Header Ads



கோழி போட்ட குட்டி (படம் இணைப்பு) - இந்தியாவில் அதிசயம்


கோழிகள் முட்டைதான் போடும். கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன். இவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது. 

இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது. இதை பத்ரனின் மனைவி வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு காட்டியுள்ளார். தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. 

வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கோழி குட்டி போட்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா, சுற்றுச்சுழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமா என்று மக்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.



No comments

Powered by Blogger.