Header Ads



எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜமாலி..!

நாகூர் ழரீஃப் (தோஹா, கத்தார்)

சென்ற 19-06-2013 ஆந் தேதி யாழ். முஸ்லிம் இணையதளத்தில் 'எரியும் மதவாத அராஜகத்தை தேசிய சூறா சபை அணைக்காது' என்ற தலைப்பில், அம்பாறை மாவட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை என்ற அமைப்பின் தலைவர் மௌலவி றபியுதீன் ஜமாலி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மேற்படி அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும் போது, உப்புச் சப்பற்ற ஓர் அறிக்கை என்றே குறிப்பிடலாம். எனினும் உள் நோக்கத்தைப் பார்க்கும் போது, சமூகத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் நிறைந்துள்ளன என்பதால் இம்மறுப்பறிக்கையை எழுதுகின்றேன்.

அராஜகம் புரியும் பொது பல சேனா போன்ற அமைப்புகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளையும் உறவையும் தான் பாதுகாத்து வருவதை ஏற்றுக் கொள்கின்றார் சகோ. ஜமாலி அவர்கள்.

தேசிய சூறாவைச் சாடுவதாகவும் குற்றம் சாட்டுவதாகவும் இவரது அறிக்கை மேலோட்டமாக அமைந்திருந்தாலும், உண்மை அதுவல்ல, மாறாக, எமது சமூகத்தை எட்டு தசாப்தங்களாக வழி காட்டிச் செல்லும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்தேகப்படுத்தும் நோக்கினூடாக சமூகத் தலைமைத்துவத்தை விட்டும் மக்களைத் திசைதிருப்புவதும், வழிகெடுப்பதுமாகும். இதனை பின்வரும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

'முஸ்லிம் சமயத் தலைவர்கள்,அவர்கள் தலைமைதாங்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை இன்று வரை எவ்வாறு முஸ்லிம்களை வழி நடாத்தி வந்திருக்கிறார்கள் என்பதை ஆராய்வது அவசியமாகும். அவர்கள் இலங்கை முழு முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்களா? இல்லையா என்பது கேள்விக் குறியாகும்'.

இவ்வரிகள் ஊடாக சமூகக் கட்டுக்கோப்பை தகர்க்க முயற்சி செய்கின்றார்.

சகோ. ஜமாலி அவர்களுக்கும் அவர் சார் அமைப்புக்கும் பின்வரும் சுருக்கமான தகவலைக் கொடுக்க விரும்புகின்றேன். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது, 1924 ஆம் ஆண்டு முதல், எண்பத்து ஏழு (87) ஆண்டுகளாக, 25 மாவட்டங்களிலும் 102 மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளையும், 5000 அடையாள அட்டைபெற்றுக் கொண்ட அங்கத்துவர்களையும் கொண்டுள்ளதுடன், இலங்கை பாராளுமன்றில் யுஉவ ழெ : 51 ழக 2000 என்ற இலக்கத்தில் கூட்டிணைக்கப்பட்ட ஓர் அரசசார்பற்ற சமய மற்றும் சமூக உயர் தலைமைத்துவமாகும். இதன் தலைமைத்துவத்தை இலங்கை வாழ் உண்மையான 'அஹ்லுஸ ஸுன்னாஹ்' என்ற கோட்பாட்டினை ஏற்று நடக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுள்ளனர் என்பதுடன், 'அஹ்லுஸ ஸுன்னாஹ்' என்ற கோட்பாட்டுக்கு மாற்றமானவர்களது பிழையானதும் தவறானதுமானவற்றை அன்று முதல் தெளிவுபடுத்தியும் மறுத்தும் வருகின்றது.

அத்துடன், ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுண்ஸில், தரீக்காக்களின் உயர் பீடம், இலங்கையில் உள்ள இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் அமைப்புக்கள், அறபுக் கலாபீடங்கள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்துள்ளது என்பது ஒருசிறப்பம்சமாகும். 

மற்றுமோரிடத்தில் சகோ. ஜமாலி அவர்கள், 'இலங்கை மட்டுமல்ல முழு உலகிலும் முஸ்லிம்களின் பலத்தை எப்படி பலகீனப்படுத்தலாம் என்பதை வருடக்கணக்காக சிந்தித்து பின்வரும் முடிவினை மேற்குலகம் எட்டியிருக்கிறது. அவர்கள் கண்டமுடிவுகள் : 
01 – முஸ்லிம்களின் ஆன்மீகபலத்தைஅழிப்பது,
02 – முஸ்லிம்களின் ஒற்றுமையைசீர்குலைப்பது,
03 –அவர்களுக்குள் இயக்கங்களைஉருவாக்குவது,
04 –அடுத்தசமூகத்துக்கு இவர்களைக் காட்டிக் கொடுப்பது என்று பட்டியலிட்டுள்ளார்.

மேற்குலகின் திட்டமாக முஸ்லிம்களின் ஆன்மீகப் பலத்தை அழிப்பதை ஏற்றுக் கொள்ளும் இவர், ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும் பள்ளிவாசல்கள், மர்கஸ்கள், வழிகாட்டல் நிலையங்கள், ஆராய்ச்சிமையங்கள், பயிற்சிமன்றங்கள், ஷபாப் அமைப்புகள், தௌஹீத் இயக்கங்கள், தப்லீக் இயக்கங்கள், ஜமாஅத் இஸ்லாமி அமைப்புகள், ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னத்துல் முஹம்மதிய்யா இயக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டு இவை எமக்குத் தெவையில்லை என்று முன்னுக்குப் பின் முறனாகப் பேசுகிறார். இவர் மேற்குச் சிந்தனையில் பேசுகின்றாரா? கிழக்குச் சிந்தனையில் பேசுகின்றாரா?.

உண்மையில் ஆன்மீகப் பலத்தை அழிக்கும் மேற்குலக சக்தியாக இவர்களே செயற்படுகின்றனர் என்பதே எமது சமூக நோக்கர்களின் கருத்தாகவுள்ளது. ஏனெனில், இஸ்லாமிய இயக்கங்கள், தத்தமது திட்டங்களுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் ஆன்மீகப் பலத்தையும் நோக்காகக் கொண்டு செயற்படும் போது, அவற்றைத் தேவை இல்லை என்பதானது ஆன்மீகப் பலகீனத்தை ஏற்பதாக தோன்றவில்லையா? முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக இல்லையா? அடுத்த சமூகங்களுக்கு இச்சமூகத்தின் எழுச்சியைக் காட்டிக் கொடுப்பதாக இல்லையா? ஆக ஒட்டுமொத்தமாக இவர்களே மேற்குலகின் ஏஜண்டுகள்.

மற்றுமோரிடத்தில் 'ஆண்கள் பெண்கள் என்று வேறாக கொள்கை பரப்பு மத்ரஸாக்கள், வளாகங்கள் எல்லாம் கட்டப்பட்டுவிட்டனளூ இன்னும் கட்டப்பட்டும் வருகின்றன. இவர்களுக்கு மேற்கு நாட்டவர்கள்தான் பணம் வழங்குகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமூகத்தில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் மத்ரஸாக்களை சுட்டிக்காட்டி, இவற்றுக்கு மேற்குலகின் நிதி கிடைப்பதாக பொது பல சேனாவை விட மோசமான அடிப்படையற்ற செய்தியைப் பரப்புகின்றார். இதனை இவர்களால் நிரூபிக்கமுடியுமா? அடிப்படையற்ற செய்திகளையும் தகவல்களையும் பரப்புவதா இவர்களது 'அஹ்லுஸ் ஸுன்னா' கோட்பாடு? சகோ. ஜமாலி போன்றவர்கள் தமது கொள்கைகளைப் பரப்பும் போது மற்றவர்கள் தமது கொள்கைகளைப் பரப்பும் உரிமை அவர்களுக்கு இல்லையா?

மற்றுமோரிடத்தில், 'இலங்கையில் அனைத்து இயக்கங்களும் அழிக்கப்படவேண்டும். அவர்களின் கொள்கைப் பரப்பு மத்ரஸாக்கள் அகற்றப்படவேண்டும். இதை விட வேறொன்றுமே எமக்கு விமோசனம் தரப் போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கூற்றின் மூலம், நீண்ட காலமாக பொது பல சேனா என்ற இனவாத அமைப்பு கூறிவரும் சம்பிரதாய முஸ்லிம்கள் இவர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில், அவர்கள்தான் இஸ்லாமிய இயக்கங்களையும் மறுமலர்ச்சியையும் விரும்பாத எமது பொது எதிரிகள்.

இஸ்லாமிய அமைப்புக்கள், அறபு மத்ரஸாக்கள், முஸ்லிம் நிறுவனங்கள் ஆகியவை தமக்கு எதிரானவை என்று இனவாதிகள் கூறுவதை ஒத்ததாகவே இவர்களது கருத்தும் எதிர்பார்புக்களும் திட்டங்களும் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிய வந்துவிட்டது.

சமூகத்தைக் காட்டிக் கொடுத்து, சமூகத்துள் பிளவுகளைத் தோற்றுவித்து, முஸ்லிம்களின் ஆன்மீக செழிப்பினை ஏற்றுக் கொள்ளாமை போன்ற அனைத்து சமூகத் துரோகங்களையும் செய்துகொண்டு, முஸ்லிம்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமையாகச் செயற்படும் சமூகத்தைச் சீரழிப்பதைவிடப் பெரிய அராஜகம் எது?

மனிதகுலத்திற்கு அருளாகவும் நேர்வழியாகவும் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம், மிகத் தெளிவாக, அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் மனிதகுலத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்று செயற்படுத்துவதே எமது சமூக விமோசனத்துக்கான ஒரே வழியாகும்ளூ இதுவே 'அஹ்லுஸ் ஸுன்னா' எனப்படும் சிறந்த பிரிவினரின் அடிப்படை நம்பிக்கையாகும்.

6 comments:

  1. Ivar eriyum nerippal ippo enney uuttuhiraar. ERIYA VEYTHU VEDIKKEY PAARKKA THEE MUUTTIYATHUM IVARHAL POONRA ARIVEELIHAL THAAN

    ReplyDelete
  2. Jaffnamuslims.com should not have issued the bad article of jamali.

    ReplyDelete
  3. jamalin article ukkuppin muslimkalukku innum mosamaana vilaivukal undaahalaam bbs in sila kolhaikal ivarkalidamum ullazu, aduththazu islaam angeekarikkaaza sila kolhaikalum ivarkalidam ullazu enave udane ivarhalai purakkanikka vendum.

    ReplyDelete
  4. ஜமாலியின் கருத்தை மேலோட்டமாயல்லாது ஆழமாய்ப் பார்ப்போமானால் உண்மையானதே

    ReplyDelete
  5. சார் இந்த றபியுத்தீன் ஜமாலி அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ஒரு கபுறு விரும்பி. இப்படித்தான் ஊரிலும் அடிக்கடி நோட்டீஸ், அறிக்கை என்று விட்டுக்கொண்டு குழப்படி செய்யும் ஒரு துடுக்குத் தனமான பிள்ளை.

    எல்லாரும் ஸூறா சபை பற்றி பேசுகின்றார்கள் என்பதற்காக தன் பாட்டுக்கும் ஏதோ சொல்லியிருக்கின்றார். பாவம் மனிதர் கணக்கெடுக்காமல் விட்டுவிடுங்கள். எல்லாம் சரியாகிப்போகும்.

    ReplyDelete
  6. Who is fool let me know is hose address

    ReplyDelete

Powered by Blogger.