Header Ads



முஸ்லிம்கள் கட்டுக்கோப்புடன் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டுவது அவசியம்


( SAFRAN BIN SALEEM)

பொது பல சேன , சிங்ஹலே ராவய போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அநுராதபுர ஸியாரத்தில் தொடங்கிய அவர்கள் பல பள்ளிவாசல்கள் , எமது உரிமைகளில்லெல்லாம் கை வைத்துள்ளார்கள். ஹலால் விவகாரத்தை பூதாகரமான பிரச்சினையாக மாற்றியது  மட்டுமல்லாது இன்று புர்கா, இஸ்லாமிய வங்கி முறைமை என்று இன்னும் பல வற்றில் கை வைக்க தொடங்குகிறார்கள்.

ஆனால் எமது சமூகம் ஆரம்பம் முதல் தன்னால் இயன்ற அளவு பொறுமை காத்து வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது இனவாத செயற்பாடுகளை விஸ்தரித்துக்கொண்டனர்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் எவ்வளவோ விளக்கங்களை கொடுத்தும் இன வாதம் ஓய்வதாக இல்லை.

குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்பதற்கினங்க நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் காட்ட வேண்டும் என INAMULLAH MASIHUDEEN (NALEEMI) அவர்கள் வெளியிட்ட கருத்தை ( http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_5381.html ) நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இவ்வாறு நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை ஞாபகப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.

1.       இஸ்லாமிய வரையரைகளை முழுமையாக பேணல். 

2.       நாம் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்டும் போது கைகளில் தேசியக் கொடிகளை ஏந்துதல்.

தேசியக் கொடிகளை அதிகமாக பறக்க விடல்.

3.       நாம் இலங்கையர்கள் ,இது எமது தாய் நாடு என்ற உணர்வுடன் செயற்படல்.

4.       தென்னிந்தியாவில் விஸ்வரூபம் படத்துக்கெதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தது போல் எம்மத்தியிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒன்று சேர வேண்டும்.

5.       ஆரவாரமின்றி அமைதியாக எமது எதிர்ப்பினை காட்ட வேண்டும்.

6.       எமது குரல்கள் , சுலோகஙோகள் நாட்டுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது.

7.       எமது குரல்கள் , சுலோகஙோகள் பௌத்த மதத்தையோ, ஏனைய மதங்களினையோ தாக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது. . (பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.)          

எமது நிலமையினை , கருத்துக்களை கச்சிதமாக எத்தி வைக்க வேண்டும்.

8.       ஊர் தலைமைகள் முழுமையான முறையில் ஒழுங்கு படுத்தி நெறிப் படுத்த வேண்டும்.

9.       நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் காட்ட வேண்டும்

10.   இயன்ற அளவு மாற்று மத சகோதரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

11.   இன்னும் பல......................................................................................................................

அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு நாடு முழுவதும் முழுமையான கட்டுக்கோப்புடன் தமது ஒருமித்த ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பினை காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.




6 comments:

  1. அல்லாஹ் அக்பர் அணைத்து முஸ்லிம்களும் தம் எதிர்பை அமைதியான முறையில் நடந்தது கொள்வது நன்று நம் அணைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள் பொருமயோடும் நாம் எதிர் நோகும் பின் விளைவுகள் பன்றியும் சிந்தித்து செயற்படுவது மிக நல்லது நாளைய

    தக்பீர் அல்லாஹாக்கு அக்பர்.....

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் .

    நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் செய்வது தான் மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே பொறுப்புள்ள எல்லா இயக்கங்களும் ஒரு தலைமையின் கீழ் இதை ஏற்பாடு செய்வது சிறந்தது என நினைக்கிறேன். இந்த எதிர்ப்பு நடவடிக்கையை கையாள்வதற்கு இஸ்லாமிய இயக்கங்களின் அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்தாலோசித்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிகள்வாக இது அமைய வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

    நன்றி ,

    ReplyDelete
  3. allahu akbar insah allah

    ReplyDelete
  4. ஓரிறைக்கொள்கையை ரத்தினச்சுருக்கமாக சொல்லக்கூடிய பதாதைகளையும் தாயார் செய்வதால் , ஓர் குறைந்த அளவிலாவது அல்லஹ்வின் திருப்தியைப்பெற எடுத்த முயற்சியாய் அமைந்து விடும்.
    மற்றும் அவரவர் விருப்பத்துக்கு பதாதைகளை எழுதுவதும் நல்லதல்ல எனபதை நம் மக்கள் எழுதும் comments களைப் பார்த்தாலே விளங்கிக் கொள்ளலாம். இவற்றை ஒரு அமைப்பு பாரமெடுத்து செயவது மிகவும் நல்லது

    ReplyDelete
  5. நல்ல யோசனைதான், ஆனால் நமது சகோதரர்களிடம் மேலே சொல்கழன்றளவு பக்குவம் இருக்கின்றதா? குளிக்கப் போய் சேறு புசிய விடயமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சகோதரர்கள் மிகஇலகுவாக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் என்பதுதான் வரலாறு. இப்படியே எவ்வளவு காலம் இருக்கப் போகின்றோம்? எனவே மிகுந்த மீண்டும் மிகுந்த கவனத்துடன் செயற்படுவோம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.