Header Ads



பிரேசில் பூனை இப்படியும் செய்தது



பிரேசில் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜனெய்ரோவில் உள்ள அலகோவாஸ் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற நூதனமான கடத்தல், சிறைக்காவலர்களை திகைப்பில் ஆழத்தியுள்ளது. ஆங்கில புத்தாண்டு தினமான கடந்த 1ம் தேதி, அலகோவாஸ் சிறைச்சாலையின் பிரதான வாயிலில் சிறைக்காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, உடல் முழுவதும் பேண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட ஒரு பூனை சிறையினுள் நுழைய முற்பட்டது. சந்தேகப்பட்ட காவலர்கள் அந்தப் பூனையை பிடித்து, எப்படி காயம் ஏற்பட்டது? என்று சோதித்தனர்.

அந்த சோதனையில், பூனையின் உடலுடன் கட்டிவைக்கப்பட்டிருந்த துளைப்போடும் டிரில் பிட்டுகள், ஒரு செல்போன் சார்ஜர், இயர் போன், மெமரி கார்ட், பேட்டரிகள் ஆகியவற்றை கண்டுபிடித்த காவலர்கள் உறைந்துப் போயினர்.

பூனையின் மூலம் இந்த பொருட்கள் யாருக்காக கடத்தப்பட்டது என்பது புரியாமல், அவர்கள் தவித்துக் கொண்டுள்ளனர். ம்னிதர்கள் கடத்தினால் 2 தட்டு தட்டி உண்மையை வரவழைத்து விடலாம்.

ஆனால், பூனையை... பிழிந்து காயப்போட்டாலும், அது வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என உணர்ந்துக் கொண்ட காவலர்கள், சிறையினுள் உள்ள 263 கைதிகளையும் இந்த கடத்தலில் குற்றவாளிகளாக சேர்க்க முடிவு செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.