ஆஸாத் சாலி கைது - ரவூப் ஹக்கீம் வாய் திறந்தார் (படங்கள்)
ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண புனரமைப்புக்கூட்டத்தில் வவுனியா இ மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
இன்று எனது மனச்சாட்சியை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை பற்றி முதலிலேயே பேச வேண்டும் இந்த அரசாங்கத்தில நீதி அமைச்சராக இருக்கும் எனக்கு அரசாங்கம் செய்யும் எல்லாவற்றிலும் உடன்பாடாக இருக்க முடியாது . இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று நடக்கின்றது என்ற விடயத்திற்கு அத்தாட்சியாக இருக்கவேண்டிய நானே உண்மையிலேயே உடன்பட முடியாத நிலையில் இருக்கின்றேன் என்பதை பகிரங்கமாக சொல்லுகிறேன் . அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன .
ஆட்களின் கைது, விடுதலை தொடர்பான விடயங்கள் சர்ச்சைக்குரியனவாகவுள்ளன என்ற ஆத்திரத்தை அவற்றோடு தொடர்புபட்டவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைவிடுத்து இப்பொழுது தனிமனிதர் ஒருவரை பற்றி கதைக்கின்றேன் கடந்த வியாழக்கிழமை ஆசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எமது கட்சியின் சார்பில் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர் . அந்த தேர்தல் மேடைகளில் கடிவாளம் இல்லாமல் பேசிகின்றவர் என்றபடியால் அரசாங்கத்தோடு முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற வகையில் பேசுவதை தவிர்த்துக்கொண்டால் நல்லதென நான் அவரிடம் கூறியிருந்தேன்.
இருந்தாலும் அவரது அரசியல் செய்யும் பாணி அவ்வாறான படியால் தேர்தல் முடிவுகளின் பின்பும் அவரது அரசியல் அவ்வாறே தொடரந்தது. ஆனால் அண்மைக்காலமாக சில தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்த பிரசாசரங்கள் மிகத் தீவிரமாகவும் இனமுறுகளை ஏற்படுத்த கூடியதாக இருந்த படியால் இந்த ஆசாத்சாலி என்பவரின் பேச்சுக்கள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது .
காரணமில்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது. என்ன குற்றத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பில் இது வரை சொல்லப்படாத நிலையில் அவரை கைது செய்து இருப்பது படு பாதகமான விடயமாகும் . நேற்று அரசாங்க பத்திரிகையான 'சிலுமின' வில் அவர் ஒரு பயங்கரவாத குழுவோடு தொடர்புபட்டுள்ளதாக வெளிவந்துள்ளது என்னுடைய பார்வையில் இந்நாட்டின் உளவுத்துறைக்கு அதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.
ஆசாத்சாலி பயங்கரவாதியாக அல்லது பயங்கரவாதத்தை உருவாக்குபவராக இருந்தால் இவரைவிட இன்னும் எத்தனையோ பேர்களை கைது செய்திருக்க வேண்டும். இது வெட்கித்தலைகுனிய வேண்டிய விடயம். சட்டத்தின் ஆட்சியென்பது இவ்வாறான மோசமான செயல்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது . அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் . இதை முஸ்லிமகாங்கிரஸ் அரசியலாக்க விரும்பவில்லை. நான் அரசியலில் புள்ளிபோட்டுக்கொள்பவனாக என்னை ஒரு போதும் அடையாளம் காட்டியவன் அல்லன் .
ஆனால் சரியான விடயங்களை சரியான சந்தர்பங்களில் பேசித்தான் ஆக வேண்டும் . இந்த விடயத்தில் அரசாங்கம் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகத்தான் பலரும் கூறுகின்றனர்.அவர்களோடு நாங்களும் உடன்பட்டாகாக வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுகிறேன்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=g5Ro9B2UWF8#!
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=g5Ro9B2UWF8#!


அல்லாஹ் நமக்கு போதுமானவன்..தாயாராகுங்கள் மற்ற நண்பர்களுக்கும் எத்திவைய்யுங்கள்....இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ....
ReplyDeleteஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ...அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஒரு கடிதம் அனுப்பியதாக கேள்விபட்டோம் ....இன்னும் பல முஸ்லிம் இயக்கங்களும் வேண்டுகோள் அனுப்பியதாக அறிகிறோம் ...ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம் சமூகத்தை மதிக்காமல் இன்னும் மூணு மாதத்துக்கு ..அசாத் சாலியை சிறையில் போட்டுள்ளார் ..இதற்கு அடுத்த நடவடிக்கை என்ன ?? இன்று அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக ஜனாதிபதி "" எனக்கு தெரியாமல் செய்து விட்டதாக ரத்துச் செய்கிறார் ""..மின்சார கட்டணத்தை மக்கள் எதிர்த்தார்கள் இன்னும் எதிர்க்கிறார்கள் விடிவு கிடைக்கிறது ...மயிலிடம் போய் இறகு கேக்கக்கூடாது ...... அதை பிடிங்ன்கிரமாதிரி பிடிங்கித்தான் எடுக்க வேண்டும் எதிர்வரும் தினங்களில் ..முழு முஸ்லிகளும் ஒரே குரலில் எல்லா ஜு ம்மாக்களிலும் எதிர்ப்புத் தெரிவித்துப் பாருங்கள் ...உடன் நிவாராணம் கிடைக்கும் .இன்று ஜனாதிபதிக்குத் தெரியும் முஸ்லிம்கள் யாருமே கிளர்ந்தெழ மாட்டார்கள் .... அதுவும் நம்ம ஜம்மியத்துல் உலமாக்கள் ஒருபோதும் அநியாயத்தை தட்டிக்கேக்க மாட்டார்கள் .... கூனிக்குறுகி குனிந்து நிப்பார்கள் என்று மகிந்தர்றுக்கு தெரியும்.. அல்லாஹ் நமக்கு போதுமானவன்..தாயாராகுங்கள் மற்ற நண்பர்களுக்கும் எத்திவைய்யுங்கள்
ஏன் சுத்தி வழச்சிப்பேசுகிறீர்கள்? இந்த அரசு காட்டுதர்பார் ஆட்சி நடத்துகிறது என்ற உண்மையை உள்ளபடி சொல்லவேண்டியதுதானே. இவையனைத்தும் விழங்கிய பின்னரும் இன்னும் ஏன் இந்த அரசுக்கு ஒத்தாசையாக இருக்கிறீர்கள்? நீங்களெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் அவமானச்சின்னங்கள்.
ReplyDeleteMr.Mohamed from kalmunai
ReplyDeleteDr sir kadanda mahana sapai derdal kalankalil neengalum ungaludan ullavarhalum indru nattil vanakkasthalangal udaikkappattathai pala kootangalin en kadhu oodaha anadu kai udhaha ungal pahiranga meading ill padam pottu kattiyavan nan adakku udandayaha irundavarhal neengal
inru adaiyum neengal maruttu neengalum ungaludan irukkum sahabakkalum maruttu inru antha nadaham arankerikkondu irukkirathu adutta nadahattukku thayarahikkondu vadmahana muslimkalin vakkinai peruvathakku asath saliyin vidayathil anuthapam trivittu inru uraiyattruhindeerhal neengal unmai muslim enral idhu varai halattukku asathsali vitayattukku eluttu udhana mahajar ethavadhu samarphittulleerhala janathipathikku illavei illavei
vehu viraivil makkal ithakkana pathilinai valanguvatakku ethirparthu irukkirarkal unmai muslim
சும்மா போங்க ஹகீம் சார்.....சீ உங்களையெல்லாம் நம்பி..........எப்ப மைக் கெடச்சாலும் இப்புடித்தான் பேசறீங்க பட் எதுவும் நடக்க மாட்டினுதே. நீங்க நல்லது பேசுறீங்களா அல்லது நல்லது பேசுற மாதிரி நடிக்கிறீங்களா ஒண்ணுமே வெளங்க மாட்டீங்குது சார். நீங்க நாட்டின் நீதி அமைச்சர் தானே ஒங்கட பவர்ல ஆசாத் சாலிய ரிலீஸ் பண்ணுங்க நீங்க காங்கிரஸ் தலைதான் அமைசர் தான் என்பத ஒத்துகிறேன் இல்லாட்டி நீங்களும் எல்லாரையும் போல மஹிந்தைட வெளக்குமாருதான் okay wa?
ReplyDeleteநீங்களே உடன்படாதவராக இருந்தால் ஏன் இன்னும் அந்த அமைச்சு பதவியை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.....அநீதிக்கு சான்று பகர்வதர்க்கா......???
ReplyDeletePlease ask him to open his mouth where it matters. No point speaking in Tamil and in vavuniya. Please ask him to open his mouth in colombo. And in English or Sinhala. Then you will know if hea has self conscious(manasaatchi) or not.
ReplyDeleteHe spoke in sinhala but not in colombo. But still it is ok. He could continue now every where.
DeleteI worry for one thing is that ACJU will ask the people not to have protest as b4
அமைச்சர் றிசாத் பதியுத்தீன், ஆஸாத் சாலியின் கைது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி விட்ட பின்னரும் நீங்கள் வாயைத் திறக்காமல் இருந்தால் அது உங்களுக்கு பெரிய அரசியல் நஷ்டமாகி விடும்.
ReplyDeleteஆஸாத் சாலியை இன்னமும் நீங்கள் தனி மனிதரென்று எண்ணிக்கொண்டு பேசுவது பெரிய அரசியல் பலவீனம். அவர் இந்த நாட்டு முஸ்லிம்களின் பொதுச் சொத்து. அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும். வீதிக்கு ஒரு உண்ணா நோன்புப் போராளி இந்த நாடெங்கும் பிறப்பார்கள்.
அவர் தேர்தல் காலத்தில் கடிவாளம் இல்லாமல் பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் உண்மையான முஸ்லிம் சமூகப் பற்றுடன்தான் என்பதை தேர்தலின் பின்னரும் அவர் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகம் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளது. அதனால்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்காத நான் கூட இப்போது அவரது விடுதலைக்காககத் துணிந்து குரல் கொடுத்து வருகின்றேன். என்னைப்போல் இந்நாடெங்கும் பல்லாயிரம் பேர் அவர் பக்கம் இப்போது திரும்பியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள்தான் முஸ்லிம் சமூகத்தை தேர்தல் காலத்தில் போலியாக உணர்ச்சியூட்ட முற்பட்டு கடிவாளம் இல்லாமல் 'காவியுடைப் பயங்கரவாதம்' பற்றியெல்லாம் பேசி கடைசியில் அக்காவிகளிடமே மன்னிப்புக் கேட்டு சமூகத்தின் முகத்தில் கரியைப் பூசினீர்கள். இது வரலாறு.
தேர்தலின் பின் ஆஸாத் சாலி தனி வழியில் செல்லக் காரணம், அவரும் இணைந்து பெற்றுக் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநித்துவப் பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து சிறுபான்மை அதிகார மாகாணம் ஒன்றை உருவாக்க நீங்கள் விரும்பாது மீண்டும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்ததே என்பது வரலாறு. அதை திரிபுபடுத்த நீங்கள் முயற்சிக்கக்கூடாது.
உங்கள் மனச்சாட்சி இன்று மட்டுமல்ல. மௌத்து வரைக்கும் உங்களை உறுத்தும். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வெல்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராகவும், இந்த நாட்டின் நீதி அமைச்சராகவும் நீங்கள் கொலுவீற்றிருக்கும் காலத்திலேயே நீங்களே அநியாயம் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தக் கைது இடம்பெற்றிருப்பதால் உங்களது மனச்சாட்சி முள்ளாகக் குத்தவே செய்யும்.
தன் மனைவியின் கைகளால் கொடுக்கப்பட்ட தண்ணீரையும் அருந்தாமல் அவர் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார். நீங்களோ இன்னமும் இந்நாட்டின் நீதி அமைச்சராக அரச பந்தோபஸ்துடனும், சௌபாக்கியங்களுடனும் இருக்கின்றீர்கள்.
இதுதான் உங்களுக்கும் அவருக்கும் இடையிலான வேறுபாடு. என்றாவது ஒருநாள் அவரிடம் உங்கள் கட்சித் தலைமையை நீங்கள் கையளிக்க வேண்டிய காலம் வரும். இன்ஷா அழ்ழாஹ்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சேர்,,, உங்கட பேச்சும்...கமல்ஹாசன் படமும் ஒரேமாதிரிதான் ..ரொம்ப படிச்சவங்களே மண்டைய சொரிய வேண்டி வரும்...நான்பலதடவை உங்கள் பேச்சை கேட்டு பனடோல் போட்டிருக்கிறேன் ...இப்பவாவது சொல்லுங்க நீங்க நல்லவரா கெட்டவரா...
ReplyDeleteநீங்க எல்லாம் பதவியில இருந்து என்ன சார் கிழிக்கிறீங்க . போங்க போய் வேலைய பாருங்க .
ReplyDeleteஆஹா, ஆஹா.., ஆஹா...
ReplyDeleteசீ தூ.
Muslim Politicians must join in one rally, otherwise no use in this politics,
ReplyDeleteWe will make the unity First and then the Rajapaksha will fall on our ankle
ReplyDelete3.103 : And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided.
or are we following
4:119 : And I will mislead them, and I will arouse in them [sinful] desires, and I will command them so they will slit the ears of cattle, and I will command them so they will change the creation of Allah ." And whoever takes Satan as an ally instead of Allah has certainly sustained a clear loss.
I invite all my brothers and sisters to apologize in this thread if they feel they have not put forth the best of manners and in future carry on in the best of manners. It is just a humble request.
May Allah bless us all with patience and love
சில விடயங்களை ,அரசாங்கத்துக்கு உள் இருந்து தான் சாதிக்கமுடியும் ,இப்பவே ஜனாதிபதி இவர் சொல் கேட்பதில்லை ,பதவியை விட்டு வந்தால் ,சொல்லவா வேண்டும் .
ReplyDeleteWe will make the unity First and then the Rajapaksha will fall on our ankle
ReplyDelete3.103 : And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided.
or are we following
4:119 : And I will mislead them, and I will arouse in them [sinful] desires, and I will command them so they will slit the ears of cattle, and I will command them so they will change the creation of Allah ." And whoever takes Satan as an ally instead of Allah has certainly sustained a clear loss.
I invite all my brothers and sisters to apologize in this thread if they feel they have not put forth the best of manners and in future carry on in the best of manners. It is just a humble request.
May Allah bless us all with patience and love
i am strongly agree with vaarauraikal, i have not been vote for anyone yet but insha Allah i will vote to Mr. asath sally if i get a chance insha Allah as his true personality.
ReplyDeleteரவூப் ஹகீம் சார் . நீங்க வெள்ளம் கடந்த பின்புதான் அணை கட்டுறீங்க, இதனால உங்களுக்கும் பயன் இல்லை, மற்றவங்களுக்கும் பயனில்லை. தவறை காணும்போது அந்த இடத்தில் அந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது தான் ஒரு முஸ்லிமின் குணம் அது தான் நபியின் போதனையும் கூட .
ReplyDelete( أفضل الجهاد كلمة عدل ( وفي رواية : حق ) عند سلطان جائر )
அநியாயக்கார ஆட்சியாளனிடம் உண்மையை /நியாயத்தை எடுத்துச்சொல்வது சிறந்த தியாகம் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஏனோ !!!!!
Mr. Vaarauraikal, நான் நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி
ReplyDeleteஎல்லாரும் செய்த குற்றங்களை மகிந்த குடும்பம் ஆதரங்களோடு வைத்துக்கொண்டு யாரையும் வாய்திறக்கமுடியாமல் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றார் இவர்கள் என்னசெய்வார்கள், இவர்கள் வாய் திறந்தால் கதை முடியும் விசாரணை ஆரம்பித்துவிடும்.
ReplyDeleteI don’t think that protest will work at this time.
ReplyDeleteWhile protesting our brothers and sisters may go out of control.
Government is waiting for only this situation to come. Then government will send the Army to control by killing few Muslims or it may bring few thugs from other part of the country by Bus or Train to attack the protesters.
Finally, this may spread all over the country. If something goes wrong, no one is going to help except Allah.
Muslim (???) Ministers must resign from the power.
Specially, the Minister Rauf Hakim, must understand, when his ministry is out of his hand,
he better stays away and let them find another Rajapaksa (Namal is suitable) for the position.
At least world will know, that, the minister can't control his ministry in Sri Lanka.
As public, we must have the power to criticize anyone including the president, when, they make mistakes (wrong act). We can see this all the developed world.