Header Ads



அக்குரணையில் நடந்தது என்ன..?

அஸ்ஸலாமு அலைக்கும்

அகுரணையில் நிகழ்வதற்கிருந்த 90.1 அலைவரிசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட உண்மை நிகழ்ச்சியை இங்கு நாம் சேர்த்துள்ளோம். நீங்கள் நடுநிலையாக செய்தியை வெளியிடுபவர்கள் என இவ்வளவு காலம் நம்பியுள்ளோம். எனவே நாம் உண்மை நிகழ்ச்சியை சாரு பிழிந்து இங்கு உங்கள் இணையதளத்தில் வெளியிடுவதற்காக அதை அனுப்பிவைக்கிறோம். அல்லாஹ்வின் மீது  ஆணையாக இந்த சம்பவம் உண்மையானது.

தொடர்பு: நுஸ்ரத் + அப்கர் + மசுத்

அக்குரணையில் பொதுபல சேனாவுக்கு விடையளிக்கும் 90.1 fm  நிகழ்வின் உண்மை நிலை

''பொதுபல சேனாவுக்கு விடையளிக்கும் முஸ்லிம்களின் நிகழ்வு நிறுத்தப்பட்டது'' என்று Jaffnamuslim.com  28-03-2013 என்ற தங்களது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களாகும். எனவே நடந்த உண்மை சம்பவத்தை நாம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இதனை நீங்கள் பிரசுரிப்பீர்கள் என நம்புகின்றோம். 

நடந்த சம்பவம் வருமாறு,

'பொது பல சேனாவுக்கு மறுப்பு' 'வரிக்கு வரி பதில்' என்ற தலைப்பை தாங்கிய சுவரொட்டி 23.3.2013 சனிக்கிழமை இரவு IRO  நிறுவனத்தின் பணியாளர்களால் அக்குரணை நகரில் ஒட்டப்பட்டது.  மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அக்குரணை IRO  கிளையில் பணியாற்றும் அக்குரணையைச் சார்ந்த சகோ.காமில் அவர்களுடன் அக்குரணை உலமா சபை தலைவர் மௌலவி ஷியாம் அவர்கள் தொடர்பு கொண்டு மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி 'இந்நிகழ்ச்சி அக்குரணையில் நடாத்தப்பட்டால் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் உருவாகலாம், எனவே இந்நிகழ்ச்சியை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என கேட்டுக்கொண்டார்.  

அதற்கிணங்க சகோ.காமில், தலைமையகத்தோடு தொடர்பு கொண்டு மேற்படி மௌலவியின் வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு தலைமையகம் ' பொதுபலசேனா சம்பந்தமான விடயம் பேசாமல் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதாகவும் வானொலியில் 'உலமா சபையின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிகழ்ச்சியை நிறுத்தியதாக அறிவித்துவிட்டு ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துகின்றோம்' என்று கூறியதை சகோ.காமில் உலமா சபைத் தலைவரிடம் தெரிவித்தார். 

அதற்கு அவர் 'அல்ஹம்துலில்லாஹ் அப்படியென்றால் பரவாயில்லை' என்று கூறினார் அதன் அடிப்படையிலேயே உக்குவலை என்ற ஊரிலும் 25.03.2013 அன்று எமது நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதற்கு உக்குவலைப் பிரதேச மக்களே சாட்சி. 

ஆனால் அக்குறணையில் நடாத்தும்போது பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து 'தங்களது நிகழ்ச்சி நடாத்தப்பட்டால் அக்குறணையில் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் என அக்குறணை பெரிய பள்ளியிலிருந்து எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்திருக்கின்றது,' அத்தோடு 'உலமா சபைக்கு இந்நிகழ்ச்சி சம்பந்தமான அறிவித்தல் கொடுக்கப்படவில்லை'  என்றும் கூறிவிட்டு, எமது நிகழ்ச்சி சம்பந்தமாக சில அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய பிறகு,  SLBC Chairman    அவர்கள் FM Technician    அவர்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு பொலிஸுக்கு வரவழைத்தார்கள். அப்போது நாங்கள் வழக்கறிஞருடன் சென்று விபரம் கேட்டபோது இந்நிகழ்ச்சி நிறுத்துவதற்கு நாங்கள் காரணம் அல்ல என்று பொலிஸ் அதிகாரிகள் கூறினார்கள். அதன்பிறகு நாங்கள் வாக்குமூலம் கொடுத்துவிட்டு வந்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக இதுதான் உண்மை சம்பவம்.

4 comments:

  1. இனங்களுக்கிடையில் எப்படி பிரச்சனை வரும்? முழு பௌத்த மக்களுமா அந்த பொது பல சேன என்பது? ஏன் நம்ம மக்களுக்கும் இந்த உலமா சபைக்கும் இது சரியாக இன்னும் விலங்கவில்லை.

    ஒரு தவரான கருத்தை விதைக்கும் போது அதை சரியான முறையில் கருத்தை கருத்துக்கொண்டு விலக்கும்போது எப்படி இனங்களுக்கிடையில் பிரச்சனையை உண்டாக்கும்.... அந்த அலவுக்கு பயந்த கோழைகலாக இருப்பதால் தான் நம் முஸ்லீம்கள் மத்தியிலிருக்கும் அனேக பித்ஹத்களையும் இன்னும் ஒளிக்க மடியவில்லை. இப்படி இருக்கும் கோழைகளை வைத்து எப்படி இத்துய மார்க்கத்தை மற்றவர்களுக்கு எடுத்துசொல்வது.

    ஜனநாயக நாட்டில், சட்டபுர்வமாக எந்த ஒரு வேலையையும் செய்யும்போது இதுபோன்ற சின்ன குலப்பவாதி கும்பலுக்கு பயந்து கைவிட வேண்டிய எந்த தேவையும் இல்லை.

    இப்படி ஒதுங்குவதன் மூலம் தான் அவர்கள் கொடுக்கும் பொய்கள் அப்பாவி மக்களின் உள்ளத்தை தாக்கி அதில் ஓர் சிலரை வழிகெடுக்க காரணமாக அமைந்து விடுகிறது. ஏன் உடணக்குடண் பதில்கள் வைப்பதன் மூலம் தான் பொய்கள் அளியகாரணமாகும். இல்லையேல், அவைகள் தேங்கி கிடக்கும் நீரில் நுலம்புகள் உருவாகி மலேரியா போன்ற கடும் நோய்களை உருவாக்குவது போன்று அந்த பொய்களும் உள்ளத்தில் பல காலம் தேங்கி கிடந்து மக்களிடதில் நச்சுக்கருத்தாய் மாரிவிடும்.

    ReplyDelete
  2. police can allow all BPS thugs activities that's not a problem for unity, but if muslims wanted to give reply on right way that is a problem????

    ReplyDelete
  3. Truewith Proof அவர்ஹலே நீங்கள் சொல்வதை பார்த்தால் உங்களுக்கு மட்டும்தான் எல்ல்லாம் விளங்கியிருக்கு நம்ம மக்களுக்கும் இந்த உலமா சபைக்கும் இது சரியாக இன்னும் விலங்கவில்லை என்று,,, அல்லாஹ்வுக்கஹா இண்டமதிரியான குருஹிய சிந்தனை உடைய சுவரொட்டிகலை அடித்து மக்களை குழப்பாமல் உலமா சபையை போன்று சிறந்த முறையில் பிரச்சனைகளை அணுக வேண்டும் . நீங்கள் ஓட்டும் சுவரொட்டிகள் மூலம் முழு பௌத்த சமூக சமூஹத்தினதும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். பிரபல்ய நோக்கமில்லாமல் அனைத்து விடயங்களையும் அல்லாஹ்வுக்கஹா மட்டும் செய்யவும் .

    ReplyDelete
  4. இங்கு நடந்திருப்பதைப் பார்த்தால் தெளிவாக விளங்குவது என்னவெனில், நமது முஸ்லிம்களே...நம்மைக் காட்டிக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள்.நம்முடைய சிலர்தான், பேரினவாதிகளுக்கு நமது விபரங்களை போட்டுக்கொடுக்கிரார்கள்!.

    இப்படிப் பட்டவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.