Header Ads



நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்ச்சி நிறுவன பொறுப்பதிகாரிக்கு பதில்..!

(MOHAMED ISMAIL UMAR ALI)

2013 மே  31 ம் திகதி ஜப்னாமுஸ்லீம் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்ச்சி நிறுவனம்  தொடர்பாக  அந்நிறுவனத்தின்  பொறுப்பதிகாரியான  A.A .ஜாபிர் அவர்களது  தகவல் தொடர்பு உத்தியோகத்தரால்  வழங்கப்பட்ட பதில்  சம்மந்தமாக..

அஸ்ஸலாமு அலைக்கும் 

தங்களது பதிலில் நன்றாக  விளக்கம் அளித்துள்ளீர்கள்!நன்றி 

பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனத்தின்  சிரேஸ்ட நிலையிலிருக்கும் உங்களின் பதிலைப்படிக்கும் போது எனக்குள் சில நியாயமான கேள்விகள் எழுகின்றன அவற்றைப்பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் 

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை  மாகாணத்தின்  அனைத்து பிரதேசங்களுக்கு மட்டுமன்றி நாட்டின் ஏனைய விவசாய மாவட்டம்களுக்கும் இணைந்த அறுவடை இயந்திரங்களை (COMBINE HARVESTERS ) அறுவடை காலத்தில்  விநியோகிப்பது  அம்பாறை மாவட்டமே!  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பீட்டு ரீதியில்  குறைந்தளவு அறுவடை இயன்திரங்களே உள்ளன,இவ்வாறிருக்கும் நிலைமையில்  அதிகளவான இயந்திரங்கள் உள்ள மாவட்டத்தை பயிற்சிக்கு தெரிவு  தெரிவு செய்ய முடியாமல் போனது ஏன்?

 கட்டுரையில் இயந்திரங்களை இயக்குதல்,திருத்துதல்  போன்ற பயிற்ச்சி நெறி என்ற அடிப்படையில் வினா எழுப்பப்பட்டிருந்தது.இருப்பினும் விடையளிக்கப்பட்டது  விவசாய இயந்திரங்களை திருத்துதல் பற்றியதாகவே இருந்தது.இயந்திரங்களை இயக்குதல் சம்மந்தமான பயிற்சி நெறியே பிரதானமானது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .ஏனெனில் அதிகளவான இயக்குனர்கள் அயல் நாடான இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்தே வருவிக்கப்படுகின்றார்கள்  என்பது தாங்கள் அறியாத விடய மல்ல.

அதிகார சபை  தனது மூப்புக்கேற்றவாறு  பயிர்ச்சிநெறிகளை  ஒரு போதும் வடிவமைப்பதில்லை ,அதற்குரிய கள ஆய்வை மாவட்ட ரீதியாக மேற்கொண்டு அதனடிப்படையிலேயே  திட்டங்களை நடை முறைப்படுத்த  வேண்டும். அந்த வகையில் பொறுப்பு வாய்ந்தவரான தாங்களே இந்நிறுவனத்தின்  அடுத்த வருடத்திற்கான திட்ட வரைபுகளை  உருவாக்கக் கூடியவர்.பிரதேச செயலாளர் ,பிரதேச சபை தவிசாளர் ,பிரதேச சபை,மாகாணசபை உறுப்பினர்கள் பாராழுமன்ற உறுப்பினர்கள்,விவசாய உத்தியோகத்தர்( DO ),விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன்   தொடர்புகளை ஏற்படுத்தி பிரதேசத்தின் தேவை என்ன எனக் கேட்டறிந்து  அதற்கான பரிகாரங்களை கலந்துரையாடல்கள் மூலமாக  இனம்காணலாம்.அநேகமான அரச நிறுவனங்களால் அவற்றின் குறிக்கோள்களை அடைய முடியாமலிருப்பது சமூகத்திற்கும் நிருவனத்திகும் இடையே உள்ள  குன்றிய உறவு நிலையே!

ஏன் நீங்கள் உங்கள் அடுத்த வருடத்திற்கான திட்ட வரைபில்  இந்த விடயத்தை சேர்த்துக்கொள்ள முடியாது ?

மீன்பிடித்தொழில் பற்றிய கற்கை நெறிகள்  மட்டக்களப்பு கல்லடியில் நெடுங்காலமாக  இயங்குவது அறிந்த விடயமே,தேவைகளதிகரிக்க அதிகரிக்க  நிருவனங்களின் சேவைகள் அதிகரிக்க வேண்டியது  நியதி ஏன் அவ்வாறான  ஒரு  நிறுவனம் அம்பாறை மாவட்டத்தில் உருவாகக்கூடாது? அவ்வாறான ஒரு கேள்வியின் அடிப்படையில்தான இன்று தென்கிழக்கு பலகலைக்கழகம் சருவதேசத்திலும் அதன் பட்டதாரிகளின் பாதங்களை பதியச்செய்துள்ளது.இப்படியான கடற் றொளிலியல்  பயிர்ச் நெறிகளை கொண்ட ஒரு நிறுவனத்தை என் இங்கு ஆரம்பிக்க நீங்கள் முயலக்கூடாது  அறிந்தவரை நீங்கள் சிறந்த வீரனும்கூட .

ஆரம்பத்தில்  வளங்கள் குறைவாகவே இருக்கும் படிப்படியாகவே வளங்கள் அதிகரிக்கும்,அவ்வாறு வளங்கள் ஒரு நாழும் தானாக வந்து விடாது அதுவும் நமது நாட்டில் கால்லில் நார் உரிப்பது போன்றே! முயற்சி செய்து ஒன்றுக்கு பலமுறை  வேண்டுகோள் விடுக்கும்போது  விடை கிடைத்துத்தான் ஆகும்,"எறும்பூரக் கற்குழியும்" என்ற ஆன்றோர் வாக்கு என்றும் பொயத்ததில்லையே!

மாவட்டத் தொழில் பயிற்சி நிறுவன தலைவர் என்ற  வகையில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறியொன்று  ஏன் மாணவர்களால் கைவிடப்பட்டது  என்று   ஆராய்ந்து அதற்கான பரிகாரங்களை  காணவேண்டுமல்லவா?

அரசினால் வழங்கப்படும் இச்சான்றிதழ்கள் மிகவும் பெறுமதியானவை என்று அறியாத இன்னும் பல இளைஞர் யுவதிகள் நமது சமுதாயத்தில்  அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கின்ற போது உங்களைப்போன்ற சமூக ஆர்வலர்கள் ,இம்முயற்சியில்  ஈடு பட்டால் நிச்சயம் பலன்கிடைக்குமென்று கூறி முடிக்கின்றேன் 


No comments

Powered by Blogger.