Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட முஸ்லிம்களின் பெயரால் புதிய சதிமுயற்சிகள்..!

சுவைர் மீரான்

முஸ்லிம்களே எச்சரிக்கையாக இருங்கள், உங்களை வலையில் வீழ்த்தி, அழ அகலம், நீதி நியாயம் தெரியாமல் நீங்கள் பதியும் மடத்தனமான வார்த்தைகளை வைத்தே மொத்த முஸ்லிம் சமூகத்தினதும் இரத்தைத்தை  ஓட்ட சதி நடக்கின்றது. நடப்பது என்ன என்றே புரியாமல் மந்தைக் கூட்டம் போல எல்லாவற்றுக்கும் தலையாட்டிப் பழகிவிட்ட முஸ்லிம்களைக் கொண்டே அவர்களின் குழிகளை வெட்டும் நாசகார வேலை கச்சிதமாக மேற்கொள்ளபடுகின்றது.

பெளத்த சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட முஸ்லிம்களின் பெயரால் புதிய சதிமுயற்சிகள் நடைபெறுகின்றதோ என சந்தேகப் படும் படியான ஒரு நிகழ்வுக்கு முகநூலில்முகம் கொடுக்க நேரிட்டதன் விளைவே இந்த விழிப்பூட்டல் கட்டுரை.
 
பாகிஸ்தானின் பிரபல கிரிகட் வீரர் சஹீட் அப்ரிடியின் பெயரில் ஒரு எழுத்தை மாற்றி திறக்கப்பட்டுள்ள கணக்கொன்றின் மூலம் மேற்படி சதி அரங்கேறுவதனை காணக் கூடியதாக உள்ளது. Shahid  Afridi என்ற பெயரை சற்று மாற்றி Sahaid Afridi ........................ என்று போட்டுள்ளார்கள்.
 
மேலோட்டமாக பார்க்கும் பொழுது வித்தியாசத்தை உணர்ந்துகொள்வது சற்றுக் கடினம். இதனை எழுதும் நேரம் வரை 99 நண்பர்களுடன் இருக்கும் இம்முகநூல் கணக்கு புதிதாக ஆரம்பிக்கப் பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். போடப்பட்டுள்ள Profile  Picture உம் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப் பிராயத்தை ஏற்படுத்தவென வேண்டுமென்றே போடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
 
தேடிப் பார்க்க முடிந்த அளவில், ஆரம்பத்தில் கஃபாவின் புகைப்படம்,  மற்றும் இன்னொரு பதிவை பதிந்து தன்னை முஸ்லிம் என்று நம்ப வைத்த பின்னர், Sahaid Afridi என்ற கணக்கின் மூலம் சதி முயற்சி ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கணக்கில், 'வஞ்சகப் புகழ்ச்சி' எனக் கூறுவார்களே, அதே போன்ற ஒரு வஞ்சக முறை கைக்கொள்ளப் பட்டுள்ளது. பெளத்த மதத் துறவி போன்று தோற்றமளிக்கும் ஒருவர், காவி உடை அணிந்த (பெண் துறவி போன்ற தோற்றம் அளிக்கும்)இளம் பெண் ஒருவரை கைகளால் நெருக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று உட்பட, பெளத்த துறவிகளை இழிவு படுத்த கூடிய புகைப்படங்கள் சில பகிரப்பட்டுள்ளன.

நண்பர்கள் மட்டுமல்லாது, அனைவரும் பார்க்கக் கூடிய விதமாகவும், நண்பர்களின் நபர்கள் கூட குறிப்புப் பதியும் விதமாகவும் பரந்த வசதிகள் கூட ஏற்படுத்தப் பட்டுள்ளமை, மற்றும் முகநூல் புகைப்படமொன்றில் ஒட்டு (Tag) செய்ய முடியுமான உச்ச எண்ணிக்கையான 50 பேரை ஒட்டு செய்துள்ளமை என்பன மேற்படி புகைப்படங்கள் முடியுமானவரை அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலாக இருக்க வேண்டும் என்பதனை ஊகிக்க முடிகின்றது.

மேற்படி புகைப்படங்களில் முஸ்லிம் பெயர்களில் நிறைய கருத்துக்கள்  (Comments) பதியப் பட்டுள்ளன. அவற்றில் அதிகமானவை, பெளத்த மதத்தை/ பெளத்த துறவிகளை தூற்றுவனவாக, கிண்டல் செய்பவையாக பதியப் பட்டுள்ளன. சில சிங்களவர்களும் கருத்து பதிந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நிதானமான போக்கைக் கடைப் பிடித்திருக்கின்றார்.

எனினும் முஸ்லிம் பெயர்களில் பதியப் பட்டுள்ள அதிகமான கருத்துக்கள் பெளத்த மக்களை சீண்டுபவையாக, கோபமூட்டுபவையாகவே உள்ளன. குறித்த கணக்கை இயக்குபவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்க வேண்டும்.

எனினும் சில சகோதரர்கள் இதனை கண்டித்தும் கருத்துப் பதிந்துள்ளனர். இவர்களில் யாருமே இதன் பாரதூரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மேற்படி கணக்கை இயக்குபவர் ஒரு சிங்கள பெளத்த இனவாதியா, அல்லது முஸ்லிம் சிங்கள கலவரம் ஏற்படுவதை காண ஆவலுடன் காத்திருக்கும் புலி ஆதரவு சக்திகளா என்று தெரியவில்லை. மேற்படி கணக்கின் மூலம்முஸ்லிம்கள் சதி வலையில் வீழ்த்தப் படுகின்றனர். அவர்கள் பதியும் குறிப்புக்களை வைத்து, முஸ்லிம்கள் பற்றி நல்லபிப்ராயத்துடன் உள்ள சிங்கள மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடும் சதி காண
கச்சிதமாக மேற்கொள்ளப் படுகின்றது.
 
மேலே குறிப்பிட்ட முகநூல் கணக்கு மட்டும்தான் இவாறு செயல்படுகின்றது என்பதல்ல, இன்னும் பல இருக்கவேண்டும். அவை முகநூல் கணக்குகளாக மட்டுமல்ல, blogs  எனப்படுகின்ற வலைப்பதிவுகளாகவும் இருக்கலாம். இவை குறித்து நாம் தான் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும்  இருக்க வேண்டும். சேலை முட்களின் மீது விழுந்தாலும், முட்கள் சேலையின் மீது விழுந்தாலும், பாதிப்பு சேலைக்குத்தான். முஸ்லிம்கள், தாம் பதியும் சிறு வார்த்தைகளும், கருத்துக்களும் கூட தாம் சார்ந்த மொத்த சமூகத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்குகின்றது என்ற உண்மையை புரியாமல், மனோ இச்சைக்கு அடிமைப் பட்டு, முஸ்லிம்களினதும், நாட்டினதும் எதிரிக்கு உதவிக் கொண்டு இருக்கின்றார்கள். 
 
சகோதரர்களே, அடுத்த மதத்தவர்களின், மதம் சார்ந்த தவறுகளை கேவலமாக
விமர்சிப்பது நமது வேலை அல்ல. மேற்படி விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதுடன், மேற்சொன்ன கணக்கிலும், மேலும் இதுபோன்ற கணக்குகளிலும் நண்பர்களாக உள்ளவர்கள், அவற்றை தமது நண்பர் வட்டத்திலிருந்து நீக்குவதுடன், அடுத்தவர் மனம் புண்படும் படியான கருத்துக்களைப் பதிந்து, சமூகத்திற்கு வேட்டு வைப்பதனை தவிர்ந்து கொள்ள வேண்டும்..!

4 comments:

  1. They needed to make us angry and shout in the public. Then they can show that we are uncivilized. Recently somebody hacked a facebook account of a person who do this kind of facebook pages. Please check the below link, you will understand what they are up to. http://lankanextremist.wordpress.com/. Please pass this link to all other muslim brothers and sisters.

    ReplyDelete
  2. முஸ்லிம்களில் சிலர் மற்றவர்கள் குறைகளை பற்றியே அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள். இதனால் வெளியிடப் படும் ஒரு செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று கூட ஆராய்ந்து பார்க்காமல் மளமளவென்று தமது கருத்துக்களை மற்றவர்களை கோபமூட்டும் வகையில் பதிந்து விடுகிறார்கள். இவ்வாறு முஸ்லிம் பெயர் தாங்கியவர்கள் கருத்துக்களை பதியும் பொது அதனால் ஆத்திரமடையும் அன்னியவர்கள் முஸ்லிம்களை அழிக்க துணியலாம். எனவே எல்லாவற்றுக்கும் கமெண்ட் போட்டுக் கொண்டிராமல் ஆக்கமான கருத்துக்களை மட்டும் முன் வைத்தால் நல்லது.
    அந்நிய மதத்தவரின் வழிபாடுகலையோ அவர்களின் மதத் தலைவர்களையோ கிண்டல் செய்ய வேண்டாம் என்பது இஸ்லாம் எமக்கு சொல்லி தருகிறது. மேலும் அவர்களின் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது வழிபட்டுத் தளங்களை அழிக்க முனைவது அவர்களின் பெண்களையும் முதியவர்களையும் சிறுவர்களையும் அநீதிக்கு உட்படுத்துவது என்பன யாரையும் ஆத்திரமூட்டச் செய்யும். இதனால் உண்டாகும் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.
    எனவே அந்நிய மதத்தவர்களை ஆத்திரமூட்டும் விதமான செயட்பாடுகளை மேட்கொள்ள வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. முகம்மட் இர்பானுடைய கருத்துக்கள் யதார்த்தமாகும். மதத் தீவிரவாதம் கொண்ட ஒரு சில பௌத்தர்களை விடவும், மற்றவர்களை மதிக்கக் கூடிய நடந்த நிகழ்வுகளையிட்டு மனம் வருந்துகின்ற பெரும்பாலான பௌத்தமக்களை நாம் அறிந்திருக்கின்றோம். மட்டுமன்றி சகோதரபாசத்துடன் ஒன்றித்து வாழும் பௌத்த முஸ்லிம் கிராமங்கள் இலங்கையில் ஏராளம் இருக்கின்றன. நீர்க்குமிழி போன்று ஒருசில விசமிகளால் ஏற்படுத்தப்படுகின்ற நிகழ்வுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை இழித்துரைப்பது ஏற்புடையதல்ல. எனவே விமர்சனங்கள் வழங்குகின்ற இடங்களில் நிதானத்துடன் நாம் செயற்படுவது வரவேற்புடையதாகும்.

    ReplyDelete
  4. முஸ்லிம்களே சிந்தியுங்கள் பின்னணியில் இருந்து செயற்படும் எதிரியை இனம் கானுங்கள் குர்ஆன் ஹதீஸுக்குள் இருந்தவாறு எவ்வாறு எதிரியை பிணன்னடையச்செய்யலாம் என்று.
    சுதந்திரம் கிடைத்தது முதல்(அதற்கு முன்பும்) இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டே வந்தது அது மட்டுமல்ல வியாபாரத்தில்,கல்வியில்(நமது பொடுபோக்கும்தான்)வேளைவாயப்பில் என்று பல பக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்குவதும்,புறக்கணிப்பும் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களாகிய நாம் காலடியை மட்டும் பார்க்கும் விதத்தை விட்டு விட்டு எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையாவது சற்று நோக்க கடமைப்பட்டுள்ளோம்,அல்லாஹ் எங்களை நோக்கி சொல்கிறான் ஆட்டு மந்தைகள் போன்று நடக்காது சிந்தனையுள்ள சமூகமாக இருக்கும்படி.,இன்று ஆட்சியைப்பிடிக்க ஒரு இயக்கம் துடிக்கிறது,இன்னொரு இயக்கமோ துஆக்கள் மாத்திரம் போதும் என்கிறது சற்று சிந்தியுங்கள் எங்கள் ஊர்களில் உள்ள பள்ளிவாயில்களில் இஸலாம் நிலைநாட்டப்படும் வரை ஆட்சி என்பது எட்டாக்கனிதான்,கிலாபத் வீட்டுக்குள் அப்புறம் ஊருக்குள் அதன் பிறகு அல்லாஹ் உதவியுடன் உலகம் முழுவதும் வந்து விடும்.இன்று இஸ்லாத்தை பேச்சில் சொல்பவர்களிடம் அமல் இல்லை(நடைமுறையில் இல்லை),அமல் இருப்பவர்களிடம் அறிவு இல்லை,இவை இரண்டும் ஒன்று சேரனும். இங்கு இன்னும் ஒன்றை பதிவிட நினைக்கிறென், இன்று இருக்கும் இயக்கங்களின் பின்புலங்கள் நோக்கப்பட வேண்டும்.,குர்ஆன் ஹதீஸுக்குள் வர ஏன் தயங்குகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள் அத்துடன் மக்களை திசை திருப்புவதில் ஏன் ஈடுபடுகிறார்கள்(சஹீஹான ஹதீஸ்கள் இருக்கும் போது(உண்மையான)லஈபான (பொய்கான) ஹதீஸ்கள் மூலம் அமல் செய்ய தூண்டுவது ஏன்?யாருக்காக?எதற்காக? இவர்களிடம் உண்மை இருந்தால் கேள்வி கேற்கும் போது கோபம் வராது,ஏன் கோபப்படுகிறார்கள்?ஏன் சிலரைத்தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்?யாருக்காக இவர்கள் வேளை செய்கிறார்கள்? இவர்களின் பசுத்தோல்கள் மக்கி மண்ணாகிப்போகும் காலம் வந்து விட்டது இவர்களாக உண்மையை உள்ள படி சொல்லவில்லை என்றால் அல்லாஹ் இவர்களை கேவலப்படத்தப்போவதை யாராலும் தடுக்க முடியாது அது மட்டுமல்ல மறுமையிலும், என்னையும் உங்களையும் வழிகேட்டில் இட்டுச்சென்றதற்காக(என்னை கடந்த பத்து வருடங்கள் வரை) வேண்டி நரக வேதனை இவர்களுக்குண்டு.
    அல்லாஹ் எல்லோரையும் நல்வழிப்படுத்தனும் என்கிற துஆவுடன்
    Seyed N Deen
    Turkey

    ReplyDelete

Powered by Blogger.