச அறிக்கையைக் கண்டதும் மக்கள், 'ஒரே கட்சிக்கு ஒரே சட்டமூலம் குறித்து கிழக்கு திசையில் ஒரு நிலைப்பாடும், வடமேல் திசையில் ஒரு நிலைப்பாடும் எவ்வாறிருக்க மடியும்' என்ற இந்த முன்அனுபவங்களால் தான் '13ஐக் காப்போம்' கதையையும் மக்கள் வழமை போல வேடிக்கையாக எடுத்துக்கொண்டனர். இறுதியில் மக்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது. திவி நெகுமைக்கு நேர்ந்த விடயம்தான் 13க்கும் நேர்ந்தது. அதாவது, கி. மா.சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் அறிக்கையில் சொன்னது போல 23.07.2013 அன்று 13ல் அரசு கை வைப்பதை எதிர்த்து தனி நபர் பிரேரணையை முன்வைப்பார் என பொது மக்களும், ஊடகங்களும் எதிர்பார்த்திருந்த போது அப்படி எதவுமே அங்கு முன்வைக்கப்படவில்லை .என்பது குறிப்பிடத்தக்கது.- அதற்குள் எங்கிருந்து என்ன எஸ்ஸெம்மெஸ் வந்ததோ!!
இப்போதெல்லாம் சிறுபான்மையினரது உரிமையைக்காவு கொள்ளும்விதமான சட்டமூலங்களை பெரும்பான்மையினர் எடுத்தாலும் அதனை ஆதரிப்பவர்களாக சிறுபான்மையினரின் உரிமைக்காவலர்களில் ஒரு பகுதியினர் இருப்பது சிறுபான்மையினரின் சாபககேடாகும்.
ஆணைக்குழுக்களை நீக்கவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வரையறைகளை நீக்கவும்,எஞ்சியிருக்கின்ற சிறுபான்மையினரின் உரிமையை பலிகேட்ட திவிநெகும சட்டமூலத்தை ஆதரிக்கவும் 'நல்லபிள்ளையாய்' கையுயர்த்தியவர்களுக்கு, பள்ளிவாசல் உடைப்பையே மூலதனமாக்கி வாக்குவங்கியைப் பெருக்கும் ரஸவாதம் தெரிந்த நெஞ்சுரக்காரர்களுக்கு 13 ஒரு பொருட்டா???

சா.. சொல்லாலேயே செல்லடித்து மெய்சிலிர்க்கச் செய்து விட்டீர்கள்.. முகம்மதலி ஜின்னா அவர்களே..
ReplyDeleteநக்குண்டு நாவிழந்த நம் போராளிகளுக்குப் புரியுமோ இச்சொல்லடுக்கின் மகிமை?
நானுந்தான் இன்றெல்லாம் தேடினேன் தம்பி ஜெமீலின் பிரேரணைப் பெறுபேற்றை..
செத்த கதை என்றதால்தான் செய்தித் தளங்களில் காணவில்லை
உங்கள் செய்திக்குள்தான் கண்டேன்.. சாபங்களும் செத்தொழிந்த செய்தியினை!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
rahmathulla ,jinnah awarhale!
ReplyDeleteiwarhall arasiyalukkaha ethuvum seiwaarhal maranam, visaaranai ellaam iruppathu patriyellaam kavalaip padamaattaarhall.
punitha wethaththaiye ENGAL YAAPPU endru sollath thuninthavarhall.
awarhalukku theriyum yaar enna sonnaalum, thaangal enna thuroham seithaalum
NJAFAHA MARATHIYUM, UNARCHIVASAMUM ULLA MAKKAL ULLAVARAI IWARHALATHU THUROHANGALUM THODARUM. PATHAVI PATTANGALUKKU MUNNAAL IWARHALUKKU ITHELLAAAM SA HAJ JA MAPPAAAAA!!!!!!!!!!