Header Ads



நோன்பின் சட்ட திட்டங்கள் - புனித ரமழான் அறிவுப்போட்டி (கேள்வி 8)

ஸஹர் நேரம்

ஸஹர் செய்யுங்கள். ஏனெனில், ஸஹர் செய்வதில் அருள் வளம் (பரகத்) உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்-2000)

கடைசி இரவில் உணவை உட்கொள்ளும்போது பகல் முழுவதும் உடம்பு களைப்படையாமல் இருப்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் ஸஹர் உணவை இரவின் கடைசியில் சாப்பிடுவார்கள். 

ஷஷநாங்கள் ஸஹர் செய்து விட்டுப் பின்னர் பஜ்ர் தொழுகைக்கு தயார் ஆகுவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள். ஸஹருக்கும் பஜ்ருக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் குர்ஆனில் ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்) என்று பதிலளித்தார்கள். (புகாரி-1921, முஸ்லிம்-2002)

மேற்சென்ற ஹதீஸின்படி ஸுப்ஹு தொழுகைக்கு முன் சிறிய நேரமே ஸஹாபாக்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதிலிருந்து சுப்ஹு தொழுகைக்கு முன் குறிப்பிட்ட நேரத்தை ஸஹர் நேரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் இரவு பன்னிரெண்டு மணி அல்லது இரவு மூன்று மணி என்று நேர காலத்தோடு ஸஹர் செய்து விட்டு உறங்கி விடுகிறார்கள். இது நபிவழிக்கு மாற்றமாக உள்ளது. 

மேலும் நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-2001) இதன் மூலம் சாப்பிடாமல் நோன்பு பிடிக்கக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

நோன்பு திறக்கும் நேரம்

நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-2003)

மேலும் ஷஷநானும் மஸ்ரூக் (ரழி) அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றோம். இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் நோன்பை விரைந்து துறக்கிறார் (மஃரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்தில்). விரைந்து தொழுகிறார். இன்னொருவர் நோன்பு துறப்பதையும் தொழுகையையும் தாமதப்படுத்துகிறார். இவ்விருவரில் யார் செய்வது சரி? என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், யார் விரைந்து தொழுகை மற்றும் நோன்பு திறக்கிறார்என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ல்) அவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள் என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-2004)

சிலர் நோன்பு திறப்பதை தாமதப்படுத்துவதைக் காணலாம். குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு நோன்பு திறப்பதற்காக உணவுகளை தயார்செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் நோன்பு திறக்கும் கடைசி நேரத்திலும் கூட நோன்பு திறப்பதற்கு தயார் ஆகாமல் தாமதப்படுத்துவதைக் காணலாம். 

இன்று சிலர் பாங்கு சொல்லி முடிந்த, பிறகு திறப்பதைக் காணலாம். மஃரிப் நேரம் வந்துவிட்டால் நோன்பு திறக்கும் நேரம் வந்துவிடும். அதன்படி மஃரிப் தொழுகைக்காக அல்லாஹு அக்பர் என்று கேட்ட உடனேயே அவசரமாக நோன்பைத் திறக்க வேண்டும். தாய்மார்கள் நோன்பு திறப்பதற்கான உணவுகளையும் குடிபானத்தையும் தயார்செய்து, அதான் சொல்வதற்கு முன்பே நோன்பு திறக்கத் தயாராக இருக்க வேண்டும். 

மறந்து சாப்பிட்டால்

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-1933)

ரமழான் அல்லாத காலங்களில் தாகித்தால் தண்ணீர் குடிப்பதும், பசித்தால் எதையாவது சாப்பிடுவதும் வழக்கம். அந்த அடிப்படையில் ரமழான் காலத்தில் நோன்பு வைத்த நிலையில், மறந்து எதையாவது சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவரது நோன்பு முறியாது. அது அல்லாஹ் அவருக்கு வழங்கியது. அதேநேரம் வேண்டுமென்று குடித்தால் அல்லது சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடும். நான் மறந்து செய்தேனா அல்லது வேண்டுமென்று செய்தேனா என்று அவர் அவர்களுக்குத் தெரியும். 

இரத்தம் குத்தி எடுத்தல்

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள். நோன்பு நோற்று இருக்கும்போதும் இரத்தம் (குத்தி) எடுத்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம்: புகாரி-1938)

நோன்பு பிடித்த நிலையில், ஒருவர் விரும்பினால் இரத்தம் குத்தி எடுப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. அதேநேரம் இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் உடம்பு சோர்வான நிலைக்குப் போகும் என்று இருக்குமானால் அதை தவிர்ந்து கொள்வது நல்லது. இரவு நேரத்திலோ அல்லது ரமழான் அல்லாத காலத்திலோ அதை எடுத்துக் கொள்ள முடியும். 

அதேநேரம் இரத்தம் வெளியேறினாலும் நோன்பு முறியாது. உதாரணமாக பெண்கள் அடுப்படியில் காய்கறிகளை வெட்டும்போது தெரியாமல் கை வெட்டப்பட்டு, அதிலிருந்து இரத்தம் வடிந்தாலோ அல்லது ஒருவர் விபத்துக்குள்ளாகி, இரத்தம் வெளியேறினாலோ நோன்பு முறியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஏனென்றால், இரத்தம் வெளியானால் நோன்பு முறிந்து விடும் என்று சிலர் தவறாகக் கூறுகிறார்கள். அது பிழையான கருத்தாகும். அதேபோல், ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. அவருக்காக இரத்தம் கொடுக்க விரும்பினால் தாராளமாகக் கொடுக்கலாம். எந்தத் தடையும் கிடையாது. நோன்பும் முறியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

குளிப்பு கடமையானவர்

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் (இரவில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு குளிப்பு கடமையானவர்களாக பஜ்ர் நேரத்தை அடைவார்கள். குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள். (புகாரி-1930)

தம் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் ஸஹர் நேரத்தில் வுழூ செய்து விட்டு சாப்பாட்டை சாப்பிட்ட பின் குளித்துக் கொள்ளலாம். அல்லது குளித்து விட்டு ஸஹர் சாப்பாட்டை சாப்பிடலாம். குளிக்காமல் சாப்பிட்டால் நோன்பு கூடாது என்பது கிடையாது. ஸஹர் செய்வதற்கு குளிப்பு கடமையல்ல. என்றாலும் அதனைத் தொடர்ந்து சுப்ஹு தொழுகைக்காகக் கட்டாயம் குளித்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைப் பயன்படுத்த முடியாதவர்கள் தயம்மம் செய்துகொள்ள முடியும். 

பகல் நேரத்தில் மனைவியுடன் சேர்ந்தால்

நோன்பு பிடித்த நிலையில், ஒருவர் பகல் நேரத்தில் தனது மனைவியுடன் இல்லறத்தில் சேர்ந்தால், அவரது நோன்பு முறிந்துவிடும். அதற்கான பரிகாரத்தையும் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் நபிமொழி கூறுவதைக் கவனிக்கலாம். 

ஷஷதனது மனைவியுடன் பகல் நேரத்தில் ஒன்று கூடியவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஷயா ரஸூலுல்லாஹ், நான் எனது மனைவியுடன் நோன்பு பிடித்த நிலையில் சேர்ந்து விட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். இல்லை என்றதும், தொடர்ந்தும் இரு மாதங்கள் நோன்பு நோற்க முடியுமா? என்றார்கள். முயாது என்றதும், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என்றார்கள். கஸ்டம் என்றார். நீண்ட ஹதீஸின் சுருக்கம். (புகாரி-1936) பகல் நேரத்தில் தனது மனைவியுடன் சேர்ந்தவர் மேற்கூறிய ஏதாவது ஒரு பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

கேள்விகள - 08
நோன்பின் சட்ட திட்டங்கள் 

1. நமது நோன்பிற்கும், வேதக்காரர்களுடைய நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ஸஹர் செய்வதாகும் என்ற ஹதீஸ் எந்த ஹதீஸ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது ?

2. நோன்பு நேரத்தில் ஒருவர் மறந்து சாப்பிட்டால் அவருக்கான சட்டம் என்ன ?

1 comment:

  1. (சீனிமுஹ்யுத்தீன்ஃபைஜானி) மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete

Powered by Blogger.