Header Ads



கலவரத்துக்கு தூபமிடும் பொது பலசேனா


எளில் மிகு இந்தக் குஞ்சு இலங்கை நாட்டில் இரு இனங்கள் மோதி யுத்தம் எனும் சக்கரத்தில் சுழன்று பால் மறவா பாலகனுட்பட படித்தவன், பாமரன், ஆண், பெண், சிறுவன், வயோதிபன் என்ற பாகுபாடின்றி மனித உயிர்களைக் கொன்றொழிப்பதே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்த LTTE பயங்கரவாத அறைக்குள் அடைப்பட்டிருந்த இந்நாட்டு சகல மக்களுக்கும் கிடைத்த விடிவே புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டமை என்றால் மிகையாகாது. 

பாடசாலையா, பள்ளிவாசலா, புகையிரதமா, வானூர்தியா, விளையாட்டா, கொண்டாட்டமா, உற்சவமா எங்கும் பீதி. எந்த நிமிடம், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற திகைப்பில் எல்லோரும்.

வேலைக்குச் செல்லும் தந்தை மாலையில் வீடு திரும்புவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்தோ பரிதாபம் இப்படி ஒரு வாழ்க்கை.

''நான் ஏன் கொலை செய்யப்பட்டேன்'' என்று அறியாது எத்தனை பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறித்தவ உயிர்கள் இந்நாட்டுக்காக இழக்கப்பட்டுள்ளன. 

தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு போராட்டத்தை ஆரம்பித்த இவர்கள், பிற்காலங்களில் குறிக்கோளை மறந்து  இச்சிறிய நாட்டை இரு கூறாக்கி தனி நாட்டுக் கோரிக்கையுடன் செயல்பட ஆரம்பபித்தனர். அத்துமீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்துடன் சம்பந்தமே இல்லாத, எல்லா இனங்களுமே மதிக்கும் இறை இல்லங்கள், பள்ளிவாசல்கள், மத வழிபாட்டுத் தளங்களை அசிங்கப்படுத்தியது மாத்திரமின்றி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பலரையும் கொன்றொழித்தனர் இக்கயவர்கள்.  

பௌத்த மக்களே! பொது பல்ல சேனாவே!

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்களுடன் எந்தளவு சகவாசத்துடனும், தோழ்மையுடனும் என்றும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதனை ஒருபோதும் உங்களால் மறுக்க முடியாது.

பௌத்த மதத்தைச் சேர்ந்த பல ஆண்களும், பெண்களும் முஸ்லிம் கடைகள், தொழில் நிறுவனங்கள், வீடுகளில் வேலை செய்வதைப் போன்றே முஸ்லிம்களில் பலர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களின் வேலைத் தளங்களில் வேலை செய்வதை இன்றும் காணலாம்.

ஸவுதி, டுபாய், கட்டார் போன்ற இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் இந்நாட்டு மக்கள் எந்தளவு சகோதரத்துவமாக, புரிந்துணர்வோடு வாழ்கின்றனர்.

அவ்வாறிருந்தும்,  இத்தாய் நாட்டுக்குள் எவ்வாறு குறிக்கோளை மறந்து LTTE யினர் செயல்பட்டனரோ, அவ்வாறே பொது பல சேன  சுய உரிமைகளில் கையடித்து மீண்டும் ஒரு கலவரத்தை தன் கோரப் பற்களால் கடிப்பதற்கு சமிக்கை காட்டுவது மிக வேதனையாக இருக்கிறது.

மதத்தலங்களுக்கு முன்னால் ஒலி பெருக்கி ஓசை கூட அனுமதியற்றது என்று முன்னோர்கள் எழுதி வைத்த சட்டம் புதைகுழிக்குள் சென்று நன்கு திட்டமிடப்பட்டு மதத் தலங்களின் கண்ணாடிகளே கற்கள் வீசி உடைக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. போதக்குறைக்கு இது பற்றி விசாரித்தால் எமக்கு அதில் சம்பந்தமே இல்லை என்று சிறுபிள்ளைத் தனமாகப் பதில்கூறி கையை விரித்துவிடுகின்றனர்.

உலக வரலாற்றில் முதன் முதலாக இறைவன் அல்லாஹ்வுக்கு கொடும்பாவி எரித்த பாவிகள் எனும் பட்டத்தைச் சூட்டிய இழிவு ஒரு போதும் அழியாத வடு என்பதை எவரும் மறக்கப்போவதில்லை. இவ்விழிவை உரிமைகோரியவர்கள் பௌத்தமதத்தைக் கட்டிக் காக்கப் போகும் சிலர்தான் என்று நினைக்கும்போது வேதனைதான்

இந்நாட்டில் நூற்றுக்குப் பத்து வீதமே முஸ்லிம்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நூற்றுக்கு 01 வீதமும் பௌத்தர்கள் இல்லாத ஒரு முஸ்லிம் நாட்டில் புத்தரின் கொடும்பாவி ஒன்று எரிக்கப்பட்டால் உங்கள் நிலை எப்படியிருக்கும் என்று சற்று சிந்திப்பீர்களா பௌத்த சகோதரர்களே.

இந்நாடு பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட ஓர் நாடு என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

ஆனால், பழங்காலந்தொட்டே இந்நாட்டில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறமை நீங்கள் அறிந்த யதார்த்தம். அவ்வாறிருந்தும், முஸ்லிம்களின் சில அடிப்படைகளுக்கு இல்லாத பொல்லாத கற்பனைச் சித்திரங்களை வரைந்து கனவிலும் நினைக்காத சில செய்திகளைப் பகிரங்கமாக அள்ளிக் கொட்டி உங்கள் பௌத்த மத மக்கள் மத்தியில் கசப்புணர்வையும்,   இனத்துவேசத்தையும் கிளரிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். அத்தனையையும செய்து விட்டும் நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்லர், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே நோக்கம் என பூசிமெழுகுவது வேடிக்கையாகும்.

ஹலால் சான்றிதழை அகற்றியே தீருவோம் என வறிந்துகெட்டிக்கொண்டு பாதைக்கு இறங்கிய நீங்கள் அதனோடு நிறுத்திக் கொள்ளாமல் தனி மனித உரிமைகளில் அத்து மீறுவது உங்களுக்கே புரியாமல் இருப்பது தான் கேவலம். 

நாட்டு மக்களுக்கு ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும், மரியாதையையும் கற்றுக் கொடுக்க வேண்டிய நீங்கள் எப்படித் தான் உங்கள் மக்களுக்கு புத்த பெருமானின் நற்போதனைகளைக் கற்றுக் கொடுப்பீர்களோ???

''கெட்டுப் போகும் பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கும் உப்பே கெட்டுவிட்டால், அந்த உப்பை எது தான் சீர்படுத்தும்''  என்ற அரபுக் கவிதை உங்களுக்கும் பொருந்தும்.

பௌத்த மத சகோதரர்களே! பொது பல சேனா அங்கத்தவர்களே! முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் விரலடிப்பதைத் தவிர்த்து உங்களிலுள்ள தவறுகளை முதலில் சீர்படுத்துங்கள். 

ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பத்துக்கு ஆடை அணியலாம் என்பதே தொண்டு டொட்டு இந்நாட்டின் சட்டம். அசிங்கமான இரு மெல்லிய ஆடைகளோடு இலங்கையின் கடலோரங்களில் நடமாடித்திரிவதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத மௌனிகள் பாதுகாப்புக்கும் கௌரவத்துக்கும் தன்னிகரற்ற இஸ்லாமிய ஹிஜாப், பர்தா ஆடைகளால் நீங்கள் அடையும் துன்பத்தை முதலில் அறிவியுங்கள். இந்நாட்டில் வாழும் மொத்த முஸ்லிம் பெண்களில் குறைந்த ஒரு தொகையினரே அதனை சுயமாகவே அணிகின்றனர். யாரும் கட்டாயப்படுத்தவோ, திணிக்கவோ இல்லை என்பதைப் புரியுங்கள்

மனித நேயத்தைக் கற்று அதன்படி வாழ முயற்சிங்கள். மிருகத்துக்கும் மனிதனுக்குமிடையில் பாரிய வித்தியாசம் இருப்பதை உணருங்கள்.  

வீணான சந்தேகங்களையும், அப்பட்டமான பொய்களையும் கையில் வந்த படி எழுதி இனக் கலவரத்துக்கு வித்திடுவதைத் தவிருங்கள். அங்கும் இங்கும் கலவரத்தைத் தூண்டும் நோட்டிஸ்களை விநியோகிப்பதைத் தவிருங்கள்.

பௌத்தர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள், கிறித்தவர்கள் ஆகிய நாம் எல்லோரும் மற்றவர்களைப் புரிந்து வாழ்ந்து வீண் பிரச்சினைகளைத் தவிர்ப்போம். 

அ.ஸ.மு.ஸி

3 comments:

  1. A good article. Please translate to sinhala and english.

    ReplyDelete
  2. Dear Buddhist Brothers and sisters, If you need this in English here it is. It was a time of bomb blast and terror everywhere, even at schools, bus stand, railway stations etc. When we got out in the morning we were not sure to return, Innocent people were murdered without a cause. Now it is over after about 30 years. dear members of the majority Sinhalese Community, we cannot forget how closely we Muslims and Sinhalese work together in public and private sectors, especially Muslims work in Sinhalese's work places and Sinhalese work in Muslims' work places and live as neighbours in many villages and towns and share sorrows and happiness together, a very good example is the workers in the middle east.But it is sad to see a few members of your community are roused against us and trying trying saw the seeds of hatred to create another riot in the country. when the mosques are stoned and glasses broken you simply say 'Not your work' like children. For the first time in the word a icon a God is burned in Srilanka and you have taken that good name for doing so and you say you do all these to protect your religion. It is true that we are a minority. But if a statue of Lord Buddha is burnt in a Muslim where not even 1% of Buddhist not living how will be your feeling? When you are started it you said 'HALAAL' but moving on to interfere in the rights of individual in case of 'face cover' When you do all these how will you preach the preaching of Lard Buddha? You never opened your mouth against those wearing two pieces of cloth and walk along the beach, explain us but how does it harm you and your religion? That is their selection for security from the wild environment. Please understand the reality as what humanity means. Dont create new stories to reason out your problems. Guide others and others will guide you all and let's live together, Thank you.

    ReplyDelete
  3. please translate this article for English and Singhala .and try to publish both news paper.because
    this kind of news should reach none Muslim brothers

    ReplyDelete

Powered by Blogger.