Header Ads



நாட்டுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த முதல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முஸ்லிம்


(எம்.எம்.ஏ.ஸமட்)

நாளை (21)ஆம் திகதி 149வது பொலிஸ் வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

1864ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி மாவனல்லையில் குற்றவாளியொருவரைக் கைது செய்வதற்கு முற்பட்டவேளை மொஹமட் சப்ஹான் எனும் முஸலிம் பொலிஸ் உத்தியோத்தர் தன்னுயிரை இத்தாய் நாட்டுக்காக தியாயம் செய்தார். 

கடமை நேரத்தின் போது உயிர் தியாகம் செய்த முதலாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முஸ்லிம் என்பது முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக தன் உயிரைக் கூட அர்ப்பணித்துளார்கள் என சுட்டிக்ககாட்டப்படுகிறது. இவ்வுத்தியோகத்தர் உயிர் நீத்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் வீரர்கள் ஞாபகார்த்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டு  அன்று முதல் இன்று வரை இலங்கையில் பொலிஸ் வீரர்கள்  தினம் அனுஷ்டிக்;கப்பட்டு வருகிறது. 

இதன் நிமித்தம் நாளை (21) 146வது பொலிஸ் வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையில் கடமை நேரத்தின் போது முதலாவதாக உயிர் நீத்த  பொலிஸ் உத்தியோகத்தர் மர்ஹும் சப்ஹான்; முதல் இன்று வரை 3087 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அத்துடன் வடக்கிலும் கிழக்கும் பொலிஸ் சேவையிலிருந்தபோது 1990 ஆண்டு ஜுன் மாதம் 11ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களில் கனிசமான தொகையினர் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள இவர்களும் இவ்வெண்ணிக்கையில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

1 comment:

  1. BBS கோமாளிகளுக்கு சொன்னா இந்த history கும் புதிய விளக்கம் தருவார்கள். இந்த நாளில் அனுஷ்டிக்க வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இலங்கையில் நடந்த வரலாறையே மாற்ற வந்திருக்கும் புனிதர்கள். "bbs இன் பாரம்பரிய முஸ்லிம்களே" இந்த matter ஐயும் கொஞ்சம் bbs கு போட்டுக் கொடுக்கலாமே!!

    ReplyDelete

Powered by Blogger.