Header Ads



முஸ்லிம் சட்டத்தரணிகள் முன்வருவார்களா..?


(அல்மாஸ்)

'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மணிதனைக் கடிக்க வந்து விட்டது' என்று சொல்வார்கள். இப்போது அந்த நிலைதான் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

குட்டக்குட்ட குணிபவனும் மடையன் குட்டுவபனும் மடையன். இதில் யார் மடையன்? என்ற கேள்விலும் எழுப்பப்பட்டுள்ளது. 'ஹலால் விடயத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் இதுவே எமது இலக்காக இருந்தது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்து முஸ்லிம் பெண்களின் 'ஹபாயா' விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது' என பொது பல சேனாவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயத்தை நாம் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு  நடந்தால் பார்ப்போம் என்றிருக்கப்போகின்றோமா அல்லது அந்நிலை உருவானால் நமது பெண்மணிகளை அவர்கள் ஆடையணியும் உரிமையினை அவர்களின் மானத்தைக் காக்க இப்போதிருந்தே ஆக்கபூர்வமான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னடுக்கப் போகின்றோமா? எதைச் செய்யப் போகின்றாம்.

ஒரே நாடு, ஒரே மக்கள் இந்நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் சம உரிமையுண்டு என்று மேடைக்கு மேடை அதிகாரத்தில் உள்ளவர்கள் முழங்கி வருவதும் அது தொடர்பான வாசகங்களை ஊடகங்களில் பிரசுரிப்பதுவும்  தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இந்நாட்டில் வாழுங்கின்ற சிறுபான்மை இனங்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்காது மத வெறியோடு செயற்படுகின்ற இந்த பேரினவாதக் கூட்டத்துக்கு அதிகாரத்தரப்பினால் கூறப்படும் மேற்படி வாசங்களின் அர்த்தங்கள் விளங்கப்படுத்தப்படவில்லையா? அல்லது விளங்கவில்லையா? 

இந்நாட்டில் வாழுக்கின்ற மக்களுக்கான ஓவ்வொரு விடயம் தொடர்பிலும் அதனை அவர்கள் அனுபவிக்க வேண்டிய முறைமை குறித்தும் அவற்றுக்கான உரிமைகள் தொடர்பிலும் அரசியலமைப்புச் சாசனத்தில் தெளிவாக வரையரை செய்யப்பட்டுள்ளதொரு நிலையில், அந்த உரிமைகளை மற்றவர்களின் உரிமைகளுக்கு  பங்கம் ஏற்படாத வகையில் இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களை அனுபவிக்க விடாது, அவற்றுக்கெதிராக போர்க்கொடி தூக்கியாடும் பொது பல சேனாவை அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கூடாக சட்டத்தின் முன் நிறுத்த முடியாதா? அவர்களின் உரிமை மீறல் நடவடிக்கைகளை மத நிந்தனைகளை எதிர்த்து இன்னும் ஏன் நமது சட்டத்தரணிகள் சட்டமன்றம் ஏறவில்லை. 

பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலையிலா நமது சட்ட மேதைகளும் சட்டவறிஞர்களும், புத்தி ஜீவிகளும் இருக்கின்றனர்.   கோழிச்சண்டைக்கும் மாட்டுச்சண்டைக்கும் மாற்றன் பிள்ளைச் சண்டைக்கும் காணிச்சண்டைக்கும் கடைச் சண்டைக்கும் எதிராகவும் சார்பாகவும் சட்டமன்றம் ஏறி வழக்காட முடியுமென்றால்,   ஒரு இனத்தின் மத, கலாசார பண்பாட்டு விடயங்களில் அத்துமீறி நுழைந்துள்ள இந்தக் கூட்டத்தை சட்டமன்றில்  ஏன் நிறுத்த முடியாது. சட்டம் இதற்கு இடம்கொடுக்க மாட்டாது என்ற யோசனையாக அல்லது தமது சட்டப்பபைகள் நிறையமாட்டாது என்ற கவலையா?

வாக்களித்த மக்களின் உரிமைகள் பரிக்கப்படுகின்ற போது அதற்காக குரல் கொடுக்காமல் பூனைகள் போல் கண்களை மூடிக்கொண்டு இந்த உலகமே இருண்டு விட்டது இங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறியும் பிறரால் கூறப்படும் கூற்றுக்களுக்கு ஆமாம் என பக்கவாத்தியம் இசைத்துக்கொண்டு சுகபோகம் அனுபவித்து வாழும் நமது அரசியல் தலைமைகள் போல்; சட்டத்தரணிகளும் பேரரிஞர்களும் கல்விமான்களும் ஆகிவிட்டனராக என்ற கேள்வி நமது மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இந்த சமூகத்துக்கு விடை வர வேண்டும். அப்படியென்றால் இந்த பொது பல சேனாவின் நடவடிக்கைகளை சட்டத்தினூடாக தடுத்து நிறுத்திட சட்டமன்றம் ஏறுவது நமது சட்டத்தரணிகளின் கடப்பாடாகும். பூனைக்கு மணி கட்டுவது யார்? என்று யோசிக்கும் நேரமில்லை இது.  யார் வேண்டுமென்றாலும் கட்டலாம் பூனைக்கு மணி கட்டப்பட்டால் அதுவே போதுமானது. இதையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது. சிந்தியுங்கள், செயற்படுகள் சத்தியம் என்றும் வெற்றிபெறும். அல்லாஹு அக்பர்
   

2 comments:

  1. தனி நபராக இல்லாமல் கூட்டாக அதாவது முஸ்லிம் சட்டத்தரனிகள் சங்கம் முடிந்தால் ஏனைய சட்டத்தரனிகள் சங்கத்தையும் இனைத்து (தனிப்பட்ட ஒரு அமைச்சருக்கு எதிராக உங்களால் சேரமுடியுமாயின் நிச்சயமாக ஒரு சமூக நன்மைக்காக நல்ல உள்ளம் படைத்த மனித நேயம் கொண்ட அனைவரும் ஒன்று சேர்வர். சில நீதிபதிகளே கூட இந்த சமூக விரோதிகளுக்கு எதிராக யாராவது பொது நல வழக்கு போட மாட்டார்களா என எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்) முடியும் என்றால் மனித நேயமும் தேச பக்தியும் கொண்ட அமைச்சர்கள், பா.உ க்கள்(இது கொஞ்சம் கஷ்ட்டம் தான்) ஆகியோரையும் ஒன்றினைத்து கூட்டு பொது நல வழக்காக இருந்தால் அதற்க்கு சக்தியும் அதிகம் யாரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்படவும் மாட்டர்கள். அது மட்டுமல்ல இதற்கு பின் புலமாக முதுகெலும்பாக உள்ள அரச மட்டத்தினர் கூட கை வைக்க கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனானப் பட்ட ஹிட்லர் முசோலினி, பிரபாகரன் போன்றோர்களே அட்ரஸ் இல்லாமல் போய்ட்டாங்கள். இவன்கள் தூசிகள் யாராவது இதனை செயல் படுத்த முன் வர மாட்டீர்களா

    ReplyDelete

Powered by Blogger.