Header Ads



இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது..! (பதில் கட்டுரை)

சவ்வத்

(இது முன்னைய கட்டுரை) http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_8621.html

"இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது" என்ற இந்தக் கட்டுரையை எழுதியவர் யார்?

மேற்குறிப்பிடப் பட்ட தலைப்பில் பிக்ஹுடைய விடயங்கள் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராயப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், பலத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது.

இந்தக் கட்டுரையில் இந்துத்துவ, அத்வைத வாடை அடிக்கின்றது.

'இறைவன் கருணை உள்ளவன்' என்பதற்கும், 'கருணைதான் இறைவன்' என்பதற்கும் பலத்த வேறுபாடு உள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கருணை என்பதனை இறைவனின் பண்புகளில் ஒன்றாக இஸ்லாம் சொல்கின்றது. கருணை என்கின்ற பண்பு ஒரு பொழுதுமே இறைவன் ஆக முடியாது. இந்துத்துவ, அத்வைத கருத்தை இஸ்லாத்திற்குள் திணிக்க முயற்சிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

நோன்பு கடமையாக்கப் பட்ட நோக்கம் குறித்து அல்லாஹ் அவனது திருமறையில் குறிப்பிடும் பொழுது, நோன்பின் முக்கிய நோக்கமாக 'நீங்கள் பயபக்தி - இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாக ஆகுவதற்காக, உங்கள் முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டது போல உங்கள் மீதும் கடமையாக்கப் பட்டது' என்கின்றான்.

அல்லாஹ்தான் நோன்பைக் கடமையாக்கினான் என்றால், அவன்தான் அதற்கு நேரடியாக கூலியும் தருவான் என்றால், அல்லாஹ்வின் நோக்கங்களை நாம் கற்பனை செய்ய முடியுமா, அல்லது அவனே சொல்லவேண்டுமா? அல்லாஹ் சொன்ன நோக்கத்தை மறைத்து விட்டு, கட்டுரை எழுதியவர், தான் நினைத்த விதமாக 3 நோக்கங்களை சொல்கின்றார். இவற்றை இவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்? குறைந்த பட்சம் நபிகளார் இவர் சொன்னது போல எங்காவது சொல்லியிருக்கின்றர்களா?

1. 'பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குவது' என்பது ஒரு நோக்கமாக இருக்குமேயானால், நோன்பு பணக்காரர்கள் மீது மட்டும் விதியாக்கப் பட்டருக்க வேண்டுமே. தினமும் பசியிலே வாடும் உலக ஏழைகள், சோமாலியர்கள் போன்றவர்கள், யாரின் பசிய உணர அல்லது யாரின் ஏழ்மையைப் போக்க நோன்பு நோற்பது??

2. 'தனித்திருந்து ஓதியும் தொழுதும்', தனித்திருந்து தொழுவதை விட, ஜமாத்தாக தொழுவது 27 மடங்கு நன்மையானது. சுன்னத்தான இரவுத் தொழுகை கூட ரமளானில் ஜமாத்தாக நடாத்தப்படும் பொழுது, தனித்திருந்து தொழுவது நோன்பின் நோக்கம் ஆக முடியுமா?

3. 'உணவுக் கட்டுப்பாடு....உடலை ஆரோக்கியமாக, வலுவாக வைத்திருத்தல்...' இப்படியோயான லோகாயுத நோக்கங்கள் வந்துவிட்டாலே, நோன்பின் நோக்கமே பாழடிக்கப் பட்டு விடுமே. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நோன்பு நோற்பதா, அல்லது டயட் என்று நோன்பு நோற்பதா?

மேலும் பகலில் தூங்குவதையும், இரவில் விழித்திருப்பதையும் இவர் எப்படி குறை சொல்ல முடியும்? பர்லான தொளிகைகளுக்கு பாதகமில்லாத நிலையில் ஒரு நோன்பாளி தூங்குவதை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. 'நோன்பாளியின் தூக்கமும் வணக்கமாகும்' என்ற நபிமொழியை மறுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?

மேலும், நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இரவு காலங்களில் நின்று வணங்குவார்கள் என்னும் பொழுது, இரவில் விழித்திருப்பதை குறை சொல்ல இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

இஸ்லாத்தை உள்ளபடி பின்பற்ற வேண்டுமே தவிர, அவரவர் கற்பனைக்கு ஏற்ற விதமாக புதிய மார்க்கங்களை உருவாக்க கூடாது.

'அறிவினைத் தேடும் அறிவுடியாயோனே இஸ்லாமியன்' என்று கூறிக்கொண்டே இஸ்லாமிய அறிவில்லாமல் கட்டுரை எழுதி இஸ்லாத்திற்கு முரணான, அறிவீனமான செய்திகளை பரப்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.


9 comments:

  1. நல்ல அறிவு பூர்வமான விளக்கம் ஆனால் இதைவிடவும் காரமாக வரிக்கு வரி அந்த கட்டுரைக்கி பதில் சொல்லபடவேண்டும் அந்த கட்டுரையை பார்ததில் இருந்து என் மனதில் ஒரு சஞ்சலம் இதட்கு உரியவாறு பதில் அளிக்கபட வேண்டும் என அதில் ஒரு பகுதியை தங்கள் தீர்துவைதிருக்கிறீர்கள் மிகுதி விடயங்களுக்கும் பதில் அளியுங்கள் நோன்பின் நேரம் வரையறுக்கபட வேண்டும் என்ற கருத்து உட்பட

    ReplyDelete
  2. ஜஸாகுமுல்லாஹு ஹைரா சகோதரர் Fashlin Mohammed அவர்களே.

    உங்கள் ஆர்வமூட்டல் குறித்து மகிழ்ச்சியடையும் அதே வேளை, நோன்பின் நேரத்தை துருவப் பிரதேசங்களில் வரையறுப்பது குறித்த
    மார்கத்தின் சட்ட திட்டங்கள் தொடர்பில் எனக்கு போதிய அறிவில்லாத காரணத்தால், அதனைக் குறித்து எதுவுமே எழுதவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மறுப்புக் கட்டுரைக்கு களம் தந்த யாழ்.முஸ்லிம் இணையத்தளத்திற்கும் நன்றிகள். அல்லாஹ் உங்களின் பணிகளைப் பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete
  3. ,zajyj;Jf;F xH Ntz;LNfhs; khHf;fk; rk;ge;jg;gl;l fhl;Liufis morp Muha;e;j gpd;G gpuRhpf;fTk;”

    ReplyDelete
  4. assalamualikum brother i live in finland so here no night magrib normal time is 11 pm is it so long around 23 hrs ,we are starting fasting in the mornig around 2 am sahur and finish normal iftar time 11pm but our area masjid imam get some fatuwa from makkah you can iftar 7 pm is it oky pleas can u reaply to me

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    la voix சகோதரே முதல் கட்டுரையாளர் என்ன நோக்கத்தில் எழுதினாரோ அவருக்கு நீங்கள் தெளிவை கொடுத்திரிகிரீர்கள்.ஏற்கனவே இது சம்பந்தமாக நோன்பு ஆரம்ப்பத்தில் கேட்டு இருந்தோம்,எந்த உலமாக்களும் தெளிவை தரவில்லை மார்க்கத் தீர்ப்பில் பிககு சட்டத்தை கோரினால் அதில் மத்ஹப் புகுந்து விடும் அதிலும் நாம் கவனமாக இருக்கவேண்டும் தஜ்ஜாலின் வருகைன்போது ஏற்படும் காலஇடைவெளி யில் நபி(ஸல்)அவர்கள் கூறியது போல் நாட்களை கணக்கிட்டு அமல் செய்யுங்கள் என்ற ஹதீஸின்படி செயல்பட முடியும்.தொடர்ந்து பகல் வருவது போல் தொடர்ந்து இரவு அந்த நாட்டில் வரத்தானே போகிறது.அப்போது நோன்பில்லாமல் இருக்கவா போகிறார்கள்.எனவே அந்த நாட்டை சேந்தமுஸ்லிம்கள் எடுக்க வேண்டிய முடிவு என்பது எனது கருத்து அல்லாஹ்போதுமானவன்.!!!

    ReplyDelete
  6. உங்கள் நோய்க்கி ஒரு வைதியர் இப்படி பஜ்ரில் இருந்து மஹ்ரிப் வரை உண்ணாமல் பருகாமல் ஆசைகளை அடக்கி மனைவியுடன் கூடாமல் மாததிட்கு இருக்க வேண்டும் என்று சொன்னால் உப்படித்தான் முப்திகளை நாடி பத்வா கேட்பவராக இருபீர்களா அந்த தியாகத்தை செய்ய வேண்டிய நேரத்தை குறைக்க சொல்லி??? அல்லாஹ்வின் தூதர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தன் மகனையே அறுத்தார்களே அல்லாஹ்வின் கட்டளை வந்த போது??? சக்தி அற்றோர் நோன்பு நோக்க தேவை இல்லை என்பது பொதுவான விதி இயலுமானால் நோறுங்கள் சக்தி இல்லையெனில் விட்டு விடுங்கள் அல்லாஹ்வே அவன் இபாத்துகளில் அலவில்லா காதளையும் பிடிப்பைப்பையும் குப்பையும் உண்டாக்க போதுமானவன்



    மகத்தான கூலிகளை அல்லாஹ் தானே வழங்குவதாக சொல்லும் தக்வாவை பயிட்சியின் மூலம் ஏனைய 11 மாதங்கள் தரிபாடடையவைக்கும் மாபெரும் இபாதத்தை நமது சிறமங்களைவைத்து குறைத்து பத்துவா எடுத்துகொள்ள முடியும் ஆனால் அது பேனுதலோ தக்வாவோ ஆக முடியாது நல்ல சம்பாளத்தில் வேலைகிடைகையில் சிறிய சம்பளத்தில் வாழ்வோர் யார்தான் தன் உழைப்பை பெரிதாக கருதி வந்த வாய்பை கை நழுவி விடுவர்?

    ReplyDelete
  7. ALHAMDULILLAH!

    ReplyDelete
  8. I am not agree with this article at all,eassy to tell but practically very difficult to make fasting very long times.Allah want all are eassy for his ummah.I was visited norway sweden and finland many years ago this all countries specially summer times days are so long,its mean middle summer not at all darkness coming.

    So if we make fasting summertimes almost 23 hours fasting......ok one or two days can fasting after days human feel so tired and he can´t make so long fasting.It better their country imaams to ask some fatwa for Ramadan fasting.

    Still my brother living sweden,he said during this month working and make fasting little difficults because of days are so long.Anyway allah know well and may allah accept those country all muslims fasting! Allah akbar.

    ReplyDelete
  9. They have some problem with Makkah live telecast so below link helping to watch.


    http://makkahlive.net/makkahlive.aspx

    ReplyDelete

Powered by Blogger.