உலக சுகாதார தினம்
(ஏக்கூப் பைஸல்)
சுகாதார தினமான ஏப்ரல் 7 ஆம் திகதியிலிருந்து
ஆரோக்கியமான நாடாக நம் நாட்டை கட்டியெழுப்ப
சுகாதாரமான உணவை தேர்ந்தேடுங்கள் !
ஐக்கியா நாட்டு சபையில் உலக சுகாதார தாபனதம் 1948 ஏப்ரல் 7 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. உலகில் வாழுகின்ற அனைத்து மக்களும் உடல் , உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பாக நாடுகளில் எழுகின்ற பிரச்சினைகளுக்கு ஜெனிவாவில் அமைத்து இருக்கின்ற தலைமை அலுவலகத்திற்கு மக்களின் ஆரோக்கியம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதும். அனைத்து நாடுகளிலும் நோயுற்றவர்களுக்குச் சிகிச்சையளித்து. நோய் வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதும். தொற்று நோய்த் தடுப்பில் இருந்து மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட உலக சுகாதார தாபம் ஒவ்வொரு வருடத்தின் ஏப்ரல் 7 ம் திகதி உலக சுகாதார தினத்தை கொண்டாடி வருகின்றது.
இன்றைய தொழில்நுட்ப மாற்றங்கள், சனத்தொகைப் பெருக்கம், குடியிருப்பு, உணவு, சுற்றாடல் மாசடைதல் இயற்கை அனர்த்தங்கள். வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு . தெடர்ச்சியான பணி , கால நிலை மாற்றம் , போதைப் பொருள் அதிகரிப்பு, தங்கி வாழ்பவர்களின் அதிகரிப்பு என்பன மக்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கின்றது.
இலங்கையின் சுகாதாரத்துறை மீதான அரசாங்க செலவீனம் வருடத்திற்கு 12 வீதமாகவும், வைத்தியசாலை 655 ஆகவும் 1462 ஆட்களுக்கு ஒரு வைத்தியர் என்ற வீதமும், 1000 ஆட்களுக்கு 4 படுகைகள் என்ற வீதமும், மத்திய மருந்தகங்கள் 475 ஆகவும் , 10000 ஆட்களுக்கு 13.3 தாதிமார்களும் காணப்படுகின்றார்கள். இந்த நிலை தற்போது அதிகரிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் இன்றைய ஆய்வுகளின் படி இரத்த அழுத்தம் , நீரிழிவு, புற்றுநோய், எயிட்ஸ் , போன்ற நோய்கள் பெருகி வருகின்றன. எனவே அபிவிருத்தி அடைந்து வரும் எமது நாட்டினை கட்டியெலுப்புவதற்கு மக்களுக்கு ஆரோக்கியம் அவசியமாகும். இதனைக் கருத்திற் கொண்டு ஏப்ரல் 07 ஆம் திகதியான இன்று நோய் வருமுன் காப்பு நடவடிக்கைகளையும், தொற்று நோய் தடுப்பில் இருந்து மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாங்கள் ஏப்ரல் 7 ஆம் திகதியை பயன்படுத்துவோம்

Post a Comment