Header Ads



மக்களின் நேரத்தினை சூரையாடும் அரச அதிகாரிகள்...!


(ஏக்கூப் பைஸல்)

மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் பெரும் அதிகாரிகள் மக்களின் ஊழியனாக செயற்பட வேண்டும் ! 

திணைக்களங்களில் பொருப்பு வாய்ந்த  பதவிகளில் இருக்கின்றவர்களும், அதிகாரிகளும் தாபன நடைமுறைக் கோவையின் விதிகளுக்கு முரணாக செயற்படுகின்ற நிலை இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 

சட்டம் பேசுகின்றவர்களும் , மக்களுக்கு முன் நியாயத்தினை எத்திவைக்கின்றவர்களும் மதிய உணவினை உண்பதற்கு திணைக்களங்களை விட்டு  வெளியேரி வீடுகளுக்கும். கடைகளுக்கும் சென்று மதிய உணவினை சாப்பிட்டுவிட்டு திணைக்களங்களுக்கு திரும்பும் போது வேலை நேரத்தில்  02  மணித்தியாலயங்கள் என்ற வீதத்தில் வாரத்துக்கு 10 மணித்தியாலயங்களை அரச அதிகாரிகள் களவாடுகின்றார்கள்.  

தாபன நடைமுறை  கோவையின் விதிகளின் படி அரச திணைக்களங்களை விட்டு வெளியேருகின்ற அதிகாரிகள் மாதத்திற்கு இரண்டு தடவைகள் குறுகிய கால லீவாக ஒன்றரை  மணித்தியாலயங்களையும். ஒரு நாளில் உணவு நேரம் தவிர்ந்து மூன்று அரை மணித்தியாலங்கள் வேலை செய்திருந்தால் அரை நாள் வீவும் எடுக்க முடியும் .இவ்வாறு எந்த அறிவித்தலும் இல்லாமல் வீட்டுக்கு செல்கின்ற மற்றும் கடைக்குச் செல்கின்ற அதிகாரிகள் தானாகவே வேலையை வீட்டு நீங்கியதற்கு சமம் என தாபன நடைமுறைச் சட்டம் கூறுகின்றது. 

திணைக்கள அதிகாரி ஒருவர் ஒரு நாளைக்கு மதியம் சாப்பாட்டுக்கு வழங்கப்படுகின்ற நேரத்தினை கழித்து எட்டு மணித்தியாலயங்கள் வேலை செய்ய வேண்டும். மதிய உணவிற்காக வீட்டுக்கும் கடைக்கும்    செல்கின்ற அதிகாரிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிருவாக உத்தியோகத்தர்கள் அரசாங்க தாபன நடைமுறைக் கோவைக்கு முரணாக செயற்படுகின்றார்கள்.  அரசாங்கம் அவ்வாரான அதிகாரிகளை  இனங்கண்டு பதவி நீக்க வேண்டும் ஏன் எனின்; சட்டத்தினை மதிக்க வேண்டியவர்கள் சட்டத்தினை மீறிச் செயற்படுகின்றார்கள். 

அதிகாரிகள் அலுவலக நேரத்தில் அலுவலகத்தினை விட்டுச் செல்கின்ற நிலை  அதிகரிப்பதனால் அரச அதிகாரிகளை சந்திக்க வருகின்ற மக்கள் ஏமாற்றமடைந்து பல மணித்தியாலயங்கள் காத்திருக்கும் நிலை அதிகரிக்கின்றது. எனவே திணைக்களங்களில் வேலை செய்கின்ற அதிகாரிகள் வேலைக்;கு வரும்போது மதிய உணவினை கையோடு எடுத்து வருவதன் மூலம் வேலை நேரத்தினை களவாடும் நிலையில் இருந்து தப்ப முடியும். 



1 comment:

  1. இவங்களுக்கு தலைக்கனம் ரொம்ப முத்திப்போச்சு வைக்கவேண்டிய இடத்தில வைக்கவேண்டிய ஆப்ப வைச்சா கொலுகொலுக்காம எல்லாம் சரியா வேலைசெய்யும். ஆதாரத்தோட செய்யவேண்டியதைச்செய்யவும் சகோதரரே...

    ReplyDelete

Powered by Blogger.