Header Ads



தாடி வளர்க்காதவருக்கு தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு

தாடி வைக்காத முன்னாள்  பிரதமரின் சகோதரர் ஷரீப்புக்கு, தேர்தலில் போட்டியிட, தடை விதிக்கவேண்டும்' என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், வரும் மே, 11ம் தேதி, பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப். இவரது சகோதரர், ஷாபாஸ் ஷரீப், பஞ்சாப் மாகாண மாஜி முதல்வரான இவர், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். லாகூரில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தாடியில்லாமல் வந்தார் ஷாபாஸ். இதற்கு, அங்கிருந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாடி வளர்ப்பது உண்மையான இஸ்லாமியர்களின் கடமை என்றும், ஷாபாஜ் ஷரீப் அதை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, "பாகிஸ்தான் முஸ்லீம் லீக்( நவாஸ்) கட்சி வேட்பாளரான ஷாபாசின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்' என, அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, ஷாபாஸ் ஷரீப்பிடம், தேர்தல் அதிகாரி கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.