ஜனாஸா அறிவித்தல் - ஹதீஜா பீபி
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஹதீஜா உம்மா இன்று 13 ஆம் திகதி, வியாழக்கிழமை தெஹிவளையில் வபாத்தானார். 1917 ஆம் ஆண்டு பிறந்த இவர் வபாத்தகும் போது வயது 96. இவருக்கு 31 பேரப் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் மர்ஹும் மீரான்கண்டு (ஏ.கே.மொஹமட்) அவர்களின் மனைவியும், சரீபா, கரீம், லைலா, மன்சூர், மசூனா, மஹ்ரூப், நயீமா கியோரின் தாயாரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர் தெஹிவளை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் - ஹுஸைன் (பிரான்ஸ்)
தொடர்பு - 0094112712066

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteயா அல்லாஹ்! இவரின் குற்றங்களை மன்னித்து இவருக்கு அருள்புரிவாயாக. உயர்ந்த சுவனபதியை இவரின் தங்குமிடமாக ஆக்குவாயாக. குடும்பத்தினர் உள்ளத்தில் பொறுமையை ஏற்படுத்துவாயாக.
''நிச்சயமாக அல்லாஹ் அளித்ததும் அவனுக்குரியதே. அவன் எடுத்ததும் அவனுக்குரியதே. அவனிடம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு தவனையுண்டு. எனவே, பொறுமை செய்வீராக, நன்மையை எதிர்பார்ப்பீராக'' (புகாரி)