Header Ads



பந்தாடப்படும் கல்முனை ஆசிரியர்கள்..!


(கே.சி.எம்.அஸ்ஹர்)

ஓவ்வொரு ஆசிரியர் தினம் வரும்போதும் ஊடகங்களும்,அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் ஆசிரியர்களைப் புகழுகின்ற புகழ்ச்சிகளை வார்த்தைகளால் கூறமுடியாது.பின்னர் ஆசிரியர்கள் படும் அவலங்களையும்  கஷ்டங்களையும் கேட்பார் யாருமில்லை.வலயக்கல்வி அலுவலகங்களிலும் அவர்கட்கு உரிய மரியாதையோ கௌரவமோ கிடைப்பதில்லை.ஆசிரியனும் ஒரு மனிதன் அவனுக்கும் குடும்பந்தமுண்டு. சராசரி மனிதன் எதிர்கொள்ளும் அனைத்துப்பிரச்னையும் அவனையும் தாக்கும்.அவனின் நியாயமான பிரச்சினையைக்கூட மனிதாபிமான கண்ணோட்டத்தில் தீர்த்துவைக்க யாருமில்லை.

கல்முனை வலயத்தில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாகக்கூறி 2012.01.01   106 பேருக்கு இடமாற்றக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 62 பேர் மாத்திரம் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயங்களுக்கும்,அக்கரைப்பற்று  வலயத்திற்கும் திருக்கோயில் வலயத்திற்கும் சென்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.ஏனைய 44 பேரும் அரசியல்பலம்,ஏனைய பலங்களைப்பயன்படுத்தி இடமாற்றத்திலிருந்து தப்பித்துக்கொண்டனர்.

இந்த 62 ஆசிரியர்களுக்கும் 30.04.2013 தங்கள் பழையபாடசாலைக்குச் சென்று கடமை புரியுமாறு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் தற்காலிக கடிதங்கள் வழங்கப்பட்டன.இவர்களில் செல்வாக்குள்ள 07 பேர் நிரந்தர இடமாற்றத்தைப்பெற்றுக்கொண்டுள்ளனர்.மட்டக்களப்புப்பிரதேசத்தில் தற்காலிகமாக கடமைபுரிந்து கல்முனைக்குத்திரும்பியோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மாகாணக் கல்விச்செயலாளரின் 03.05.2013 கடிதத்தின் பரிகாரம் 30.04.2013 கடிதம் இறத்துச்செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய ஆசிரியர்கள் தமது பழைய பாடசாலைகளுக்குச்சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.பொத்துவில் பிரதேசத்தில் ஒரு வருட ஒப்பந்தத்தில் கடமைபுரிந்த ஆசிரியர்களுக்கு தமது பிரதேசத்திற்கு நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதுபோல கல்முனைக் கல்விமாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு கல்வி மாவட்டத்திற்குச் சென்று கடமை புரிந்தோருக்கும் கல்முனைக்கல்வி மாவட்டத்திற்கு நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆசிரியைக்கு அட்டாளைச்சேனைப் பாடசாலையும்,அவரின் ஆசிரியரான கணவருக்கு பொத்துவில் பாடசாலையும் வழங்கப்பட்டுள்ளது.மனைவி அட்டாளைச்சேனையில்.கணவன் பொத்துவில்லிலும்,பிள்ளைகள் காரைதீவிலும் இருந்தால் குடும்பநிலை எப்படி இருக்கும் சற்று யோசித்துப்பாருங்கள்.இடமாற்றத்ததில் குடும்ப அலகைப்பாதுகாத்தல் என்ற நிபந்தனை என்னாயிற்று. 

உரிய அதிகாரிகளின் கடிதத்தை மதித்து திருக்கோவில்,அக்கரைப்பற்று வலயங்களுக்குச் சென்றது இவர்கள் செய்த குற்றமா?,இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த 44 பேர் போல நாம் இருந்திருக்கலாம் எனக் கவலை தெரவிக்கின்றனர்.அந்த 44 பேரும் தொடர்ந்தும் மகிழ்வாக கடமைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் விடயத்தில் பிரதேச அரசியல்வாதிகள் ஏன் மௌனம் காக்கின்றனர் என்பது புரியாதுள்ளது.மனிதாபிமான அடிப்படையல் இவர்கட்கு நிரந்தரமாக தமது பிரதேசத்திற்கு இடமாற்றம் கிடைக்க மாகாணக் கல்விச்செயலாளரும்,மாகாணக்கல்விப்பணிப்பாளரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடப்படுகிறது.

1 comment:

  1. உண்மைதான் குளீர்ரூட்டிக்குள் இருக்கும் இவர்களுக்கு வெளில் அடிக்கும் வெயிளின் தாக்கம் புரயமா?

    ReplyDelete

Powered by Blogger.