Header Ads



கடாபி கால்வாய்க்குள் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தவர் சித்திரவதைக்குள்ளாகி மரணம்



tn

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியை பிடித்த முன்னாள் கிளர்ச்சிப் படை வீரரின் இறுதிக் கிரியையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஒம்ரான் பின் ஷாபான் என்ற கிளர்ச்சிப் படை வீரர் கடாபி ஆதரவாளர்களால் கடத்தி துன்புறுத்தப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளர். 22 வயதான இவரது உடல் மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இவரது இறுதிக் கிரியையில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அத்துடன் ஷாபானின் உடலுக்கு வீர மரியாதை செலுத்தப்படும் என லிபிய அரசு அறிவித்துள்ளது.

ஷாபான் கடந்த ஜுலையில் ஆயுதக் குழு ஒன்றால் கடத்தப்பட்டு 50 தினங்கள் பானி வலித் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இது முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவுபெற்ற பகுதியாகும். லிபிய இடைக்கால அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் இவர் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டார்.

எனினும் அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததோடு துப்பாக்கிச்சூட்டுக்கும் இலக்காகி இருந்தார். இவர் பாரிஸ் நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட போதும் அது பலனின்று நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி சிர்த் நகரில் ஒரு கால்வாய்க்குள் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தவர் ஷபான் ஆவார்.





2 comments:

  1. கத்தாபியின் ஆட்சி கவிழ்க்கப் பட்டது எப்படிப் போனாலும்,
    கத்தாபியை கொலை செய்த விதம் எப்படி அங்கீகரிக்கப் பட முடியாத ஒன்றோ, அதே போன்றே இந்தக் கொலையும் அங்கீகரிக்கப் பட முடியாத ஒன்றே.

    கத்தாபி ஒரு சிறந்த முஸ்லிம் என்று சொல்லத்தக்க ஆட்சியாளராக இருக்கவில்லைதான், இருந்தாலும் கத்தாபியைக் கொலை செய்த விதம் மிருகத் தனமானது, நியாயப் படுத்த முடியாதது.

    பிரபாகரன் போன்ற ஒரு கொடிய பயங்கரவாதி கொல்லப் பட்டிருக்க வேண்டிய முறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை சிறப்பாக நடாத்திச் சென்ற ஒரு ஆட்சியாளரைக் கொலை செய்தது மிகவும் மோசமான செயலாகும்.

    ReplyDelete
  2. இஸ்லாத்தின் கொள்கைகளை இம்மக்கள் குழிதோண்டிப் புதைத்து விட்டதன் விளைவு... எவரிடமும் பண்பில்லை. இஸ்லாமிய அடிப்படை இல்லை. இதற்கு உரமூட்டும் மேட்கத்தயர்கள் இவர்களுக்கு வைத்த பெயர் "அடிப்பதை வாதி". அடிப்படை இல்லாதவனுக்கு "அடிப்படைவாதி" என்ற பெயர். நகைச்சுவையாய் இல்ல!!

    ReplyDelete

Powered by Blogger.