Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம்கள் கவலை



(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினரான இனவாத சிங்கள அமைப்புக்களால் முன்னெடுத்துவரும் விசமத்தனமான பிராரங்கள், மற்றும் தாக்குதல் தொடர்பில் தமது கடுமையான ஆட்சேபனையினை புலம் பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்தார். இந்தநிலை இலங்கையில் தொடர்வதை அனுமதிக்க வேண்டாம். இது குறித்து இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற கோறிக்கையினையும் முன் வைத்துள்ளதாகவும் கூறினார்.

இலங்கையில் யுத்த்த்தின் பின்னரான சமாதானம் குறித்த நிலையினை சர்வதேச புலம் பெயர் அமைப்புக்களை தெளிவு படுத்தும் வகையில் சர்வதேச அலெட் நிறுவனத்தின் அழைப்பின் பேரில்,18 நாள் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை பாராளுமன்றத்திற்கு முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டிருந்த சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவின் அங்கம் வகித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பாரளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு தங்களது விஜயம் குறித்து கேட்ட போதெ அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தகவல் தருகையில்,

லண்டன் பார்க் பெலஸ் ஹோட்டலில் இடம் பெற்ற சந்திப்பினையடுத்து,முஸ்லிம்களை ஒவ்வொரு பிரேதேசமாக சென்று சந்தித்து கலந்துரையாடல்களை செய்த்தாகவும் அவர் கூறினார். இந்த சந்திப் போது,இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும்,அண்மைக்கால வேண்டப்படாத சம்பவங்கள் தொடர்பில் பலம் பெயர் முஸ்லிம் அமைப்பு பெரும் வேதனையடைந்துள்ளதாகவும்,மத உரிமைகளை மீறப்படுபகின்ற போது அது குறித்து அரசாங்கம கூடிய கவனம் எடுத்து அதனை பாதுகாத்து கொடுக்க வேண்டும்,கடந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிர்ரேரனையினை அமெரிக்க கொண்டுவந்த போது,அதற்கு எதிராக சர்வதேச முஸ்லிம் நாடுகளும்,இலங்கை முஸ்லிம்களும் அளித்த ஒத்துழைப்புக்களை அரசாங்கம் மறந்திருக்க முடியாது என்பதையும் புலம் பெயர் முஸ்லிம் அமைப்புக்களை தம்மிடம் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அதே வேளை இந்த குழுவினர் வேல்ஸில் அந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பிர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களையும் செய்தனர்.அதே போல் தற்போதைய அதிகாரப் பரவலாக்கல்,மீள்குடியேற்றம்,வடக்கில் இரானுவத்னரால் காணிகள் கையகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தங்களுடன் புலம் பெயர் தமிழ்.முஸ்லிம்,சிங்கள அமைப்புக்கள் கலந்துரையாடியதாகவும்,தற்போது யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டதாகும்,அதனை அவர்கள் வரவேற்று பேசியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.

இவ்விஜயம் குறித்து ஜனாதிபதி மற்றும் கட்சிகளின் தலைரவர்கள் ஆகியாருக்கு விரிவான அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



No comments

Powered by Blogger.