Header Ads



ஈராக்கில் அமெரிக்க கையாண்ட உக்தி, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக..!

 
 'சவ்வத்'

முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய ஆபத்து இலங்கையில் காத்திருக்கின்றது என்றே சிந்திக்கச் சொல்கின்றது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஈராக்கில் அமெரிக்க கையாண்ட, பலவீனப்படுத்திவிட்டு தாக்கும் உத்தியை, இலங்கையில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கையாள முயல்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக பலவீனப் படுத்திவிட்டு, பின்னர் தாக்கி அழிக்கலாம் எனக் கருதுகின்றார்களோ தெரியவில்லை.

முஸ்லிம் வர்த்தக நிறுசனங்கள்  மோசமான முறையில் விமர்சிக்கப்படுகின்றது.  முஸ்லிம்களுடையது என்று நமக்கு பொதுவாகத் தெரியாத வியாபரங்களைக் கூட, அவர்கள் தேடித் பிடித்து பகிஸ்கரிக்கும் படி அழைப்பு விடுக்கின்றனர்.

கொள்கலன்களில் பொருட்களை இறக்குமதி செய்வதில்கூட முஸ்லிம்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு முன்னர் கிடைத்த அளவு இலாபங்கள் இப்பொழுது கிடைப்பதில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பான்மையினரின் திட்டமிட இனவெறிச் செயல்பாடுகள், முன்னரை விட வளர்ச்சி அடைந்துள்ளன. அவர்கள் வெறுமனே அறிக்கை விடுவதுடன் நின்று விடாமல், செயற் குழுக்கள்  அமைத்தும், மாணவர்களை முறையாக அணுகியும் முஸ்லிம்கள் தொடர்பான அவர்களது நச்சுக் கருத்துக்களை விதைக்கின்றனர்.

முஸ்லிம்களும், தற்பொழுது அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கு அளவு கடந்து வளைந்து கொடுப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது.

நாம் நட்பினால், நல்லெண்ணத்தினால் அவர்களுடன் அதிகம் வளைந்து கொடுக்கின்றோமா, அல்லது அச்சத்தின் காரணமாக வளைந்து கொடுக்கின்றோமா என்பதனை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் இல்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான வியாபாரப் பகிஸ்கரிப்பு எந்த அளவு வியாபாரங்களைப் பாதித்துள்ளது என்பது குறித்து, இரகசியமான ஆய்வொன்று செய்யப்படவேண்டியுள்ளது. முஸ்லிம்களில் அதிகமான வியாபாரிகள், தமக்கெதிரான சதிகள் குறித்து எத்தகைய கவலையும், அக்கறையும் இல்லாமல், 'ஏமாற்றி விற்று அடிக்கிற மட்டும் கொள்ளை லாபம்' என்று சுய நலப் போக்கிலேயே தொடர்ந்தும் செயல்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்கதல்கள், நாடு முழுவதும் திட்டமிட்ட நிகழ்வாக ஒரே தடவையில் நடை பெறாமல், சிறு சிறு தனிப்பட்ட நிகழ்வுகளாக அரங்கேற்றப் படும் ஆபத்து உள்ளது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து, முஸ்லிம்களின் எதாவது ஒரு தவறை காரணமாக வைத்து, பிரச்சினையை உண்டாக்கி, முஸ்லிம்களைத் தாக்கி, சொத்துக்களை அழித்து, சூறையாடிவிட்டு, பழியை முஸ்லீம்கள் மீதே போடும் தந்திரம் கையாளப் படலாம்.

'முஸ்லிம்களின் தவறே பிரச்சினைக்குக் காரணம்' என்று அஸ்வர்கள், காதர்கள் வாயால் அறிக்கைகள் கூட வெளியிட வைக்கப்படலாம்.
 
இன்ஷா அல்லாஹ் நாம்...??

7 comments:

  1. I suggest that better to translate in English and such messages are must be pass to the Muslim world leaders at time to time as immediately, in order to prevent at early.

    Almighty Allah knows the best and Allah is sufficient for us.

    ReplyDelete
  2. cader /azwar /faais etc.... allam suyanalavathihal andru allorum arinthadhe..... solla thevai ellayeh adhu..............

    ReplyDelete
  3. அல்லாஹ்வின் உதவி வரும், அல்லாஹ் பாதுகாப்பான் என்று எதிர்பார்க்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் இருக்கின்றார்களா??

    அதிகமானவர்கள் பெயரளவிலும், அரை குறையாகவும் மார்க்கத்தைப் பின்பற்றும் நிலைமையில், இலங்கை முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி, பாதுகாப்பு வரும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை.

    வியாபாரம், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என்று அதிகம் பெரிய விடயங்கள் குறித்து ஆராய்வது ஒருபுறமிருக்க, இந்த சிறு விடயத்தையாவது நோக்குங்கள்.

    "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நாய் மற்றும் உருவப்படங்கள் உள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி."

    என்ற ஹதீஸ் படி இலங்கை முஸ்லிம்களுடைய நிலைமை என்ன? பெரியவர்கள் செய்வது ஒருபுறமிருக்க, ஆரம்பப் பாடசாலை முதலே நமது குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் வரையப் பழக்குவதே "அம்மா" என்ற உருவத்தைத்தானே. அதற்குப் பிறகு நாய், பூனை, வளரும் வயதில் சீகிரியா அரை நிர்வாண ஓவியங்கள்.....

    மலக்குகளே வர மாட்டார்கள் என்னும் பொழுது, அல்லாஹ்வின் உதவி வரும் என்று எப்படி எதிர்பார்ப்பது என்று புரியவில்லை.

    ReplyDelete
  4. Allah Padukappan, Every body be silent at home,,,,Ask Dua ,,,,,,,,,,,,,,,,,, Then Why Did Rasoolullah (Saw)lead Badr, Uhad, KHandak.etc.. ? is his Dua not powerful? He could have asked DUA,,, and stayed in Madinah........
    Every one must think about the situation, We must convey the way of Rasoolullah (SAW) properly.........
    When We are ready for evry thing... ALLAH PADUKAPPAN if not sorry..... THAT S THE LAW OF ISLAM,,, After we are ready,,,,,,, then if we win or lose THATS THE BIGGEST VICTORY for a Muslim..

    ReplyDelete
  5. நிச்சயமாக அல்லாஹ் பாதுகாப்பான்.ஒட்டகத்தைக் கூடகட்டி வைத்து விட்டுத்தான் தவக்கல் வைக்க நபி (ஸல்)கூறியுள்ளார்கள்.சகல மட்டத்திலும் இன,மதவாத கருத்துகள் புரையோடிக் கிடக்கிறது.நான் சந்தித்த ஒரு சில
    வியாபாரிகள் சிங்களவர்களுக்கு 20 % வரிஎன்றால் முஸ்லீம்களுக்கு 40 %அல்லது அதற்கு மேல் என்றும், இன்னும் பலவிதமான வேலைகள் நிமித்தமாக எங்கு சென்றாலும் ஏதாவது குறை கண்டு தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
    என்றும் சொன்னார்கள்.பெயரளவில் தானே நாம் முஸ்லிம்கள்.நமது செயல்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்
    படியாக இல்லை.துஆவைக் கொண்டு தான் நாம் உதவி தேட வேண்டும்.
    அரசியல் வியாபாரிகள் எல்லாம் சகல வழிகளும் தப்பி விடுவார்கள்.உலகம் முழுக்க முஸ்லிம்களுக்கு இதுதான் நடக்கிறது,நடக்கப் போகிறது.முஸ்லிம்களே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள்.இன,மதவாதிகள்
    நினைப்பது போல் சாதிக்க முடியாது .ஆனால் நாம் ஒரு சில சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கத்தான்
    வேண்டும்.ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலையில் தான் அல்லாஹ் உலகை ஒழுங்கு படுத்தியுள்ளான்.ஆகையால் அல்லாஹ்விடம் தவக்கல் வைத்து பொறுமையுடன் உண்மையான மக்களாக மாற்று மதத்தவர்களுக்கு நம்மை பற்றிய தெளிவுகளை புரிய வைப்போம்.இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  6. muslimkal meethana intha adakkumuraikal bouththa..matha thalaivarkalal maddum metkollappaduvathaha theriyavillai.... ithu thittamitta arasiyal melthalaththilirunthe...metkollappaduvathaha ...enna thontrukirathu.... enave....muslimkale..BE CAREFULL, PRAY ALLAH, ASK THUVA..

    ReplyDelete

Powered by Blogger.