Header Ads



முஸ்லிம் பெண்கள் வெளிநாடு செல்வது கூடாதென்றால்..!


(AI. ஸாக்கிறாஸ்)

என் பணிவான வேண்டுகோள் இக் கட்டுரையை ஆத்திரத்தோடு செவிமடுக்காதீர்கள் இதில் உள்ள நல்லவைகள் உங்களுக்கு தெரிமால் போய்விடும் மாறாக அனுதாபத்தோடும் செவிமடுக்காதீர்கள் இதில் உள்ள கெட்டவைகள் உங்களுக்கு தெரியாமல் போய்விடும். எனவே நடு நிலையாக இருங்கள் நல்லது கெட்டது எது என்பதை மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தினை தொட்டுப்பார்க்கும் என நினைத்தவளாக...!


எமது நாட்டின் தாய்மை இனம் பல விதமான அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். உன்மையை கூறப்போனால் பெண்னாகப்பட்டவள் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்து அந்த பிள்ளையை சிறந்த மனிதனாக்குவது தொடக்கம் தன் தாய் நாட்டை செழிப்பாக வைப்பதில் கூட முதன்மை பெற்றவர்கள் பெண்களே!



அந்தவகையில் எமது நாட்டின் வருமானம் ஈட்டிதரக்கூடிய 1,2,3இம் மூன்று வளிமுறைகளில் முதலிடத்தை மற்றும் முக்கிய பங்கு வகிப்பவர்களும் பெண்களே! மேலும் மேற்படி விடயத்தை நாம் சற்று விரிவாக ஆராய்வோமானால் சில விடயங்களை எம்மால் அறிந்து கொள்ள முடியும்.



1) முதலாவது வறுமானமாக எமது நாட்டு மக்கள் 13 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர் ஆனால் இதில் அதிகமானவர்கள் பெண்க‌ளே!



மேற்படி 13லட்சம் மக்களின் பாதுகாப்பிற்கென சுமாராக 5 பேர் கொண்ட குழுவி‌னரை மாத்திரமே அரசு நியமித்திருக்கின்றது. ஆனால் இந்த பொறுப்புதாரிகளும் சரியாக செயற்படுவதில்லை என்பதனை ஜித்தாவின் பாலத்திற்கு கீழ் அவதிப்படும் மக்களின் நிலமை எங்களுக்கு தெளிவுபடுத்துகிறது.



இது இப்படி இருக்க பெண்களினுடைய உழைப்பின் வருமானத்தை மையமாக கொண்டு இயங்குகின்ற இன்றய அரசாங்கம் ஒரு அமைச்சருக்காக எத்தனை பாதுகாப்பு மற்றும் எத்தனையோ போக்குவரத்து வசதி வாய்புகள் உட்பட இன்னும் அதிகமான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திறுக்கின்றது. எனவே இன் நிகழ்வை மையமாக வைத்து சற்று சிந்தித்து பாருங்கள் உழைக்கும் மக்களின் நிலமை என்ன என்பதை பற்றி?



2) எமது நாட்டின் இரண்டாவது வருமானமாக ஆடை தொழிலை கணிக்கப்படுகின்றது இதில் கூட அதிகமாக பணிபுரிபவர்கள் பெண்களே! ஆனால் இன்று சிறை கைதிகளின் விடுதலையை போன்று மாதத்தில் ஒரு முறை ஆடை தொழிற்சாலையிலிருந்து விடுமுறை வழங்கப்படுகின்றது. இதன் பேது மாத வருமானத்தில் அரைவாசி பணத்தை போக்குவரத்திற்காகவும் மீதிப்பணத்தோடு தன் குழந்தை மற்றும் உரவினர்களோடு சந்தோஷத்தை பகிர்து கொள்கின்றனர்.



3) எமது நாட்டின் மூன்றாவது வருமானமாக தேயிலை கணிக்கப்படுகின்றது. இதில் கூட அதிகமாக பணியாற்றுபவர்கள் பெண்களே! ஆனால் நாள்தோரு்ம் கொளுந்து பறித்து கூடைகளை நிரப்புகின்ற இவர்கள் எடுக்கின்ற சம்பளத்தில் தன்னுடைய வயிற்றை நிறப்ப முடியாமல் தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே எங்கள் வருமானத்தில் அரசியலை வழிநடத்துகின்ற ஒரு அமைச்சரின் வாழ்க்கை நிலையை எங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். எங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்பதனை உங்கள் மனசாட்சியோடு சற்று உரசிப்பாருங்கள்.



தொடர்ந்தும் மேற்படி மூன்று விடயம்களிலும் முதன்மை பெற்றதோடு நாங்கள் நின்று விட வில்லை எங்கள் உழைப்பில் அரசியல் வாதியாக இருக்கட்டும் அல்லது மார்க்கத்தை போதிக்கக்கூடியவராக இருக்கட்டும் இன்று ஏசி கார்களுடனும் பாதுகாப்பு படைகளுடனும் ஓசி வாழ்கை வாழுகின்ற நிலமைகளை நினைக்கும் போது‌ காலம் மாறிப்போய் ஆண்கள் பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு பதிலாக ஒரு சில ஆண்களை தவிற மீதி ஏனையோருக்கு நாங்கள் வாழ்கை கொடுத்திருக்கின்றோம் என நினைக்கும் போது எங்களுக்கு இதிலும் முதலிடம் கிடைத்ததையொட்டி பெறுமைப்படுகின்றோம். 



மேலும் என் இனிய உறவுகளே இவ்வளவு பெறுமையை சுமந்திருக்கின்ற பெண்களாகிய நாங்கள் இன்று எம் சமூகத்திற்கு மத்தியில் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள் மேலும் சில விடயங்களை நான் இந்த இடத்தில் சுட்டி காட்ட வேண்டும் என நினைக்கின்றேன் அந்த வகையில்



எமது நாட்டில் அரசியலில் என்ன உரிமை இருக்கின்றது பெண்களுக்கு????? இதை நான் விரிவாக கூற விரும்பவில்லை

காரணம் அரசில் என்பது ஒரு சாக்கடை என்பத‌னை பெண்கள் என்ன பொதுவாக சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்ற நிலமைகளை வைத்து நான் எப்போதோ உனர்து கொண்டேன் எனவே இந்த சாக்கடை அரசியலை சுயமாக ஒவ்வொரு மனிதனும் சிந்திக்காத வரைக்கும் அதனை அகற்றிவிட முடியாது.



இது ஒரு புரம் இருக்க மார்க்க ரீதியாக பார்போமானால் உதாரணத்திற்கு பெண்கள் வெளிநாடு செல்வது தடை என்று கூறுகின்றது. ஆனால் இதில் உன்னிப்பாக ஒரு விடயத்தை நாம் உணர வேண்டும். இன்று ஒரு பெண் வெளிநாடு செல்வதற்காக மார்க்க ரீதியான கடிதம் தேவையாக உள்ளது. ஆனால் பெண்கள் வெளிநாடு செல்வது ஹராமானது என்று கூறுகின்ற அமைப்பிரே அந்த கடிதத்தை வழங்கிவைக்கின்றனர் எனவே இச் சந்தர்பத்தில் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன் அந்தவகையில் 



இன்று எத்தனை எத்தனையோ பெண்கள் சீதனக் கொடுமையால் வாழ்கை இழந்தவர்களாக இருக்கின்றார்கள்? 

போதைகளுக்கு அடிமையாகிய ஆண்களினால் எத்தனை எத்தனையோ பெண்கள் வாழ்கை இழந்தவர்களாக இருக்கின்றார்கள்? மேலும் பெண்கள் வெளிநாடு செல்வது கூடுமானதல்ல என்றால் அவர்களுக்கு அத்தாட்சி கடிதம் வழங்குவது எப்படி கூடுமானது? இக்கடிதம் வழங்கும் போது 500 பணம் அறவிடப்படுகின்றது இது எந்த வகையில் ஹலாலாக மாறுகின்றது???? எனவே சுருக்கமாக கேட்கபோனால் மேற்படி பிரச்சினைகளின் போது நீங்கள் கூறுகின்ற மார்கத்தினுடைய தீர்ப்பு எங்கே ஒழிந்து கொண்டது??? 



ஆகவே ஒட்டு மொத்த பெண்களினுடைய சோதனை வேதனைகள் மற்றும் வியர்வை கண்ணீர்துழிகளின் ஊற்றில் தான் எங்கள் நாடு உதிர்ந்து கொண்டிருக்கின்றது ஆனால் பெண்களாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். என்பதனை சிந்தித்து உணர்ந்து செயற்படுவோம் வாருங்கள்

6 comments:

  1. Sakiras,

    நீங்கள் உண்மையிலேயே ஒரு பெண்ணாக இருந்தால் உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதற்கு மகிழ்ச்சியடைகின்றேன். மாறாக, ஓர் ஆணாக இருந்தால் உங்கள் பெண்கள் மீதான நியாயமான அக்கறையை பாராட்டுகின்றேன்.

    ஒரு நாட்டின் சமூகப்பொருளாதார போக்குகளைப் பற்றி அறியாதவர்களும் தங்களது உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாது தமது பலவீனங்களை மழுப்புவதற்கு நினைக்கும் கபட ஆண்களும்தான் பெண்களை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். இதனை நீங்கள் நன்றாக எடுத்துக்கூறியிருக்கின்றீர்கள். பாராட்டுகின்றேன்

    அதேசமயம், இப்படியான உண்மைகளை ஊடகங்களிலே கூறும்போது தைரியமாகவும் கம்பீரமாகவும் கூறுங்கள். ஆண்கள் இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்பது போன்ற அவசியமற்ற தயக்கமோ தாழ்வுணர்வோ வேண்டியதில்லை.

    ReplyDelete
  2. நவீன பெண்ணிலைவாதத்தின் ஊது குலலாகவே நான் இத்தொகுப்பை பார்க்கின்றேன்.. கட்டுரையாளரின் கருத்தாடல்களும் எதிர்பார்க்கைகளும் என்னவென்று சிந்திப்பதை விடுத்து... இதற்கு ஆதரவு அளித்து கதைத்திருக்கும் jesslya jessly பார்ததுக் கேற்கிறேன்.. உங்களுக்கு இச் சமூகத்தில் எநந்தவிதமான சுதந்திரங்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? கற்புக் கரைந்து சுய கௌரவம் இழந்து பணம் சம்பாதிக்க செல்வதற்கான அனுமதிதான் உங்களி்ன் வேதனைகளுக்கான ஒத்தடமா? முதலில் நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. பெண்களுக்கு உயிர் உண்டா? உணர்வு உண்டா? என உலகம் சிந்தித்துக் கொண்ட காலப்பகுதியில் பெண்களுக்கு உரிமையுண்டு என குரல் கொடுத்த மார்க்கத்தி்ன் வாரிசுகள் நீங்கள்.. வாழ்வதற்கான கல்விக்கான சொத்து்க்கான சொந்தத்துக்கான உரிமைகளை உறுதிப் படுத்திய மார்க்கத்தின் ஏக உரிமையாளர்கள் நீங்கள்.. இப்படி இருக்க வெளிநாட்டு பயணயத்திற்கான உரிமையை நீங்கள் எந்த வகையினுள் வகுத்துப் பார்க்கிறீர்கள்..

    ReplyDelete
  3. assalamu alikum my dear writer who ever you are i have some reminders for you
    1.do not compare yourself with others...
    2.Do not see the people above you(minsters) and be jealous of them see the people below you and be happy Allah has gifted you better lif.
    3.Do not say our country we men has no rights I am a Srilankan too.
    4.First learn your religion Islam first.... and look for a partner with Islamic value your life will be happy... need no sithanam.
    5. Money is not every thing in life
    6.we know the suffering of the housemaids in gulf without security.....
    may Allah guide you and me and all of us

    ReplyDelete
  4. emathu samoohaththil matrangal vendum athatkaha markasattaththil matram saiya mudiyathu. nafsukku adimaiyana varkalukku ellam halal ahave thyriyum. pengalil velinadu sellavum ethuve muthal karanam

    ReplyDelete
  5. Anver Salafy,

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    நீங்கள் எதற்காக இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றீர்கள் என்று புரியவில்லை.

    ஸாக்கிராஸின் கட்டுரையிலே சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் கூட எழுதியிருப்பது உங்களுக்குப் புரியக்கூடிய தமிழ் மொழியிலேதான் நண்பரே. அதைப் பொறுமையாகவும் இதயசுத்தியுடனும் மீண்டும் படித்துப்பாருங்கள்.

    வெளிநாட்டுக்கு பெண்கள் உழைக்கப்போவது ஒன்றும் அவர்கள் விரும்பி இரசித்தபடி நிகழும் சங்கதியல்ல. மாறாக, தமது குடும்பத்தலைவர்களான ஆண்களின் அலட்சியம், போதைப்பழக்கம், பெண்களிடம் வீரத்தைக் காண்பிக்கும் பொறுப்பில்லாத போக்குகளாலும்தான் என்பதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தவிர, இப்படியான செயல்களுக்கு பெண்களை விமர்சிக்கும் நமது ஆன்மீக உத்தம புத்திரர்களும் கூட எப்படி மறைமுகமாக துணைபோகின்றார்கள் என்பதையும் கூறியுள்ளார்.

    ஸாக்கிராஸின் கருத்தை நான் வழிமொழிந்து எழுதியிருக்கின்றேன்.
    இதுபுரியாமல் யானையைப் பார்த்த குருடர்களைப்போல எகிறாதீர்கள். மயோ கார்டியல் (ஹார்ட்) அட்டாக் வந்துவிடும்.

    அதுசரி, பெண்கள் சுதந்திரமாக வாழ நினைத்தால் உடனே ஏன்தான் அது அவர்களின் கற்பைப் பறிகொடுப்பது என்று நினைக்கின்றீர்களோ தெரியவில்லை. 'ஆண்கள் சுதந்திரமாக வாழ்கின்றோம்' என்று கூறினால், நாங்கள் எப்போதாவது நீங்களெல்லாம் விபச்சாரிகளோடு சோரம்போகின்றீர்கள் என்று கூறுகின்றோமா?

    அது ஏன் உங்களுக்கு மட்டும் இந்த அற்ப குணம்?

    முதலிலே உங்களுடைய இந்த பரம்பரை வியாதியை குணப்படுத்திக்கொண்டு ஊடகங்களுக்கு வாருங்கள். அதன் பிறகு பெண்கள் பற்றியெல்லாம் பேசலாம்.

    ReplyDelete

Powered by Blogger.