Header Ads



இறை நம்பிக்கையும், வியாபார ஒழுக்கமும்


(நாகூர் ழரீப்)

* வரக்காப்பொலயில் பௌத்தர்களின் வியாபார நிலையங்களை வேறுபடுத்திக் காட்டும் முகமாக பௌத்த கொடிகளை தொங்க விட்டுள்ளமை.

· மஹரகமையில் ஒரு முஸ்லிம் வியாபாரி பொளத்த பிக்குவினால் பொலிஸில் ஒப்படைத்தமை.

* குருணாகல் பகுதியில் ஒரு தலைமை பிக்கு பெருந் தொகையான பொருட்களை ஒரு முஸ்லிம் சகோதரரின் கடையில் கொள்வனவு செய்தமை,
இம்மூன்று நிகழ்வுகளும் எமக்குப் பல உண்மைகளைத் தெளிவு படுத்துகின்றன.

அதாவது, இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்பதை உளப்பூர்வமாக ஏற்றிருக்கம் நாம், எமது வர்த்தகத் துறைக்கும் இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழிமுறைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

முதலில் எம்மைப் படைத்துக் காக்கும் ஏக அல்லாஹ் உணவளித்தல் எனும் பொறுப்பைச் சுமந்துள்ளான் எனும் விடயத்தில் உறுதி கொள்ளல். தொழுகையில் இருந்து ஸலாம் கொடுத்ததும் நாம் ஓதும் துஆவில் 'யா அல்லாஹ் நீ அருளியதை எவராலும் தடுக்க முடியாது, நீ தடுத்தவற்றை எவராலும் கொடுக்கவும் முடியாது' எனவே, எமக்கென்று அல்லாஹ்வால் அருளப்படும் வியாபாரத்தை எவராலும் தடுக்க முடியாது.
அடுத்ததாக நாம் அவதாணிக்க வேண்டியவை, இஸ்லாமிய வர்த்தக ஒழுக்கங்களாகும். இலங்கைக்குள் இஸ்லாம் புகுவதற்கே அறபு முஸ்லிம் வியாபரிகளின் வெளிப்படைத் தன்மையும் நேர்மையுமாகும் என்பதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது.

பிறரது உரிமையில் குறுக்கிடாதிருத்தல்: 'ஒருவர் விலை பேசிய ஒரு பொருளை அவர் அதனைக் கைவிடும் வரை விலை கோரவேண்டாம்' என றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.  (சஹீஹ் முஸ்லிம்).

ஒருவர் ஒரு பொருளை விரும்பி அதற்கு விலை போசும் பொழுது அதில் குறுக்கிட்டு அவரது உரிமையை பறிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
வெளிப்படையான வியாபாரம்: நமது வியாபார நடவடிக்கைகளில் எப்பொழுதும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்தல் வேண்டும். பொருட்களில் காணப்படும் குறைகளை மறைத்தல் ஆகாது. எந்தப் பொருள் பற்றி எமக்குத் தெளில்லையோ அவற்றை விற்பனை செய்வதைத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலமாகவே பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒரு பொருளில் காணப்படும் குறைகளை மறைத்து ஒருவர் விற்பனை செய்தால் அல்லாஹ்வும் மலக்குகளும் அவரைச் சபித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.                         (இப்னு மாஜா).   
         
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் இருவரும் உண்மைத் தன்மையுடன் நடந்து கொண்டால் அவ்விருவருக்கும் பறக்கத் செய்யப்படும். அவர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து கொண்டால் அவ்விருவருடைய பறக்கத்தும் அழிக்கப்படும்' என்று றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.             (சஹீஹ் முஸ்லிம்).

றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உணவுப் பொருள் (கோதுமை) விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவருக்கருகாமையால் சென்ற போது, அதனை தானும் வாங்கிக் கொள்ளலாம் என்று விரும்பி அதனுள் தமது கரத்தை நுளைவத்தார்கள். அப்போது அதன் உற்பகுதி ஈரமாயிருந்தது கண்டு ஏன் ஈரமாகவிருக்கிறது? என்று அவ்வியாபாரியிடம் வினவினார்கள். அதற்கவர் மழை பெய்ததால் உள்ளே ஈரமாகிவிட்டது என்று சொன்னார். அப்பொழுது றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அதனை மக்கள் பார்ப்பதற்கு வசதியாக மேல் பகுதிற்கு மாற்றிவைத்திருக்கலாமே! எவர் எங்களை ஏமாற்றுகிறாரோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல என்னு எச்சரித்தார்கள்.      (சஹீஹ் முஸ்லிம்).

விசால உள்ளத்துடன் செயற்படல்: கொளவனவு செய்பவர்களுடன் நளினமாகவம் பண்பாகவும் நடந்து கொள்ளல் வேண்டும். ஓரவர் வாங்கிச் சென்ற பொருள் சில வேளை அவரது வீட்டாரின் திருப்தியற்றதாக இருக்கலாம். அல்லது அவருக்கே திருப்தியற்றதாக மாறிவிடலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் அதனை அவர் திருப்பித் தரும் பொழுது அல்லது மாற்றீடாக வேறு ஒரு பொருளைக் கோரும் பொழுது அவரது திருப்தியை மதித்து நடந்து கொள்ளல் வேண்டும். இது நன்மையை ஈட்டித் தருவதுடன் அல்லாஹ்வின் அன்பையும் ஈட்டித்தரும். 

பதுக்கல் வியாபாரத்தை தவிர்தல்: மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பதுக்குவதை இஸ்லாம் வண்மையாகக் கண்டிக்கிறது. 'எவர் உணவுப் பொருளை நாற்பது தினங்களுக்கு பதுக்கி வைக்கிறாரோ அவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிடுகிறார். அல்லாஹ்வும் அவரை விட்டும் நீங்கி விடுகிறான் என றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.            (முஸ்னத் அஹ்மத்).

பொய்ச் சத்தியம் செய்யாதிருத்தல்: தமது பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்காக பலர் சத்தியம் செய்கின்றனர். பொருளை விற்பதற்காக பொய்யாகவோ அல்லது மெய்யாகவோ சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு பொய்ச் சத்தியம் செய்வது மிகப் பெரிய பாவமாகும். 

சத்தியம் செய்து ஒரு பொருளை விற்பனை செய்வதால் அப்பொருள் விற்கப்படும். ஆனால், பொய்ச் சத்தியம் என்பது அத்தொழிழையே அழித்துவிடும் என்று றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.                      (சஹீஹுல் புகாரி).

திருடப்பட்ட பொருளை விற்பதைத் திர்த்தல்: சிலர் பிறருடைய பொருட்களைத் திருடி விற்பனை செய்வர். இது எமக்கத் தெரியுமாயின் அப்பொருட்களை வாங்குவதையும் அதனை விற்பதையும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். 

'எவர் ஒருவர் திருடப்பட்ட பொருளை அது திருடப்பட்டது என்று அறிந்திருந்தும் வாங்குவாராயின் அவரது திருட்டு என்ற பாவத்தில் பங்காளியாவார்' என்று றஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்.                     (அல் பைஹக்கீ).       
                
ஹராமான பொருட்களைத் தவிர்ந்து கொள்ளல் : எமது பாவணைக்கு எவைகள் தடுக்கப்பட்டுள்ளனவோ, அவற்றை விற்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளது. நாய், பன்றி போன்ற மிருகளை விற்பனை செய்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஆபாசப்படங்கள், மதுபாணம், கஞ்சா, அபில், போதைப் பொருள், சிகரட், பீடி போன்றவற்றையும் விற்பனை  செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஹலால் என்பது உறுதியில்லாத பொருட்களையும் விற்பனை செய்வதைத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

அன்னிய மதத்தவர்களின் உருவச் சிலைகளையோ, அவர்களது உருவம் போடப்பட்ட பொருட்களையோ கண்டிப்பபாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். மஹரகம மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இப்படியான பொருட்களை விற்பதாகக் குற்றம் சாட்டப்பட்டமை நாம் அறிந்த விடயமாகும்.

எனவே, எமது நிதானமும் உண்மையும் என்றும் எமக்குக் கைகொடுக்கும். சினிமாப்பாடல்களையும் இசைகளையும் தவிர்ந்து கொள்வதுடன், இறை நினைப்பையும் அல்-குர்ஆன் மற்றும் தொழுகையுடனான தொடர்புகளை அதிகரித்துக் கொள்வோம். 

எமது தொழிலகங்களில் வேலை செய்யும் மாற்று மதச் சகோதரர்களுடன் இஸ்லாமிய விழுமியங்களுடன் நடந்து கொள்ளல் வேண்டும். அவர்களது சுக துக்கங்களில் இயன்றவரைப் பங்கெடுத்தல் ஆகியன எமது தொழிலில் பறக்கத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும்.

3 comments:

  1. எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன் யாவரையும் வழி நடத்துவான் அவனே! நிச்சயமாக.

    ReplyDelete
  2. Alhamdulillah ethuve namathu viyabarathay yum namathu tholugai yum sari seyvathatku kidaitha varamagum namahtu tholugain moolam halaalana risk I ketpom islamiya viyabari endra olukkathin moolam allah vidam erunthu melana malakku margalin moolam emathu porutkal vangappadum enbathi manathil niruthuvom (sambavam: thavooth nabi avargalukku viyabarathuda labam muluvathum manithargal vaangiyathal kidaithatahlla kanniyamana Malakkumargal vangiyathal kidaitha labame) ethai avargalukku allah ve solli katigiran ithu ondru pothum islamiyargalagiya nagal viyabaram seivathatku (kadaipidiyungal 1. namathu seerana allah meethu nambikkai 2. namathu seerana tholugai 3. namathu viyabarathin unmai thanmai erunthal namalukku allah vin uthavi nitchayam. Wassalam

    ReplyDelete
  3. جزاك الله خيرا

    ReplyDelete

Powered by Blogger.