Header Ads



ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான 3 நிகழ்வுகள்..!

(Nidur) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம்.

  முதலாவதாக அல்குர்ஆன் :   

உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழி காட்டக்கூடிய அருள்மறையாம், அல்குர்ஆன், புனித ரமலான் மாதத்தில் இறக்கி அருளப்பட்டது. ஆகையால், இந்த மாதத்தை அடைந்தவர்கள்,தக்வா – இறை அச்சத்தை பெறுவதற்காக நோன்பு நோற்க இறைவன் கட்டளை இட்டுள்ளான்.

  இரண்டாவதாக, பத்ருப்போர்  : 

காபிர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்திய போர். சத்தியம் மற்றும் அசத்தியத்திற்கெதிரான போர். ஆகையால்தான் அன்றைய தினத்தை யவ்முல்புர்கான், அதாவது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவித்த நாள் என்றழைக்கப்படுகிறது.

எதிரிகளிடம் அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து விதமான போர் தளவாடங்கள், போர் தந்திரங்கள், படை பலம் இவை எதுவுமே முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் முஸ்லிம்களிடம், எதிரிகளிடத்தில்இல்லாத அதி நவீன ஆயுதமான (sophisticated weapon)தக்வா- இறை அச்சம் இருந்தது. இறைவன் கண்ண்க்குத் தெரியாத மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்குஇறுதி வெற்றியை இந்த ரமலான் மாதத்தில் கொடுத்தான்

  மூன்றாவதாக மக்கா வெற்றி :  

அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த உலக மக்களை இஸ்லாத்தின் பக்கமும், முஸ்லிம்கள் பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்ச்சி. 'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது' என்ற கருத்தை தவிடு பொடியாக்குவது போல், கத்தியின்றி, ரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. போரின் போது கடைபிடிக்கக்கூடிய தர்மத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

இஸ்லாத்தின் பரம எதிரிகளான அபூ ஸுஃப்யான் அவர்களது மகன் இக்ரிமா போன்றவர்களை மன்னித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். மக்காவில் இருந்து விரட்டி அடித்தவர்களை, 'இன்று உங்கள்மீது எந்த குற்றமும் இல்லை' என்று பறை சாற்றினார்கள். ரமலான் மாதத்தில் நடைபெற்ற இந்த வெற்றிதக்வா -இறை அச்சத்தின் காரணமாக இறைவன் அளித்த வெற்றியாகும்.

நாம் இந்த சம்பவங்களில் இருந்துஇறைஅச்சத்தைஅதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுக் கொள்ள முடிகிறது. நோன்பு நோற்பதால் அடையக்கூடிய தக்வா- இறை அச்சத்தை இறைவன் நம் அனைவர்களுக்கும் அதிகப்படுத்த போதுமானவன்.

1 comment:

  1. இக்ரிமா (ரழி ) அவர்கள் அபூ சுபியான்(ரழி ) அவர்களின் மகன் அல்ல. மாறாக, அவர் அபூஜஹலின் மகனாவார்.

    ReplyDelete

Powered by Blogger.